Sunday, December 07, 2014

சனிப்பெயர்ச்சி பலன்கள் 2014 (கே.பி.வித்யாதரன்)

கன்னி:

கலகலப்பான கன்னி ராசிக் காரர்களே... 16.12.14 முதல் 17.12.17 வரை சனிபகவான் 3ம் வீட்டில் வலுவாக அமர்கிறார்.
பிரிந்திருந்த கணவன்மனைவி ஒன்றுசேர்வார்கள். தோல்வி முகம் மாறும். குடும்பத்தில், உங்கள் ஆலோசனைகளை எல்லோரும் ஏற்பர். மருந்து, மாத்திரையிலிருந்து விடுபடுவீர்கள். மகளுக்கு, நல்ல வரன் அமையும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். பழைய வழக்கில் வெற்றி பெறுவீர்கள்.
சிலர், கடன்பட்டாவது வீடு, மனை வாங்குவீர்கள். மாதாமாதம் லோனுக்காக பெரிய தொகை கட்ட வேண்டி வருகிறதே என்றெல்லாம் கலங்கவேண்டாம். அதற்கான வழி வகைகள் பிறக்கும். வீண் பழிகள் விலகும். உங்களைத் தவறாகப் புரிந்துகொண்டு விலகிச் சென்ற பழைய உறவினர், நண்பர்கள் வலிய வந்து உறவாடுவர்.
சனி பகவான் சஞ்சார பலன்கள்:
16.12.14 முதல் 24.1.15 வரை; 30.4.15 முதல் 13.6.15 வரை; 6.9.15 முதல் 17.10.15 வரை உங்கள் சுகசப்தமாதிபதி குருவின் சாரத்தில் விசாகம் 4ம் பாதம், 3ம் வீட்டில் சனி செல்வதால் தைரியம் கூடும்.அரசு காரியங்கள் விரைந்து முடியும். இளைய சகோதர வகையில் மன வருத்தம் நீங்கும். வீடு, மனை வாங்கு வது, விற்பது லாபகரமாக முடியும்.
14.6.15 முதல் 5.9.15 வரை உங்கள் ராசிக்கு பாதச் சனியாக 2ம் வீடான துலாம் ராசி, விசாகம் 3ம் பாதத்தில் சனி செல்வதால், பேச்சால் பிரச்னைகள் வரும். பணம் கொடுக்கல், வாங்கல் விஷயத்தில் எச்சரிக்கையாக இருங்கள்.
30.4.15 முதல் 1.8.15 வரை குரு பகவானின் விசாகம் நட்சத்திரத்திலேயே சனி வக்கரித்துச் செல்வதால் சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். பாதியில் நின்ற வேலைகள் விரைந்து முடியும். எனினும் பழைய கடனை நினைத்துக் குழம்புவீர்கள்.
உங்கள் பூர்வ புண்யாதிபதியும் சஷ்டியாதிபதியுமான சனி, சுயநட்சத் திரமான அனுஷத்தில் 25.1.15 முதல் 29.4.15 வரை; 18.10.15 முதல் 15.11.16 வரை செல்கிறார். இக்கால கட்டத்தில் பூர்விகச் சொத்து கிடைக்கும். மக்களால் நலம் உண்டாகும். மகப்பேறு பாக்கியம் பெறுவீர்கள். விளையாட்டு விநோதங்களில் ஈடுபடுபவர்கள் பாதுகாப்புடன் செயல்படவும். 15.3.15 முதல் 29.4.15 வரை; 19.5.16 முதல் 12.8.16 வரை உள்ள காலகட்டங்களில் சனி அனுஷத்தில் வக்ரமாவதால், சுற்றி இருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும். பண வரவு இருந்தாலும் செலவு களும் இருக்கும். மகளின் திருமண விஷயத்தில் அவசரம் வேண்டாம். 16.11.16 முதல் 17.12.17 வரை உங்கள் ராசிநாதனும் ஜீவனாதிபதியுமான புதனின் கேட்டை நட்சத்திரத்தில் சனி செல்வதால் பணப்புழக்கம் அதிகமாகும். வீடு, வாகனம் அமையும். 8.4.17 முதல் 5.8.17 வரை புதனின் கேட்டை நட்சத்திரத்திலேயே சனி வக்ரமாகி செல்வதால், சளி, இறுமல், கழுத்து வலி வந்துபோகும்.
சனி 5ம் வீட்டைப் பார்ப்பதால் பூர்வீகச் சொத்து வழக்கு சாதகமாகும். உயர்கல்வி, பணியின் நிமித்தம் பிள்ளைகளைப் பிரிய நேரிடும். சனி 9ம் வீட்டைப் பார்ப்பதால் செலவுகள் அதிகமாகும். தந்தையின் உடல்நிலை பாதிக்கும். சனி 12ம் வீட்டைப் பார்ப்பதால் திடீர் பயணங்கள், கனவுத் தொல்லை, வந்துபோகும்.
வியாபாரம் சூடுபிடிக்கும். சந்தை நிலவரம், வாடிக்கையாளர்களின் ரசனைகளுக்கு ஏற்ப புது முதலீடுகள் செய்வீர்கள். உணவு, எரிபொருள், வாகனம், கட்டுமானப் பொருட்களால் லாபம் அடைவீர்கள். உத்தியோகத்தில், உங்களுக்கு எதிராக செயல்பட்ட அதிகாரி வேறு இடத்துக்கு மாற்றப் படுவார். பதவி உயர்வுக்காக உங்கள் பெயர் பரிந்துரைக்கப்படும்.
கன்னிப் பெண்களுக்கு ஆடை, ஆபரணம் சேரும். உங்களுடைய ஆசைகளை பெற்றோர் நிறைவேற்றி வைப்பார்கள். திருமணம் விரைந்து முடியும். மாணவர்களுக்கு நினைவாற்றல் கூடும். விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வெல்வீர்கள்.
மொத்தத்தில் இந்த சனிப்பெயர்ச்சி, உங்களை அனைத்திலும் வெற்றி பெற வைப்பதுடன், பணம் பதவியை அள்ளித் தருவதாக அமையும்.
பரிகாரம்: திருவோணம் மற்றும் ஏகாதசி தினங்களில், விருத்தாசலம் அருகில் ஸ்ரீமுஷ்ணம் தலத்தில் அருளும் பூவராகவப் பெருமாளை வணங்கி வாருங்கள். காது கேளாதவர்களுக்கு உதவுங்கள்.


துலாம்:

எல்லோருக்கும் நல்லவர்களாகத் திகழும் துலாம் ராசிக்காரர்களே,
16.12.14 முதல் 17.12.17 வரை சனிபகவான், உங்கள் ராசியை விட்டு விலகி பாதச் சனியாக அமர்ந்து பலன் தரப் போகிறார்.
உங்களின் பிரபல யோகாதிபதியான சனிபகவான் 2ம் வீட்டுக்கு வந்து அமர்வதால், இனி உடல் ஆரோக்கியம் மேம்படும். பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும்.பிரிந்திருந்த கணவன்மனைவி ஒன்று சேருவார்கள்.
என்றாலும், பாதச்சனியாக வருவதால், வெளி வட்டாரத்தில் யாரையும் விமர்சிக்க வேண்டாம். எதிலும் உணர்ச்சிவசப்படாமல், அறிவுபூர்வமான அணுகுவது நல்லது. எவருக்காகவும் சாட்சிக் கையெழுத்து போட வேண்டாம். அரசு காரியங்கள் தாமதமாகி முடியும்.
சனி பகவான் சஞ்சார பலன்கள்
16.12.14 முதல் 24.1.15 வரை; 30.4.15 முதல் 13.6.15 வரை மற்றும் 6.9.15 முதல் 17.10.15 வரை உங்கள் திருதியாதிபதிசஷ்டமாதிபதி குருவின் சாரத்தில் விசாகம் 4ம் பாதம் 2ம் வீட்டில் சனி செல்வதால், எதிர்பாராத சில காரியங்கள் முடிவடையும். பணப்பற்றாக்குறையை சமாளிப்பீர்கள்.
14.6.15 முதல் 5.9.15 வரை உங்கள் ராசிக்குள் ஜென்மச் சனியாக துலாம் ராசி விசாகம் நட்சத்திரம் 3ம் பாதத்தில் சனி செல்வதால், இந்தக் காலகட்டத்தில் விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ஆரோக்கியம் பாதிக்கக்கூடும்.
30.4.15 முதல் 1.8.15 வரை குருபகவானின் விசாகம் நட்சத்திரத்திலேயே சனி வக்கரித்து செல்வதால், இழுபறியாக இருந்த வேலைகள் முடிவடையும். உங்கள் யோகாதிபதியான சனிபகவான் தன் சுய நட்சத்திரமான அனுஷம் நட்சத்திரத்தில் 25.01.15 முதல் 29.04.15 வரை மற்றும் 18.10.15 முதல் 15.11.16 வரை செல்வதால், குடும்ப வருமானம் உயரும். புது வேலை கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டு. 15.3.15 முதல் 29.4.15 வரை மற்றும் 19.5.16 முதல் 12.8.16 வரை உள்ள காலகட்டங்களில் சனிபகவான் அனுஷம் நட்சத்திரத்திலேயே வக்ரமாவதால், நம்பிக்கையின்மை, பிள்ளைகளின் வருங்காலம் குறித்த கவலைகள் வந்து நீங்கும். 16.11.16 முதல் 17.12.17 வரை உங்கள் பாக்யாதிபதியும், விரயாதிபதியுமான புதனின் கேட்டை நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால், குழந்தை பாக்யம் கிடைக்கும். சிலர் வீடு கட்டத் தொடங்குவீர்கள். பணம் வரும். 8.4.17 முதல் 5.8.17 வரை புதனின் கேட்டை நட்சத்திரத்திலேயே சனி வக்ரமாகிச் செல்வதால், மனைவிவழி உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள்.
சனிபகவான் 4ம் வீட்டைப் பார்ப்பதால், அடுக்கடுக்கான வேலைகளால் அவதிக்குள்ளாவீர்கள். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் செய்யவேண்டி வரலாம். 8ம் வீட்டைப் பார்ப்பதால், வீண் அலைச்சல், சிறுசிறு விபத்துகள் வந்து நீங்கும். லாப வீட்டைப் பார்ப்பதால், திடீர் செல்வம், செல்வாக்கு கூடும். மூத்த சகோதர வகையில் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டாகும்.
வியாபாரத்தில், கணிசமான லாபம் கிடைக்கும். புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். கடையை விரிவுபடுத்தவோ, புதிய இடத்துக்கு மாற்றவோ செய்வீர்கள். ஸ்டேஷனரி, ஏற்றுமதிஇறக்குமதி வகைகளால் ஆதாயமடைவீர்கள். உத்தியோகத்தில், உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பா். அதிக சம்பளத்துடன் சலுகைகளும் கிட்டும்.
கன்னிப்பெண்களே! பாதச் சனி தொடர்வதால், எல்லோரையும் நல்லவர்கள் என்று நினைத்து ஏமாற வேண்டாம். திருமணம் நிச்சயமாகும். உயர்கல்வியில் போராடி வெற்றி பெறுவீர்கள். மாணவர்கள், மொழி அறிவை வளர்த்துக்கொள்வார்கள். பேருந்து பயணம், விளையாட்டில் கவனம் தேவை.
மொத்தத்தில் இந்த சனிப் பெயர்ச்சி, முடங்கிக் கிடந்த உங்களை முடுக்கிவிடுவதுடன் செல்வம் செல்வாக்கையும் மகிழ்ச்சியையும் பெற்றுத் தருவதாக அமையும்.
பரிகாரம்: கும்பகோணம் திருபுவனத்தில் அருளும் கம்பகரேஸ்வரரையும் சரபேஸ்வரரையும் அஷ்டமி திதி அல்லது சனிக்கிழமைகளில் தரிசித்து வாருங்கள். அநாதைக் குழந்தைகளின் கல்விக்கு உதவுங்கள்.

தனுசு:

கூடி வாழ ஆசைப்படும் தனுசு ராசிக்காரர்களே, 16.12.14 முதல் 17.12.17 வரையிலான காலம், விரயச் சனியாகவும், ஏழரைச் சனியின் தொடக்கமாகவும் அமைகிறது. எதிலும் முன்னெச்சரிக்கை தேவை.
சனி உங்களுக்கு தனாதிபதியாகவும், தைரிய ஸ்தானாதிபதியாகவும் இருப்பதால், ஏழரைச் சனியால் ஏற்படும் கெடுபலன்கள் குறையும். ராசிக்கு 12ல் சனி மறைவதால், உங்கள் அடிப்படை நடத்தையை மாற்றிக் கொள்ளாதீர்கள். இழுபறியான வேலைகள் விரைந்து முடியும். வீண் செலவுகள் வேண்டாம்.
இதுவரை உங்கள் ராசி மீது வீழ்ந்த சனியின் பார்வை இனி விலகுவதால் உங்கள் பேச்சில் முதிர்ச்சி வெளிப்படும். கணவன்மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும். ஒரு சொத்தை விற்று பழைய பிரச்னைகள், சிக்கல்களை தீர்ப்பீர்கள். அரசாங்க விஷயங்கள் சற்றுத் தாமதமாகி முடியும். விலை உயர்ந்த ஆடை, ஆபரணம் வாங்கு வீர்கள். என்றாலும், அவ்வப்போது வீண் அவநம்பிக்கை, எதிர்காலம் பற்றிய பயம் வந்துபோகும். எவருக்கும் ஜாமீன் கொடுக்க வேண்டாம். முக்கிய கோப்புகளைக் கையாளும்போது அலட்சியம் வேண்டாம்.
சனி பகவான் சஞ்சார பலன்கள்:
16.12.14 முதல் 24.01.15 வரை; 30.4.15 முதல் 13.6.15 வரை; 6.9.15 முதல் 17.10.15 வரை... உங்கள் ராசி நாதன் சுகாதிபதி குருவின் சாரத்தில் விசாகம் 4ம் பாதம், விருச்சிக ராசி 12ம் வீட்டில் சனி செல்வதால், குடும்பத்தில் நிம்மதி உண்டு. தடைப்பட்டிருந்த வீடு கட்டும் பணி மீண்டும் துவங்கும்.14.6.15 முதல் 5.9.15 வரை உங்கள் ராசிக்கு 11ம் வீடான துலாம் ராசி, விசாகம் 3ம் பாதத்தில் சனி செல்வதால், நினைத்த காரியம் நிறைவேறும். அரசால் அனுகூலம் உண்டு. 30.4.15 முதல் 1.8.15 வரை குருவின் விசாகம் நட்சத்திரத்திலேயே சனி வக்கரித்து செல்வதால், பழைய பிரச்னைகள் தலைதூக்கும். மற்றவர்கள் விஷயத் தில் தலையிடவேண்டாம்.
உங்கள் தனசேவகாதிபதியான சனி, சுய நட்சத்திரமான அனுஷத்தில் 25.1.15 முதல் 29.4.15 வரை; 18.10.15 முதல் 15.11.16 வரை செல்வதால், சவால்களில் வெற்றி பெறுவீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பலப்படும்.
அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். 15.3.15 முதல் 29.4.15 வரை; 19.5.16 முதல் 12.8.16 வரை, சனி அனுஷத்திலேயே வக்ரமாவதால் அவ்வப்போது பலவீனமாக இருப்பதாக நினைப்பீர்கள். சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும். 16.11.16 முதல் 17.12.17 வரை உங்கள் சப்தமஜீவனாதிபதியான புதனின் கேட்டை நட்சத்திரத்தில் சனி செல்வதால் கணவன்மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். உத்தியோகத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு உண்டு. புது வேலை கிடைக்கும். 8.4.17 முதல் 5.8.17 வரை புதனின் கேட்டை நட்சத்திரத்திலேயே சனி வக்ரமாகி செல்வதால், பொருள் இழப்பு, வீண் டென்ஷன், நரம்புக் கோளாறு வந்து நீங்கும். உறவினர், நண்பர்களுடன் விரிசல்கள் வரக்கூடும்.
சனி 2ம் வீட்டைப் பார்ப்பதால் பணவரவு இருந்தாலும் பற்றாக் குறையும் ஏற்படும். பேச்சில் கடுமை வேண்டாம். சனி 6ம் வீட்டைப் பார்ப்பதால் வழக்கில் தீர்ப்பு தாமதமாகும். மறைமுக எதிர்ப்புகள் வரக்கூடும். சனி 9ம் வீட்டைப் பார்ப் பதால், தந்தைக்கு நெஞ்சு எரிச்சல், ரத்த அழுத்தம், வந்து நீங்கும்.
வியாபாரத்தில் சில சூட்சுமங் களையும், ரகசியங்களையும் தெரிந்துகொண்டு அதற்கேற்ப லாபம் ஈட்டுவீர்கள். மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். மூலிகை, செங்கல் சூளை, லாட்ஜ், வாகன உதிரிபாகங்களால் ஆதாயமடைவீர்கள்.
உத்தியோகத்தில் சவால்களைச் சந்திக்க நேரிடும். என்றாலும் பெரிய பொறுப்புகள் கிட்டும். சம்பளம் உயரும். வேறு சில நல்ல வாய்ப்புகளும் கூடி வரும். கன்னிப்பெண்களுக்கு, கல்யாணப் பேச்சுவார்த்தை சாதகமா கும். மாணவர்கள், போட்டித் தேர்வு களில் போராடி வெற்றி பெறுவார்கள்.
மொத்தத்தில் இந்த சனிப்பெயர்ச்சி, ஓரளவு நன்மையையும், பணவரவை யும், பிரபலங்களின் நட்பையும் பெற்றுத் தருவதாக அமையும்.
பரிகாரம்: திருவாதிரை நட்சத்திர நாளில் சிதம்பரம் சென்று ஸ்ரீநடராஜரை நெய் தீபமேற்றி வழிபடுங்கள். புற்றுநோயால் அவதிப்படும் ஏழைகளின் மருத்துவத்துக்கு உதவி செய்யுங்கள்.

மீனம்:

எதிலும் மாற்றத்தை விரும்பும் மீன ராசிக்காரர்களே,16.12.14 முதல் 17.12.17 வரை, 9ம் வீட்டில் சனி பகவான் அமர்கிறார். நீங்கள் இனி வெளிச்சத்திற்கு வருவீர்கள்.
உற்சாகமாகச் செயல்படுவீர்கள். எந்த விஷயத்திலும் சுயமாக சிந்தித்து முடிவெடுங்கள். நிம்மதி யும், தன்னம்பிக்கையும் உண்டு. குடும்பத்தினர் உங்கள் பேச்சுக்கு மதிப்பளிப்பார்கள். கணவன் மனைவிக்குள் கசப்பு உணர்வுகள் நீங்கும். அடகிலிருந்த நகை, வீட்டு பத்திரங்களை மீட்பீர்கள். பழைய பிரச்னைகள், சிக்கல்களுக்கு தீர்வு காண்பீர்கள். மகளின் திருமணத்தை சிறப்பாக நடத்துவீர்கள். மகனுக்கு அயல்நாடு தொடர்புடைய நிறுவனத் தில் வேலை கிடைக்கும். அதிக வட்டிக் கடனை குறைந்த வட்டிக்கு பணம் வாங்கி பைசல் செய்வீர்கள். வீடு இடம் வாங்கும் ஆசை நிறைவேறும்.
பெரிய நோய் இருப்பதைப் போன்ற பிரமையிலிருந்து விடுபடுவீர் கள். வழக்கு சாதகமாகும். தந்தை யின் உடல்நிலை சற்று பாதிக்கப்படும்.
பிதுர்வழிச் சொத்துப் பிரச்னை விஸ்வரூபம் எடுக்கும். பணம் வந்தாலும் செலவுகளும் துரத்தும்.
சனி பகவான் சஞ்சார பலன்கள்
16.12.14 முதல் 24.1.15 வரை; 30.4.15 முதல் 13.6.15 வரை; 6.9.15 முதல் 17.10.15 வரை, உங்கள் ராசி நாதனும் ஜீவனாதிபதியுமான குருவின் சாரத்தில் விசாகம் 4ம் பாதத்தில் 9ம் வீட்டில் சனி செல்வ தால், தடைப்பட்ட வேலைகள் விரைந்து முடியும். நாடாளுபவர்கள், தொழிலதிபர் களின் நட்பு கிடைக்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு வாரிசு உருவாகும். புது வீடு கட்டத் தொடங்குவீர்கள்.அரசால் அனுகூலம் உண்டு. 14.6.15 முதல் 5.9.15 வரை, உங்கள் ராசிக்கு
அஷ்டமத்துச் சனியாக 8ம் வீடான துலாம் ராசி, விசாகம் 3ம் பாதத்தில் சனி செல்வதால், வீண் பிரச்னைகள், காரியத் தடைகள், பண இழப்புகள், ஏமாற்றங்கள் ஏற்படலாம். வழக்கில் தீர்ப்பு தள்ளிப்போகும். 30.4.15 முதல் 1.8.15 வரை குருவின் விசாகம் நட்சத்திரத்திலேயே சனி வக்கரித்து செல்வதால் புதிய திட்டங்கள் நிறைவேறும். உங்கள் லாபாதிபதியும் விரயாதிபதியுமான சனிபகவான் சுய நட்சத்திரமான அனுஷத்தில் 25.1.15 முதல் 29.4.15 வரை; 18.10.15 முதல் 15.11.16 வரை செல்வதால், திடீர் யோகம், பண வரவு உண்டாகும். புது வேலை கிடைக்கும். புதிய பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.
15.3.15 முதல் 29.4.15 வரை; 19.5.16 முதல் 12.8.16 வரை, சனி அனுஷத்திலேயே வக்ரமாவதால், உற்சாகம் கூடும். சிக்கனம் தேவை. 16.11.16 முதல் 17.12.17 வரை உங்கள் சுகசப்தமாதிபதியான புதனின் கேட்டை நட்சத்திரத்தில் சனி செல்வ தால் மனைவிக்கு வேலை கிடைக்கும். தாயாரின் உடல் நிலை சீராகும். தாய் சொத்து கைக்கு வரும்.
8.4.17 முதல் 5.8.17 வரை புதனின் கேட்டை நட்சத்திரத்திலேயே சனி வக்ரமாகி செல்வதால், கணவன் மனைவிக்குள் விவாதம் எழும். திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு கூடி வரும். மனைவியின் ஆரோக்கியத் தில் கவனம் தேவை.
சனி 3ம் வீட்டைப் பார்ப்பதால் விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். அரசு விஷயம் சாதகமாகும். சனி 6ம் வீட்டைப் பார்ப்பதால் மறைமுக எதிரிகளாலும் ஆதாயம் அடைவீர்கள். சனி லாப வீட்டைப் பார்ப்பதால் மதிப்பு கூடும். பணம் வரும் என்றா லும் செலவுகளும் இருக்கும்.
வியாபாரத்தில் புது யுக்திகளைக் கையாளுவீர்கள். கடையை விரிவு படுத்துவீர்கள். கான்ட்ராக்ட், கமிஷன், புரோக்கரேஜ் மூலம் லாபம் அடை வீர்கள். உத்தியோகத்தில், வேலை குறையும். அதிக சம்பளத்துடன் வேறு வாய்ப்புகளும் வரும். பணி சம்பந்தமாக அயல்நாடு சென்று வருவீர்கள். கன்னிப்பெண்களுக்கு கல்வி விஷயங்களில் சாதகமான சூழல் நிலவும். கல்யாணம் கூடிவரும். புது வேலை கிடைக்கும். மாணவர்கள், உயர்கல்வியில் வெற்றி பெறுவார்கள். விரும்பிய கோர்ஸில் சேருவார்கள்.
மொத்தத்தில் இந்த சனிப் பெயர்ச்சி உங்களை விஸ்வரூபம் எடுக்க வைப்பதுடன், அடுத்தடுத்து வெற்றி களை பெற வைப்பதாக அமையும்.
பரிகாரம்: சஷ்டி திதிநாட்களில் குன்றக்குடி சென்று, அங்கு கோயில் கொண்டிருக்கும் முருகப்பெருமானை வழிபட்டு வாருங்கள். துப்புரவுப் பணியாளருக்கு உதவுங்கள்.

நன்றி: சக்தி விகடன்