ஜெயமோகனின் திரும்புதல் கட்டுரை, ஒரு வித நாஸ்டால்ஜியாவை, எனக்கும் கொண்டு வந்தது.
நண்பர்கள் வழியனுப்ப வருவார்கள் ( விமான பயண பயம் வயிற்றில் இருக்கும் , அது வேறு :-) ) அச்சமயம், ஒரு வித சூழல், கண்களில் கண்ணீர் என இருக்கும்...
நானும் 1999 சமயத்தில், இந்திய திரும்ப ( செட்டில் ஆக ) புறப்பட்ட போது, நண்பர்களை பிலேடேல்பியா வர வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். இருந்தாலும் ஒரு வித நாஸ்டால்ஜியா மனதில் இன்றும் உள்ளது! தவறா தெரியவில்லை.
நான் 1990 வேலைக்கு சேர சென்ற போது முதல், ஒவ்வொரு முறையும் திருப்பூர் சென்று திரும்பும் போது, அப்பாவும் அம்மாவும் வந்து வழியனுப்புவார்கள்... பஸ்ஸோ ட்ரெயினோ நகர கண்களில் கண்ணீர் உருண்டோடும்... மனைவி வந்த பிறகு வேறானது... வேலை விஷயம் வெளிநாடு செல்லும் போது, பிஞ்சு குழந்தைகள், இருவரும் அழுவது, அப்பப்பா... என்ன சொல்வது என்று தெரியவில்லை.
No comments:
Post a Comment