Monday, September 28, 2009

தசரா வெகேசன்

நண்பர் ஒருவர் எனக்கு எழுதியிருந்தார்...

//விஜயஷங்கர் என்றும் எதிலும் தோற்காதவன் என்கிற படிமானம் // :-)

அது என்றும் இருக்கும்!

சில வேளைகளில் மற்றவர்களுக்காக ( கோவில் பிரவேசம், பரிகாரங்கள் ) நமக்கு பிளாசிபோ ( மனம் திடம் ) எப்பக்ட் கொடுக்கும் அல்லவா. தெளிந்த மனதுகிட்டும்.

இருந்தாலும் சில கோட்பாடுகள் ( குடும்பத்தின் அபிலாஷைகள் ) பொருத்து சில வேலைகள் தேட வேண்டும். நான் பொசிசன் பார்க்காமல் தேடினாலும், நீ பெரிய (? ) வேலை பார்த்தவன் என்ற நிலையில், தள்ளி விடுகிறார்கள்.

இந்த விடுமுறைக்கு காலங்களில், குடும்பம் தன்னுடன் சந்தோசமாக இருந்தால், கவலைகள் மறந்து போகும்.

அதற்க்கு தான கோவில்கள் எல்லாம் தூர தேசத்தில் இருக்குமாறு பார்த்து செல்கிறோம். மனப்பயிற்சி அது. பாலகுமாரன் எழுத்தில் அதை பார்க்கலாம் அல்லவா? வெற்றி பெரும் கதைநாயகன்!

அது ஒரு விடுமுறைக்கு ட்ரிப் எனவும் கொள்ளலாம். குழந்தைகள் தசரா வெகேசன்.

:-)
சென்ற வாரம் சென்னை சென்று வந்தோம். நபரின் மகனுக்கு கல்யாணம். குழந்தைகள் எக்சாமால் செல்ல முடியவில்லை. அவர் மனைவியுடன் லண்டன் கிளம்பும் முன் பார்க்க வேண்டும் என சென்றோம். செல்லும் வழயில் வேலூர் சென்று தங்க கோவில் பார்த்தோம். பார்க்க வேண்டிய ஒன்று.பிறகு இரண்டு நாட்கள் சென்னையில் களித்தோம். பீச். அப்புறம் தீபாவளிக்கு ஷாபிங்.

ரம்ஜான் அன்று சிட்டி சென்டர் அருகில் இருக்கும் தர்காவிற்க்கு சென்றேன். வெளியில் மிக வேர்வை.. சூடு. அங்கு குளிர்ச்சி. அருமை. ஏ.ஆர்.ரகுமான் அங்கு அடிக்கடி வருவாராம்! நினைத்தது நடக்குமாம்!

சென்ற திங்கள் மதியம் ஜெட் ஏர்வேய்ஸ் மூலம் பெங்களூரு திரும்பினோம்.

*
பிறகு வியாழன் காலை கிளம்பி திருவண்ணாமலை ட்ரிப். ஸ்வாமி ஓம்கார் எழுதிய ஸ்ரீ சக்ரபுரி தொடரை படித்தவுடன் அங்கு செல்ல வேண்டும் என்ற உந்துதல்.

எங்கள் காரில் சென்றோம். இருநூறு கிலோமீட்டர் தூரம் தான். காலை எட்டரை மணிக்கு கிளம்பி ஒரு மணிக்கு சென்று சேர்ந்தோம். கிருஷ்ணகிரி வரை நல்ல ஹைவே - பிறகு இருவழி ரோட். பரவாயில்லை. ஸ்பீட் குறைவாக தான் ஓட்டினேன்.

ஹோட்டல் அருனாச்சலாவில்
தங்கல். எழுநூறு ரூபாய்க்கு நல்ல ரூம். ஏசி உண்டு. க்ளீன் பாத்ரூம்ஸ்.

கோவிலின் வடக்கு வாசல் அருகில். அருமையான இடம்.

முதலில் ரமனாஷிரமம் சென்றோம். அருமையாக அமைதி! நிறைய வெள்ளைக்காரர்கள். கஞ்சாவின் போதையில் இருந்ததாக தெரிந்தது. இல்லாமலும் இருக்கலாம். அவர்கள் அங்கு செருப்பு அணிகிறார்கள். இந்தியர்கள் போடக்கூடாது! மலை ஏறி ஸ்கந்த ஆசிரமம் சென்றோம். வெள்ளைக்காரர்களின் அட்டுழியங்கள் பார்த்தோம். மலை மேல் நடக்கும் போது இந்தியர்கள் அவர்களிடம் பேசக்கூடாதாம். ஆனால் அவர்கள் சக வெள்ளை தோலுடன் உறவாடுவார்கள்!

பிறகு யோகி ராம் சுரத்குமார் ஆஷிரமம், சேஷாத்ரி ஸ்வாமிகள் ஆஷிரமம் சென்றுவிட்டு, ரூம் திரும்பி முகம் அலம்பிவிட்டு... அண்ணாமலையார் தரிசனம்! கஷ்டம் விலக வேண்டும்!

உணவு அருள் ஜோதி என்ற ஹோட்டலில். ரூம் கிழே.

காலை உதயத்தில் எழுந்து ஆறரை மணி அளவில் கிரிவலம் ( ஆடோவில் ) சென்றோம்! எட்டு லிங்கங்கள் பார்த்தோம். கடைசி லிங்கம் அருகில் இடுக்கு பிள்ளையார் கோவில் என்ற இடம் சிறப்பு. உள்ள புக வழி இல்லை என தோன்றும், ஆனால் வெளியே வந்து விடலாம். அணைந்து கஷ்டங்கள், உடல் உபாதைகளும் தீர்வதாக ஐதீகம்.

அபிராமி என்ற வெஜ் ஹோட்டலில் ( அங்கு எல்லாம் வெஜ் தான்! ) காலை பலகாரம். சாம்பார் வடை அருமை! விலை பரவாயில்லை.

காலை பத்தரை மணிக்கு கிளம்பி, வரும் வழியில் சாத்தனூர் அணைக்கட்டு பார்த்தோம். பிறகு வழியில் ஊத்தங்கரை - நல்ல ஆப்பிள்கள் கிடைத்தன சாப்பிட்டோம்! கிருஷ்ணகிரி க்ளாசிக் ஹோட்டலில் ( வெஜ் ) லன்ச் முடித்துவிட்டு சாயந்திரம் நாலு மணி அளவில் மீண்டும் பெங்களூரு திரும்பினோம்.

No comments: