குழந்தைகளும் வன்முறையும்
கராத்தே ட்ரெயினிங் என்ற பெயரில் ஒரு குழந்தை மற்றொரு குழந்தையோடு அடித்துக்கொள்வது வன்முறை இல்லையா? நேருக்கு நேர் மோதினால் தான் ப்ளேக் பெல்ட்!
குழந்தைகள் விளையாடுவதை விட்டுவிட்டு தினமும் வீட்டுபாடம் செய்ய வைப்பது வன்முறை இல்லையா?
பள்ளி நிர்வாகம் சொத்தை டீச்சர்களை அரைகுறை சம்பளத்திற்கு பிடித்து பாடம் நடத்தி குழந்தைகளின் பெற்றோர்களே சொல்லிக்கொடுக்கும் நிலைமை வன்முறை இல்லையா?
டிவி விளம்பரங்களில் வரும் உணவையே குழந்தைகளுக்கு கொடுக்க வைக்க வேண்டும் என்பது விளம்பரதாரர்களின் வன்முறை!
சில எழுத்தாளர்கள் பதிப்பகத்தாரின் புத்தகங்களையே குழந்தைகள் படிக்க வைக்க வேண்டும் என்று வன்முறை இல்லையா?
அப்பா அம்மா ஒரு தொழில் செய்தால் அதையே குழந்தைகளும் செய்ய வைக்க வேண்டும் என்பது வன்முறை இல்லையா?
சாமி, மதம், ரிலிஜன் என பிஞ்சு மனசுகளை பயித்தியம் ஆக்குவது வன்முறை இல்லையா? நாளை வருகிறது மகாவரலக்ஷ்மி விரதம்!
பக்கத்து வீட்டு குழந்தைகளை போலவே நீயும் மார்க் வாங்க வேண்டும் என்று துன்புறுத்துவது வன்முறை இல்லையா?
--
அன்புடன்
விஜயஷங்கர்
பெங்களூரு
2 comments:
apt.
I agree to what you said,Vijay.
Post a Comment