தியானம் செய்வது எளிது. மனம் ( யுவர் தாட்ஸ் ) லகுவாகும். துஷ்ட எண்ணங்கள் வெளியேறும்.
ஒரு இடத்தில தனியாக அமர்ந்து, இல்லை பஸ்ஸிலோ, காரிலோ பிரயாணம் செய்யும் போது ( நீங்கள் ஓட்டக்கூடாது ) தியானம் செய்யலாம்.
ஒரு பொருளையோ இஷ்ட தேவதையோ தெய்வத்தையோ நினைத்து மனமுருக வேண்டினால், நினைப்பது நண்டக்கும் என்பது சாஸ்திரம். அதனால் தான் கண் மூடி இரண்டு வினாடியானாலும் வழிபடுங்கள் என்கிறார்கள்.
நாத்திகர்களுக்கு, 'எனக்கு நம்பிக்கை இல்லை' என்பது நம்பிக்கை. அவர்கள் திறமை மீது நம்பிக்கை வைப்பார்கள்.
உங்களுக்கு என்னவெல்லாம் வேண்டுமோ, உங்களால் எப்படியெல்லாம் முடியுமோ, அதை பற்றி நினைத்து, ஸ்டேப் பை ஸ்டேப் உருவகப்படுத்தி பார்த்தால், சரியான பாதை கிடைக்கும்.
தபஸ் என்பது போல நினைத்து நீங்கள் முயன்றால் - கேட்டது கிடைக்கும்.
அதற்காக சோம்பேறியாக உட்கார்ந்து சம்பாரித்த காசில் சாப்பிட வேண்டும் என்று நினைத்தால், அதுவும் நடக்கும்! :-) ( முதல் உடல் உழைப்பு முக்கியம் )
--
அன்புடன்
விஜயஷங்கர்
பெங்களூரு
1 comment:
நல்ல பகிர்வு. நானும் தினமும் 10 நிமிடங்கள் கண்களை மூடி தியானம் செய்ய நினைக்கிறேன். சில சமயங்களில் தூங்கி விடுகிறேன். என்ன செய்ய. இன்னும் தியானம் செய்யும் முறையை சரியாக கற்கவில்லை போலும் :-)
Post a Comment