Tuesday, November 04, 2014

சனிப்பெயர்ச்சி பலன்கள்

சனிப்பெயர்ச்சி பலன்கள்
கன்னி:  உங்கள் ராசிக்கு 5, 6-ஆம் இடங்களுக்குரிய சனி 3-ஆமிடத்தில் உலவுகிறார். ஏழரைச் சனி முற்றிலுமாக விலகிவிட்டது.
இனி வெற்றி மேல் வெற்றிதான். முயற்சிகள் யாவும் இனிது நிறைவேறும். எதிர்ப்புக்கள் விலகும். மன உற்சாகம்
பெருகும். மனத்தில் துணிவும் தன்ன்ம்பிக்கையும் கூடும். வேலையாட்கள் உங்களுக்கு நல்லாதரவு தருவார்கள். போட்டிப்
பந்தயங்களில் வெற்றி கிட்டும். தகவல் தொடர்புத் துரைகளைச் சேர்ந்தவர்கள் சுபிட்சம் காண்பார்கள். விளையாட்டு
விநோதங்களில் ஈடுபாடு உள்ளவர்களுக்குப் பாராட்டுகளும் பரிசுகளும் கிடைக்கும்.
ஸ்பெகுலேஷன் துறைகள் லாபம் தரும். உடன்பிறந்தவர்களால் நல்லதும் அல்லாததும் கலந்தவாறு பலன்கள் ஏற்படும்.
மார்பு, காது சம்பந்தமான உபாதைகள் ஏற்பட்டு விலகும். மகளுக்கு சுபச் செலவுகள் செய்ய வேண்டிவரும். தான, தர்ம
காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். எதிர்பாராத செலவுகளும் அவ்வப்போது ஏற்படும். சிக்கனத்தைக் கடைப்பிடிப்பது
நல்லது. இடமாற்றமும் நிலைமாற்றமும் ஏற்படும். வெளிநாடு செல்ல வாய்ப்புக் கூடிவரும். குடும்ப நலம் சீராகும்.
பேச்சில் திறமை வெளிப்படும்.
ஆயுள், ஆரோக்கியம் சிறப்பாக இருந்துவரும். தொழில் முன்னேற்றத்திற்கான முயற்சிகள் கைகூடும். நண்பர்கள்,
உறவினர்களால் செலவுகள் ஏற்படும். புதிய சொத்துக்கள் வாங்க வழிபிறக்கும். என்றாலும் ஆவணங்கள் சரியாக
உள்ளதா என்பதை சரிபார்க்கவும். இரும்பு, எஃகு, எண்ணெய் வகையறாக்களால் ஆதாயம் கிடைக்கும்.
தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் அனுகூலமான போக்கு தென்படும். பூர்விகச் சொத்தில் உங்கள் பங்கு
இப்போது கிடைக்கும். பழைய நண்பர்களது தொடர்பும் அதனால் நலமும் உண்டாகும்.
மொத்தத்தில் இந்தச் சனிப்பெயர்ச்சிக்காலத்தில் விசேடமான நன்மைகளை நீங்கள் பெறுவீர்கள். முயற்சி வீண்போகாது.

துலாம்:  உங்கள் ஜன்ம ராசியில் உலவிக் கொண்டிருந்த சனி 2-ஆமிடத்துக்கு இடம் மாறி இருக்கிறார். ஏழரைச் சனியின்காலத்தில்  பாதச் சனியின் காலம் ஆகும் இது. கோசாரப்படி இது விசேடமாகாது என்றாலும் சனியானவர் உங்கள் ராசிக்கு 4, 5-ஆம் இடங்களுக்கு அதிபதியாவதால் யோக காரகர் ஆவார். அவர் 2-ஆமிடத்தில் சஞ்சரிப்பதால் நலமே புரிவார்.
உடல் நலம் சீராகும். முக்கியமான எண்ணங்கள் இப்போது நிறைவேறும். பொருளாதார நிலையில் வளர்ச்சி காண வழிபிறக்கும். சொத்துக்கள் சேரும். சொத்துக்களால் ஆதாயமும் கிடைக்கும். மக்கள் நலம் மகிழ்ச்சி தரும். மக்களால் பண வரவும் உண்டாகும். குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழும்.
நண்பர்கள், உறவினர்களால் நலம் உண்டாகும். செய்து வரும் தொழிலில் சீரான வளர்ச்சியைக் காணலாம். பல வழிகளில் ஆதாயம் கிடைக்கும். தாயாராலும் தாய் வழி உறவினர்களாலும் அனுகூலம் ஏற்படும். பூர்விகச் சொத்துக்கள் சம்பந்தமான பிரச்னைகள் விலகும். பழைய நண்பர்களின் சந்திப்பு நிகழும். அதனால் நலமும் உண்டாகும். சனி பகை வீட்டில் உலவுவதால் எதிரிகள் இருப்பார்கள் என்றாலும் கட்டுக்குள் அடங்கி இருப்பார்கள். அவர்களால் அதிகம் தொல்லைகள் இராது.
வாழ்க்கைத்துணைவராலும் கூட்டாளிகளாலும் சங்கடம் உண்டாகும். பயணத்தின்போது எச்சரிக்கை தேவை. தந்தை நலம்  பாதிக்கும். தந்தைக்கும் மக்களுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும். இளைய சகோதர, சகோதரிகளால் செலவுகள் ஏற்படும். மூத்த சகோதர, சகோதரிகளால் ஆதாயம் கிடைக்கும்.
புதிய முயற்சிகள் கைகூடும். ஏழரைச் சனியின் கடைசிக்காலமிது என்பதாலும் சனி யோகாதிபதி என்பதாலும் 13-7-2015 வரை குரு சனியைப் பார்ப்பதாலும், அதன்பிறகு குரு 11-ஆமிடம் மாறுவதாலும் செல்வ நிலையில் விசேடமான வளர்ச்சியைக் காண்பீர்கள். முகப்பொலிவு கூடும். நல்லவர்கள், சமுதாயத்தில் உயர்ந்த அந்தஸ்தில் உள்ளவர்கள் ஆகியோரால் நலம் பெறுவீர்கள். நீண்ட நாளைய எண்ணங்கள் இந்தச் சனிப் பெயர்ச்சிக் காலத்தில் ஈடேறும்.
பொதுவில் இந்தச் சனிப் பெயர்ச்சிக் காலம் பொருளாதார நிலையில் உயர்வை ஏற்படுத்தும் எனச் சொல்லலாம்.

தனுசு:  உங்கள் ராசிக்கு 2, 3-ஆம் இடங்களுக்குரிய சனி 12-ஆமிடம் மாறியிருக்கிறார். ஏழரைச் சனியின் ஆரம்ப காலமிது.
விரயச் சனி என்பதால் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். விரும்பத்தகாத இடமாற்றமும் நிலைமாற்றமும் உண்டாகும்.
தொழில் ரீதியாக வெளிநாடு செல்ல சிலருக்கு வாய்ப்புக் கூடிவரும். வீடு மாற்றம் உண்டாகும். குடும்பத்தாரால்  பிரச்னைகள் சூழும். சேமிப்பு குறையும். ஏற்கெனவே சேமித்து வைத்திருந்த பணமும் செலவாகிவிடும். சிக்கன நடவடிக்கை அவசியம் தேவை. கொடுக்கல்-வாங்கல் இனங்களில் விழிப்புடன் இருப்பது நல்லது. பிறரால் ஏமாற்றப்பட நேரலாம். இளைய சகோதர, சகோதரிகளின் நலம் பாதிக்கும்.
12-ஆமிடம சயன சுக ஸ்தானமாதலால் தூக்கம் கெடும். தூக்கத்தில் கெட்ட கனவுகள் வரும். கெட்டவர்களின் தொடர்பும் அதனால் பண இழப்பும் உண்டாகும்.
கண் மற்றும் கால் சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். கடுமையாக  முயற்சி எடுத்தாலும் காரியங்கள் தாமதமாகவே முடியும். எளிதில் எதையும் நிறைவேற்றிவிட இயலாது. வீண் சண்டை, சச்சரவுகளைத் தவிர்ப்பது நல்லது. மறைமுக எதிரிகள் இருப்பார்கள். தர்ம சிந்தனை குறையும். மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் கூடும்.
மக்களால் மன அமைதி குறையும். ஸ்பெகுலேஷன் துறைகளில் ஈடுபடலாகாது. வாழ்க்கைத்துணை நலனுக்காகச் செலவு செய்ய வேண்டிவரும். உடன்பணிபுரிபவர்களாலும், தொழில் கூட்டாளிகளாலும் சங்கடம் ஏற்படும்.
போட்டியாளர்களும் பொறாமைக்காரர்களும் உங்களுக்குத் தொல்லை கொடுப்பார்கள். சொந்தத் தொழிலில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. வேலையாட்களால் தொல்லைகள் சூழும். நல்ல வேலையாட்கள் கிடைப்பதும் அரிதாகும். தொழிலாளர்கள், விவசாயிகள், பண்ணை வைத்து நடத்துபவர்கள் ஆகியோருக்கெல்லாம் முன்னேற்றம் தடைப்படும். எதிலும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து ஈடுபடவும். ஜாதக பலம் வலுத்திருக்குமானால் விரயச் சனியின் பாதிப்பு குறையும்.
பொதுவில் இந்தச் சனிப்பெயர்ச்சிக் காலம் வீண் விரயங்களையும் இழப்புக்களையும் தரும் என்பதால் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. சனிக்குப் பிரீதி, பரிகாரங்களைச் செய்து கொள்வது அவசியமாகும். ஏழரைச் சனியின் ஆரம்ப காலமிது என்பதால் ஒருமுறை திருநள்ளாறு சென்று வழிபடுவது நல்லது.

மீனம்:  உங்கள் ராசிக்கு 11, 12-ஆம் இடங்களுக்கு அதிபதியான சனி 9-ஆமிடத்தில் உலவுகிறார். சனி பகை வீட்டில்  இருப்பதால் உங்களுக்கும் உங்கள் தந்தைக்குமிடையே கருத்து வேறுபாடுகள்; சண்டை, சச்சரவுகள் உண்டாகும்.
பிதுர்  ஸ்தானத்தில் உள்ள சனி தந்தையின் உடல்நலத்தைப் பாதிப்பார். எடுத்த காரியங்களை முடிக்க அரும்பாடுபட  வேண்டிவரும். தாமதமும் தடைகளும் ஏற்படும். பிதுரார்ஜித சொத்துக்களுக்குச் சேதம் உண்டாகும். அவற்றை அனுபவிக்க முடியாமலும் போகும். தொலைதூரப் பயணத்தால் அனுகூலமிராது.
13-7-2015 வரை 9-ல் உள்ள சனியை 5-ல் பலம் பெற்றுள்ள உங்கள் ராசிநாதன் குரு பார்ப்பதால் சனியால் விளையக்கூடிய கெடுபலன்கள் குறையவே செய்யும். அதன்பிறகு குரு பலமும் குறைவதால் சோதனைகள் சற்று அதிகரிக்கும். செய்து வரும் தொழிலில் அதிக கவனம் தேவை. உடன்பிறந்தவர்களால் ஓரளவு நலம் உண்டாகும்.
உடல்நலம் ஒருநாள் போல் மறுநாள் இராது. மருத்துவச் செலவுகள் சற்று அதிகரிக்கும். தர்ம காரியங்களும் தெய்வ காரியங்களும் தள்ளிப்போகும். சுப காரியங்கள் நிகழக் குறுக்கீடுகள் முளைக்கும்.
புதிய முயற்சிகள் தாமதிக்கும். குடும்பத்தில் குழப்பம் ஏற்படும். கொடுக்கல்-வாங்கலில் விழிப்புடன் ஈடுபடுவது நல்லது.
நிலம், மனை, வீடு, வாகனம் போன்ற சொத்துக்கள் சம்பந்தமான பிரச்னைகள் ஏற்படும். தாய் வழி உறவினருடன் சலசலப்பு உண்டாகும். சுகம் குறையும். கண், இதயம், கால் சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தி வருவது நல்லது. வீண்வம்பு, வழக்குகளைத் தவிர்க்கவும். குடும்பத்தாரிடம் சுமுகமாகப் பேசிப் பழகவும்.
உணவுப் பழக்கத்தில் கட்டுப்பாட்டுடன் இருக்கவும்.
பொதுவில் இந்தச் சனிப் பெயர்ச்சிக் காலம் அளவோடு நலம் தரும் காலமாக அமையும்.


விகடனின் காப்பி