Wednesday, June 17, 2009

ஒரு கேள்வி பல பதில்கள்

நீங்கள் இந்த பதிவையும்,

All about Wockhardt, Bannerghatta Road, Bangalore

மற்றும் இந்த பதிவையும் படித்திருப்பீர்கள்.

A reply from Wockhardt, Bangalore

அதை குறித்து, மருத்துவர் ப்ருனோ இந்த பதிவில் எழுதியுள்ளார். (அருமையான தமிழ் நடை! )

சுகப்பிரசவமும், அறுவை சிகிச்சையும், ஊடக நீதிமன்ற தலையீடும் - ஏன் மருத்துவர்கள் சிசேரியன் செய்கிறார்கள்

மேலும் அவர் எழுதிய பதில்கள் என்னுடைய வோர்ட்ப்ரெஸ் ப்ளாகில் இருக்கு.

நான் இட்ட பதில் இங்கே...

ராஸ்மி கேசை பொறுத்த வரை லதா கொடுத்த தயிரியம் தான் காரணம் என்று தெரிகிறது. ரிஸ்க் இருக்கு வேண்டாம் என்று சொல்லியிருந்தால் எல்லாம் நலம்.... (அவர்கள் பதிலில் இதை தான் கோடிட்டு காட்டியிருக்கிறார்கள்! ) அப்புறம், என் ப்ளாகில் வரும் கமண்டுக்கள் பார்த்தால், ப்ரோபெசனல் ப்ளாகர்ஸ், தங்கள் ப்ளாகை பிரபலப்படுத்த வேண்டுமென்று கமன்ட் இட்ட மாதிரி தெரியுது!

மேலும் நேற்று நான் சென்ற ஜெயதேவாவில், கட்டாயம் ட்றோபோனின் டெஸ்ட் செய்ய வைத்தார்கள், ரெகுளர் ஹார்ட் செக்கபிர்க்கு! எனக்கு மொத்தம் ரூ 2000 செலவு கவலை இல்லை. ஏழைகள் என்ன செய்வார்கள்? அங்கு சிலர் ரேசன் கார்டு காட்டி, 50% டிஸ்கவுண்ட் பெற்றாலும், மருந்து சீட்டு வைத்துக்கொண்டு பிச்சை எடுப்பது, மனதுக்கு கஷ்டமாக இருக்கு.

நல்ல வேலை நான் டாக்டர் ஆகவில்லை ( 1986 ஸ்டேன்லி ). என் சீட் மற்றொரு ஏழை மாணவனுக்கு போயிருக்கும்.

அப்படி ஆகியிருந்தாலும், ஸ்பெஸலைஸெஸன் என்று செலவு செய்து, எங்கள் சமூகத்தில் வழக்கப்படி, நல்ல விலைக்கு ( 100% வரதட்சணை! ) விற்றிருப்பார்கள். ;-)
--
அன்புடன்
விஜயஷங்கர்
பெங்களூரு

No comments: