திரு என்.சொக்கன் அவர்களின் வலைப்பூவை படித்துக்கொண்டு இருந்தேன்.
எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகருக்கு சாஹித்ய அகாதமி விருது
பட்டுக்கோட்டை பிரபாகர் ஒரு மறக்க முடியாத கேரக்டர்.
நான் என் நண்பர்கள், சரவணன் மற்றும் சுந்தரவடிவேலு (திருப்பூர்) தூறல் என்ற கை எழுத்து பத்திரிக்கை நடத்திய காலத்தில், பட்டுக்கோட்டை பிரபாகர் மற்றும் சுபா கதைகள் மீண்டும் மீண்டும் படிப்போம். வர்ணனைகள் அருமையாக இருக்கும்... சில இப்போது தான் புரியும் - இந்த வயதில்... ராஜேஷ் குமாரும் எங்களை ஆக்கிரமித்து கொண்டார். சுஜாதா கதைகள் ஒரு லெவல் மேலே. பல முறை படிக்க அது.
எங்கள் வீடு அருகில் ஒருவர் லெண்டிங் லைப்ரரி வைத்திருந்தார். 25 பைசா சார்ஜ் ஒரு நாளைக்கு கொடுத்தால், ஒரு புத்தகம். ஹாயாக படிக்கலாம். மூவரும், மூன்று புத்தகங்கள் (80 பக்கம் இருக்குமா ஒரு நாவல்?) ஒரு நாளில் முடிப்போம். லீவு சமயத்தில், வீட்டில் அப்பா பனியன் தொழிலுக்கு உதவி செய்யும் சமயம் போக, வாரம் இரண்டு சினிமா படம், பிறகு லைப்ரரி மாத்திரம் கதி.. அங்கேயும் நாவல்கள் தான். அதுவும் பாட்டி வீட்டிற்கு (ஒண்டிப்புதூர், கோவை) சென்றால், நான்கைந்து புக் படித்து விடுவேன். கண்ணாடி போட்டது அப்படி தான்.
ஆங்கில மீடியமில் படித்தாலும், தமிழ் மீது ஒரு லவ். மூன்றாம் வகுப்பு வரை ஹிந்திதான் செகண்ட் லேங்குவேஜ். ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் என்ற சமயம், அப்பா என்னை கட்டாயம் தமிழ் படிக்க வைத்தார். லீவில் விஜயா மிஸ் பாடம் எடுத்தார். டபுள் பிரமோசன் (3 -> 5 ) வேண்டாம் என்ற சமயம் அது. ஆறாம் வகுப்பு முதல், பண்ணிரெண்டாம் வகுப்பு வரை, தொடர்ந்து வருடம் ஒரு முறையாவது தமிழில் நாடகம் எழுதி இயக்கி நடிக்கும் பாக்கியம். எமர்றேன்சியா மிஸ் (பயலாஜி) அமெரிக்க சென்று திரும்பிய பின் ஒரு முறை பார்த்த பொது, நான் போட்ட "பணத்தின் லீலைகள்" என்ற டிராமா பற்றி பேசினார்.... 1999, பதினைந்து வருடத்திற்கு பிறகு. அதில் குடிகாரனாக நடித்த கோபாலகிருஷ்ணன் இன்று கோவையில் பிரபல லாயர்.
1986 பி.எஸ்.ஜி. சென்ற பிறகு (நல்ல வேலை கிண்டிக்கு செல்ல வில்லை, சீட்டு கிடைத்தும்) ஹாஸ்டல் வாழ்க்கை அனுபவம் இல்லாத மாணவப்பருவம். தமிழ் மீது சிறிது தான் ஆக்கம் செலுத்த முனைந்தது. ஸ்கிட்சுடன் நின்றது. தமிழ் டமில் ஆனது.
தமிழ் மன்றம் தான் சில சமயம் தமிழ் மீது உள்ள டச்சை தொடர வைத்தது. 1987 சுஜாதா வந்து பேசினார். பர்ஸ்ட் க்ளாஸ் ட்ரெயின் டிக்கட் மற்றும் ஆயிரம் ருபாய் நன்கொடை. மறக்க முடியாத நாள்...
ஹைதராபாத் சென்ற பிறகு, செகந்தராபாத் ரயில்வே ஸ்டேசன் அருகில் தமிழ் புக் வாங்குவேன். குமுதம் மற்றும் ஆனந்த விகடன். திருப்பூரில் அப்பா விகடன் மட்டும் தான் அல்லவ் செய்தார். குமுதம் சினிமா குப்பை என்பார். என் அப்பாவும் கோத்தகிரியில் நாடகம் போட்டவர் (வில்லன்) நடிகை ஜெயபாரதி வைத்து இயக்கினார். அங்கு மாரியம்மன் திருவிழா இன்றும் ஜோராக நடக்கிறது !
அமெரிக்காவிலும் நியூ யார்க் பக்கம், அல்லது நியூ ஜெர்சியில் தமிழ் புக் கிடைக்கும். சில முறை திவான் அவனுவில் (சிகாகோ) வாங்கியுள்ளேன். சிலிகான் வேலியில் கிடைக்கவில்லை. தேடவில்லை.
ஒரு நான்கைந்து வருடங்கள் தமிழ் படிப்பது நின்றது. 1999 மீண்டும் ஆரம்பம் ஆனது. ஊர் சென்று வருபவர்கள் யாரவது கொடுப்பார்கள். நாவல்கள் சில வைத்திருந்தேன்.
இப்போது புது வருட சபதமாக, தமிழ் வார மலர்கள் வாங்குவதில்லை.
No comments:
Post a Comment