Showing posts with label tamil. Show all posts
Showing posts with label tamil. Show all posts

Tuesday, June 28, 2016

சிறுகதை : லதா

ஜூலை 23.....

இன்று லதாவிற்கு கல்யாணம். என் அருமை காதலி அவள்.

என்னோடு ப்ளஸ் 2 படித்தவள். இருபத்தொன்பது வயதாகிறது!


காலையில் அவளிடமிருந்து ஒரு மிஸ்ட் கால்.


*

பதினைந்து வருடம் பழக்கம். ஒரே பள்ளி. இருவரும் ஒன்றாக தான் பள்ளி செல்வோம். நாங்கள் இருந்த நல்லூருக்கு அருகில் இருந்த தனியார் பள்ளியில் தான் ஏசுவை வணங்கிக்கொண்டு படித்தோம்.

அவள் கொண்டு வரும் புளிக்காயச்சலும் தயிர் சாதமும், இன்னும் நாக்கில் ஊருகிறது. அம்மா செய்யும் பருப்பு துவையல் அவளுக்கு இஷ்டம்.

அவள் அப்பா ஒரு ப்ரோகிதர். பாவப்பட்ட குடும்பம் என சொல்லும் வீடு. எங்கள் தெரு அருகில் தான்... ஒட்டு உடைசல். புளியோதரை மனம். தேங்காய் வாசம்... என்னை அம்பி என்று அழைப்பார்கள். அவள் அம்மாவிற்கு தெரியும், என் காதல். விதி?

நன்றாக ஸ்லோகம் சொல்லுவாள். நிறைய மந்திரங்கள் எனக்கு கற்றுக்கொடுத்தாள் !  காயத்ரி மந்திரம்... இப்போ மன நிம்மதிக்கு உகந்த மந்திரம்.

என்னோடு நன்கு பழகியவள்.... மனதோடு ஒன்றியவள்...  இருவருக்கும் தெரிந்த அவரவருக்கு ஒரு தலை காதல்!

நன்றாக படித்தாள் ... பி.ஏ. ஆங்கிலத்தில் கோல்டு மெடல். நான் எப்படியோ தாக்கி தடுமாறி ஐ.டி. ... பிரைவேட் காலெஜ், சென்னையில் ட்ரெயினிங் வேலை என்று இப்போது பெங்களூரில் வந்து நிறுத்தியுள்ளது. ஏழு வருடமாக வெளிநாடு போக ஆசை தான். இன்னும் விசா வந்தபாடில்லை.

லதாவிற்கு பி.எட் முடித்தவுடன் அரசாங்க பள்ளியில் உத்தியோகம் வந்தது. சில வருடங்களில் பெர்மனென்ட் ஆகுமாம். அப்பப்போ கால்கள் வரும்.

நான் எந்த ஊரில் இருந்தாலும் , வீடு செல்லும் போது அவளை சென்று பார்ப்பேன்...

சென்ற மாதம் கூட அவள் பாடம் நடத்தும் பள்ளிக்கு சென்று பார்த்தேன். அவளுக்கு பிடிக்கும் என்று பளு பெல் டர்கிஷ் அல்வா எடுத்து சென்றேன்!

சென்ற மாதம் சென்ற போது கிளம்பும் நாள் தான் பார்த்தேன். அவள் முகம் வாடியிருந்தது... என்னை பார்த்ததும் முகம் மலர்ந்தாள்.. "அப்பா எனக்கு கல்யாணம் பிக்ஸ் செஞ்சுட்டார்... மாபிள்ளை பிசிக்ஸ் வாத்தியார், பொள்ளாச்சியில். ப்ளஸ் 2  ஸ்டுடண்ட்ஸ், டுசன் வருமானமும் அதிகம்! "...

"டேட் இன்னும் முடிவாகலே.. ஒரு மாசத்திலே இருக்கும்... ஐ.டி. மாப்பிள்ளை இந்த காலத்திலே வேண்டாம்னு எல்லோரும் சொல்லிட்டா.. இதிலேயும் அப்பா  ப்ரோகிதம் பண்றது நின்னுடும், நான் உங்களை கல்யாணம் செஞ்சா... "


முதல் முறையாக காதல் சொல்லப்பட்டது!

அந்த விசும்பல் ஆயிரம் அர்த்தங்கள் சொன்னது.

"உனக்கு வசதி இருக்கு.... எங்கே வேண்டாம்னு, அப்பாவையும் அம்மாவையும் பெங்களூர் அழைச்சுண்டு போவீங்க. ஆனா எங்க வழக்கங்கள், கலாச்சாரம்... சொந்தங்கள்.. எங்கு போய் நிக்கிறது? தம்பி வேறு வளர்ந்துட்டான். அடுத்த வருஷம் ப்ளஸ் 1. அவன் படிப்பு செலவு மாப்பிள்ளை எத்துண்டார்! "

மீண்டும் விசும்பல்....

"நாமோ இனிமே சந்திக்க கூடாது.."

மீண்டும் விசும்பல்...

ஓடிவிட்டாள்.

மல்லிகை மனம் இன்னும் இருந்தது.

மறக்காமல், கையில் நான் கொடுத்த பொட்டலத்தை எடுத்துக்கொண்டு சென்றாள்..

*

ஒரு வாரம் கழித்து என் மொபைல் சிணுங்கியது... லதா தான்.

"ஜூலை 23 கல்யாணம் முடிவாகியிருக்கு ...  வரும் ஞாயிறு அப்பா ராமேஷ்வரத்திலே. ப்ரோகிதம் பண்ண போறார். பெரிய சாமியாரெல்லாம் வாராலாம்.  நாங்களும் போறோம், மாப்பிள்ளையும் வர்றார். சூரிய கிரகணத்துக்கு அடுத்த நாள். நல்ல நாளாம்... நாங்கோ இருக்குறே லாட்ஜ் அட்ரெஸ் எஸ்.எம்.எஸ் பண்ணிடுறேன்...வரியாடா ஷங்கர்?"

"ஹும்.. பாக்குறேன்.. " என் குரல் கணகணத்தது...

கால் கட்.

*


என்ன தான் எதிர்பார்க்கிறாள்?

அடுத்த மாதம் ஊருக்கு போகும் போது பார்க்கவேண்டும்!

என் முன்னே bharatmatrimony தளம் பறந்து விரிந்து பெண்களின் பெயர்களோடு மிதந்தது!

லதாவை தேட ஆரம்பித்தேன்.

Friday, May 20, 2016

சாவைப்போல

சாவைப்போல
நிம்மதியை கொடுக்கும்
அருமருந்து
இவ்வுலகில்
வேறு எதுவும்
கிடையாது
தனக்கும் பிரச்சனையில்லை
சேர்ந்தவருக்கும் ஒன்றுமில்லை
காலமது
கடமையை செய்துவிடும்
இயற்கையோடு
இணைத்து விட்டால்!



எப்போதோ சிறு வயதில் ரசித்து எழுதிய கவிதை... அசை போடுகிறேன்.

Saturday, August 10, 2013

First Day First Show Thalaiva

This family movie craze to watch FDFS First Day First Show, doesnt die in Bangalore if its a holiday. Didnt like Thalaiva movie. 2nd half was a pain in the butt. Pathetic. The movie should be trimmed, some more songs/duets needed
We liked Thuppaakki though.
My sons opinion on Thalaiva. Bore. Any movie that doesnt show the hero within few minutes, doesnt click. He understands!!!! But where are the songs, he says!!! Vijay means dance right?
 A waste of 300 rs per ticket,  plus popcorn combo meals cost.
Sam Anderson makes a cameo appearance in Thalaiva. Heard he is there in Biriyani in a Kuthu song too. Internet fame never fades. Long Live!

Monday, July 01, 2013

GM Diet in Tamil


உடல் எடை அதிகரிப்பால் அவதிப்படுபவர் ஏராளம். கொஞ்சம் குண்டாக வேண்டும் என்று ஆசைப்படுவோர் கூட, உடல் எடை அதிகமுள்ளவரின் அவஸ்தைகளைக் கேட்டால் கொஞ்சம் அரண்டு தான் போவார்கள். நிற்க கஷ்டம், நடக்க கஷ்டம் என்று அவர்களின் தொல்லைகள் நீளும். இன்னொரு புறம் தேவையில்லாத வியாதிகள் ஒன்றன்பின் ஒன்றாக தொற்றத் தொடங்கும்

உணவுப்பழக்கத்தில் அதிக கவனம் செலுத்தாததுதான் உடல் எடை அதிகரிக்க முக்கிய காரணம். துரித உணவுகள், நொறுக்குத் தீனிகளை கண்டபடி தின்றுவிட்டு எடை கூடியபிறகு `டயட்' என்ற பெயரில் உணவைக் குறைத்துக் கொள்பவர்கள் ஏராளம். நடைபயணம், ஓட்டம், நீச்சல், விளையாட்டுகள் என்று வேறு சில முயற்சிகளில் இறங்கி எடையைக் குறைக்க ஆசைப்படுபவர்களும் உண்டு. மருந்து மாத்திரைகள், சத்துமாவுகள், பழங்களை சாப்பிட்டு சிலர் பயன் தேடுகிறார்கள்.

எத்தனையோ வழியில், எவ்வளவோ பேர் எடையைக் குறைக்க ஓடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். உடல் எடைப் பிரச்சினை உலகம் முழுவதும் இருக்கிறது. இந்தியாவிலும் எடைகூடியவர்கள் கணிசமாக இருக்கிறார்கள். ஆனால் மேற்கத்திய நாடுகளில் குண்டு உடல்காரர்கள் மிகுதி. அவர்களின் பிரச்சினையை குறைக்க அமெரிக்காவில் ஒர ு ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வு முடிவில் உடல் எடையைக் குறைக்க சுலபமான வழியை அறிமுகப்படுத்தினார்கள்.

7 நாட்களுக்கு உணவுப் பழக்கத்தில் சில மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டால் சுமார் 6 கிலோ வரை எடை குறையும் என்று அந்த ஆய்வு முடிவில் உறுதியளிக்கப்பட்டது. அந்த ஆய்வின்படி முதல்நாள் முழுக்க முழுக்க பழ வர்க்கங்களை மட்டும் உண்ண வேண்டும். ஆரஞ்சு, ஆப்பிள், அன்னாசி, மாதுளை, தர்பூசணி, சப்போட்டா என்று எந்தப் பழங்களை வேண்டுமானாலும் சாப்பிடலாம். தண்ணீர் சத்து நிறைந்த தர்ப்பூசணி மிகவும் நல்லது. ஆனால் வாழைப்பழம் தவிர்க்க வேண்டும்.

இரண்டாம் நாள் காய்கறிகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். ருசிக்காக உப்பு, காரம் சேர்த்துக் கொள்ளலாம். வயிறு நிரம்ப சாப்பிடலாம். காலையில் உருளைக்கிழங்கு மட்டும் சாப்பிட வேண்டும். காய்கறிகளை வேக வைத்து சாப்பிடுபவர்கள் எண்ணெய், தேங்காய் சேர்க்கக்கூடாது. மூன்றாவது நாள் பழங்கள், காய்கறிகள் சாப்பிட வேண்டும். அன்றைய தினம் உருளைக்கிழங்கு, வாழைப்பழம் தவிர்க்க வேண்டும்.

நான்காவது நாள் வாழைப்பழமும், பாலும் தான் சாப்பாடு. அதிகபட்சமாக 3 டம்ளர் பாலும், 8 பழங்களும் உண்ணலாம். விரும்பினால் காய்கறி சூப் ஒரு கப் சாப்பிட்டுக் கொள்ளுங்கள். ஐந்தாம் நாள் சிறிதளவு (ஒரு கிண்ணம்) அரிசி சாதம் சேர்க்கலாம். மீதி பசிக்கு பெரிய தக்காளிப் பழங்கள் 6 சாப்பிட்டுக் கொள்ள வேண்டும். அதற்கு மேல் பசியெடுத்தால் தண்ணீர் தான் குடிக்க வேண்டும். வழக்கத்தைவிட கூடுதலாக 4 டம்ளர் (மொத்தம் 12 டம்ளர்) தண்ணீர் பருக ஆய்வு அறிவுறுத்துகிறது.

ஆறாம் நாள் சிறிது அரிசி சாதமும், மீதிக்கு காய்கறிகளும் சாப்பிடுங்கள். காய்கறிகளை வேக வைத்தோ, பச்சையாகவோ வயிறு நிரம்ப சாப்பிடலாம். ஏழாவது நாள் ஒரு கப் சாதம் - காய்கறிகளுடன், பழ ஜூஸ் பருகுங்கள். மற்ற நாட்களில் பழங்களை ஜூஸ் செய்து சாப்பிடக்கூடாது. அவ்வளவுதான் டயட் முடிந்தது. 8-ம்நாள் எடை இயந்திரத்தில் ஏறிப் பாருங்கள். மாற்றம் தெரியும் என்கிறது அந்த ஆய்வு.

இந்த டயட் முறைக்கு வேறு கட்டுப்பாட்டு விதிகள் இல்லை என்பது சிறப்பானது. டீ, காபி சாப்பிடுபவர்கள் பால், சர்க்கரை தவிர்த்து பருகலாம். டீயில் எலுமிச்சை பிழிந்து சாப்பிட்டால் நல்லது தான். எண்ணெய் தவிர்த்து வருவது சிறந்த பலன் தரும். முடியாத பட்சத்தில் ஒரு டீஸ்பூன் எண்ணை சேர்த்துக் கொள்ளலாம். முதல் இரண்டு நாட்களில் சேர்க்கும் பழங்கள், காய்கறிகள் உடலுக்கு போதிய ஆற்றலை வழங்கும்.

3-வது நாளில் இருந்து கொழுப்பு எரிக்கும் பணி உடலில் நடைபெறுகிறது. அதை நீங்களே உணர முடியும். நான்காம் நாளில் சேர்க்கப்படும் வாழைப்பழம், உடல் இழக்கும் பொட்டாசியம், சோடியம் சத்துக்கள் கிடைக்க உதவுகிறது. 5-ம் நாள் அதிகப்படியான தண்ணீர் சேர்க்கப்படுவது உடல் உறுப்புகளை சுத்தம் செய்யும். சிறிது அரிசி சாதம் சேர்ப்பதால் 5, 6-வது நாட்களில் உடலுக்கு போதுமான சத்து கிடைக்கிறது. 7-வது நாளில் மாற்றங்களின் பலனை உடல் சுறுசுறுப்பில் இருந்து உணரலாம்.

அமெரிக்காவின் ஜான் ஹாப்கின்ஸ் ஆய்வு மையம் இந்த ஆய்வை மேற்கொண்டது. பிரசித்தி பெற்ற ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம், ஆய்வை அங்கீகரித்து தங்கள் ஊழியர்களின் எடை குறைப்பிற்காக கடைப்பிடிக்க வைத்தது. அதற்கு நல்ல பலன் கிடைத்ததால் அது `ஜெனரல் மோட்டார்ஸ் டயட்' என்று அழைக்கப்படுகிறது. மேலும் எடை குறைய விரும்புபவர்கள் 3 நாள் இடைவெளிவிட்டு மீண்டும் இதே டயட் முறையை கடைபிடிக்கலாம் என்று அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Saturday, June 15, 2013

உயிராகி மெய்யாகி, உயிர் மெய்யாகியத் தமிழ்!

உயிராகி மெய்யாகி, உயிர் மெய்யாகியத் தமிழ்!

அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள (உயிர் எழுத்துக்கள்)

நாக்கு வாயின் மேல் அண்ணத்தைத் தொடாமலும் காற்றின் உதவியால் மட்டுமே ஏற்படும் ஒலி. உயிருக்கு முதன்மையானது காற்று என்பதால் காற்றை மட்டும் பயன்படுத்தி ஏற்படும் இவ்வொலிகளை உயிர் எழுத்துக்கள்.

க், ங், ச், ஞ் ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன் (மெய் எழுத்துக்கள்)

நாக்கு வாயின் மேல் அண்ணத்தைத் தொடும். இவ்வொலிகளை ஏற்படுத்தும்போது காற்றின் பங்கைவிட உடலின் பங்கு அதிகம் என்பதால் இவற்றுக்கு மெய்யொலிகள் என்று பெயர் சூட்டப்பட்டது.

உயிர் எழுத்துக்கள்: 12
மெய் எழுத்துக்கள்: 18
உயிர்மெய் எழுத்துக்கள்: 216
ஆய்த எழுத்து: 1
தமிழ் எழுத்துக்கள் மொத்தம்: 247

நம்மொழிக்குத் தமிழ் என்று எப்படிப் பொருள் வந்தது என்பதைக் காண்போம்.

க, ச, ட, த, ப, ற - ஆறும் வல்லினம்.
ங, ஞ, ண, ந, ம, ன - ஆறும் மெல்லினம்.
ய, ர, ல, வ, ழ, ள - ஆறும் இடையினம்.

உலக மாந்தன் முதன் முதலில் பயன்படுத்திய உயிர் ஒலிகள் அ(படர்க்கை), இ(தன்னிலை), உ(முன்னிலை) என்பது பாவாணர் கருத்து.
தமிழின் மெய் எழுத்துக்களில் வல்லினத்தில் ஒன்றும், மெல்லினத்தில் ஒன்றும், இடையினத்தில் ஒன்றுமாக மூன்று மெயெழுத்துக்களை­த் தேர்ந்தெடுத்தனர். அவை த், ம், ழ் என்பவை.

இந்த மூன்று மெய்களுடன் உலகின் முதல் உயிரெழுத்துக்களை வரிசைப்படுத்தி முறையே கூட்டி த்+அ கூடி 'த' வாகவும், ம்+இ கூடி 'மி' யாகவும், ழ்+உ கூடி "ழு" வாகவும் என்று தமிழு என்று ஆக்கி, பிறகு கடையெழுத்திலுல்ல உகரத்தைத் நீக்கி தமிழ் என்று அழைத்தனர். அழகே அமுதே அழகிய மொழியே எனதுயிரே!

ஓர் எழுத்து ஒரு சொல் !

ஒரு எழுத்து தனியாக நின்று ஒரு சொல்லாகுமானால் அந்த எழுத்து ஒரெழுத்து ஒரு சொல் ( அல்லது) ஒரெழுத்து ஒரு மொழி என்பார்கள்.

ஈ, மை, நீ, கை, கோ, வா, பூ, போ, பை போன்ற ஒரெழுத்து ஒரு சொல்லை பேச்சு வழக்கில் நாம் பயன்ப்படுத்துவோம். ஆனால், தமிழில் நாற்பத்தி இரண்டு எழுத்துக்கள் ஒரெழுத்து ஒரு சொல் உள்ளது.

ஒரு எழுத்துச் சொல்லாகி தருகிற அர்த்தங்களோடு பார்ப்போம்.

ஆ - பசு
ஈ - பறவை
ஊ - இறைச்சி
ஏ - கணை
ஐ - தலைவன்
ஓ - வியப்பு
மா - பெரிய
மீ - மேல்
மூ - மூப்பு
மே - மேன்மை
மை - இருள்
மோ - மோதுதல்
தா - கொடு
தீ - நெருப்பு
தூ - தூய்மை
தே - தெய்வம்
தை - மாதம்
சா - சாதல்
சீ - இலக்குமி
சே - எருது
சோ - மதில்
பா - பாட்டு
பூ - மலர்
பே - நுரை
பை - பசுமை
போ - செல்
நா - நாக்கு
நீ - முன்னால் இருப்பவர்
நே - அருள்
நை - இகழ்ச்சியை குறிப்பத்து
நோ - வலி
கா - பாதுகாப்பு
கூ - வெல்
கை - ஒப்பணை
கோ - அரசன்
வீ - மலர்
வை - வைக்கோல்
வௌ - கைப்பற்றுதல்
யா - கட்டுதல்
நொ - துன்பம்
து - உணவு

இந்த அனைத்து ஓர் எழுத்துச் சொற்களையும் கவனித்தீர்களானால் ஓர் ஆச்சர்யம் உங்களுக்குத் தெரியும். இவற்றில் நொ,து என்ற இரண்டு எழுத்துக்கள் மட்டும் தான் குறில் என்கிற குறைந்த கால அளவுடைய எழுத்துக்கள். மற்றவை எல்லாம் நீண்ட ஒலி அளவுடைய நெடில்கள் என்பதுதான் அந்த ஆச்சர்யம்

தமிழனின் வரலாறு என்னவென்று இதுவரை துல்லியமாக யாரும் சொல்லவில்லை. ஆங்கில மோகம் கொண்டு அலையும் இன்றைய மக்களுக்கு தன் தாய்மொழியின் அருமை அறவே மறந்துவிட்டது. தமிழ் மொழியின் தோற்றம் குறித்து எனக்கு தோன்றிய ஒரு சின்ன உதாரணம்.
திருக்குறள் – ஏன் என்றால், தமிழ் என்று சொன்ன உடனே நம்ம ஞாபகத்திற்கு வருவது அதுதானே.

திருக்குறள் கி.மு.31-ல் தமிழ்கடைசங்கத்தில்அரங்கேற்றபட்டது என்பது அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால், நாம் யோசிக்க வேண்டிய விடயம் என்னவென்றால் கடைசங்கம் தான் தமிழின் கடைசிச் சங்கம். அந்தக் கடைசிச் சங்கத்தின் காலமே கி.மு.31 என்றால் இரண்டாம் மற்றும் முதல் சங்கம் எப்பொழுது தோன்றி இருக்கும்...?!

திருவள்ளுவர் தொல்காப்பிய இலக்கணபடி திருக்குறள் இயற்றியுள்ளார். ஆனால், தொல்காப்பியரோஅகத்திய இலக்கணத்தை தழுவி தனது இலக்கணத்தை இயற்றியுள்ளார். அப்படியென்றால் அகத்தியர் எப்பொழுது தனது இலக்கணத்தை இயற்றிருப்பர்..?! தமிழனின் இலக்கிய அறிவுக்கு இது ஒரு சான்று.

ஒரு மனிதன் ஒரு குறிப்பிட்ட மொழியில் நன்கு தேர்ந்த பிறகே இலக்கணத்தில் பழக முடியும், இவர்கள் இலக்கணத்தில் நன்கு பழகியவர் என்றால் அவர்கள் தமிழ் மொழியில் நன்கு பழகியிருக்க வேண்டும். அப்படி எனில் தமிழ் மொழி எப்பொழுது தோன்றி இருக்க வேண்டும் என்று நீங்களே யோசித்துப்பாருங்கள்.

இதில் இன்னும் முக்கியமானது என்னவெனில் தமிழ் மக்கள் எப்பொழுது தோன்றியிருப்பார்கள் என்பதே, ஏனெனில் ஒரு மக்கள் சமுதாயம் தான் மொழியை உருவாக்குவது. அவர்கள் மொழியை உருவாக்கியிருக்கின்றனர் என்றால் அவர்கள் தோன்றி பல ஆண்டுகள் கடந்து ஒரு நாகரீக முன்னேற்றம் அடைந்து அதன் பின்னரே மொழியை உருவாக்கியிருக் கின்றனர்.

நான் நெஞ்சை நிமிர்த்திச் சொல்வேன் தமிழன் என்று. !!

Tuesday, October 11, 2011

Indiblogger

இன்டிப்ளாகரில் எப்படி தமிழ் ப்ளாகர்களை எப்படி அடையாளம் காண்போம்?

இன்டிப்ளாகரில் ஆங்கில போட்டிகளில் எப்படி தமிழ் ப்ளாகர்களை அவர்கள் கலந்துக்க வைப்பார்கள்? ரேட்டிங்கில் உயர்த்திட / ஒருங்கிணைக்க / பரப்பனும்


சில நண்பர்கள் இன்டிப்ளாகரில் இருக்காங்க! எப்படி தமிழ் ப்ளாகர்களை அவர்கள் ரேட்டிங்கில் உயர்த்திட / ஒருங்கிணைக்க செய்வார்கள் என்று கேட்கணும்.

09102011159

பெங்களூரில் நடந்த 2010 விழாவில் நாம் அமைப்பாளர்களிடம், தமிழ் பிளாகர்களை இன்டிப்ளாகரில் பரப்பிட உதவுங்கள் என்றோம். சென்னையில் சிலர்ஆங்கிலம் தெரியாமல் எல்லோரையும்  கொழப்பிட்டார்கள்!

சஜசனாக  நண்பர்  ஒருவரிடம்  கட்டாயம்  இந்த  டாபிக்  வரணும்  என்றேன்! அதை விழா முடிவில் சம்மரியில் வேறு சொன்னார்கள்!

( இன்டிப்ளாகர் மற்றும் ப்ளாகர்கள் - 50:50 - எதற்கு இந்த டாபிக் என்று முதலில் சொல்லியிருக்கணும். தீர விசரிதிருக்கணும். யாரோ ஒருவர் இன்டிப்ளாகரில் நிதானத்தில் இருந்திருக்கிறார்கள், ப்ளாகருக்கு சரியாக பதில் சொல்லேலே.)  

இன்டிப்ளாகர் ஆட்கள் கொடுத்த அட்டையில் தப்பான அர்த்தம் (ஆங்கிலம் ஒரு சுத்தமான மொழியில்லை) வர வைத்துள்ளது.

சென்னைக்கு செல்ல வசதிப்படவில்லை. இருந்திருந்தால் ஒரு கை பார்த்திருக்கலாம்.

இங்கே  க்ளிக்  பண்ணி  இன்டிப்ளாகர்  பிரவுஸ் பண்ணுங்க.

பூக்கள் முதல் சாம் அண்டர்சன் வரை ப்ளாக் உலகில் ஒருவர் அல்லது ஒரு விஷயம் கிடைத்தால் போதும்... ஹிட்சுக்காக எதுவும் செய்யலாம்....  வாழ்க தமிழ்.

ஆயிரம் போஸ்டுகளுக்கு மேலே போட்டிருக்கேன், இருந்தாலும் இந்த தமிழ் ப்ளாக் நல்லுலகம் புரியலே.   இதுக்கு தான் நாற்பது வயதில் எர்லி ரிடயர்மென்ட் எடுக்க கூடாது என்பது. இப்போ வேலைக்கு போக வேண்டியது தான்.
 

Sunday, August 03, 2008

Tuesday, July 15, 2008

கூடு விட்டு கூடு

கூடு விட்டு கூடு

15 ஜுலை 2068 10 AM

அவர்களுடைய ஹோண்டா அகார்ட் ஹேலீவேர்சொன் 2 மாக்ல் கோவைக்கு போய்க்கொண்டு இருந்தது.
கட்டிடங்கள் இடயே பெங்களுறு-ம்ய்சுறு டூவின் ஸிடீஸ், மேகங்கள் நடுவில் மறைய தொடங்கியது.

"மச்சான் கிரீன் பீஸ் மட்டும் இல்லாமெ போய் இருந்தால், ரெண்டு மரம் கூட மிச்சம் இருந்திருக்காது!" வசந்த் அதிர்ததான். "டர்ப்யுலெந்ஸ் போல! சரி ரெண்டு மாசமா ஓB அடிச்சு. இப்போ பாஸ் கேட்ட என்ன சொல்றது?".

"யுரேநீயம் எல்லாம் தீந்து போச்சு! பிளுடோனீம் வேஸ்ட் மட்டும் தான் இருக்கு. ஆத வெச்சு ஏதாவது பண்ணலாம்.
டைம் திராவெல் கண்டுபிடிச்சு, அடுத்த நூற்றாண்டுல என்ன பண்றங்கோனு, அல்லித்து வரலாம்." என்றான் சங்கர்.
" க்ரூட் ஆயில் சுத்தமா உருஞ்சி குடிசாச்சு. ஸோலார் பவர் மட்டும் தான் இருக்கு".

"டைம் த்ரவெல் எல்லாம் ரோம்போ பழசு டா" என்றான் வசந்த். "தலைவா உருப்பட்ட மாதிரி தான்.
பாஸ், ப்ராஜெக்ட் பண்ண சொல்லி இருக்கார். ஸூட்‌கேஸ் சைசூலே ப்லுடோநீயம் ந்யூக்லியர் பவர் ரியாக்டர் மாதிரி ஏதாவது பண்ணுவோம?" கோபித்து கொண்டான் வசந்த்.

அவனுக்கு இப்போதெல்லாம் ஸிக்ஸ்-ஸிக்ஸ் ஆறு ஓவர் அ ஸைட், க்ரிகெட் மாட்ச் தான் புடிக்குது,
"ஆம்பலெ பொம்பளெ மிக்ஸ்ட் டீம்! கொண்டாட்டம்!". "புதுசா கோழி குண்டு கேம், செம ஃபாஸ்டா பிகப் ஆகுதத டா". அவன் வாழ்க்கையே தனி!

"60 வருசம் முநதி, இது மாறி பேசி இருந்த, ஓ கே ம்..." சலித்து கொண்டான், சங்கர். "எலா மச்சான், ஒரு தடவை,
நாம படிச்சொமில்லெ பழையெ இந்திரா சௌந்தரராஜன் நாவெல் - கூடு விட்டு கூடு பாயுற மாதிரி.... ஏதாவது,
டெலிபோர்‌டிங் ப்ராஜெக்ட் பண்ணுவோம?".

வசந்த் துள்ளி குதித்தான். "ஸூபர் ஐடியா. க்வாஂன்டம் ஃபிஸிக்ஸ்ல ஓஷோ சொன்ன மாதிரி, கான‌ஸியீனஸ் எல்லாம், ரியல் ஆயிட்டு வருது.அத்த கஂனட்ரோல் பண்ற மாதிரி, லொள்ளு சமாசாரம் பண்ணுவோம்! கீதா ஒத்துக்கொள்வாளா?"

கீதா அவர்கள் இருவரை விட 20 வயது மூத்தவள். ப்ராஜெக்ட் டைரெக்டர். ஸ்ட்ரிக்ட். "42இல்லும், சும்மா சொல்லக்கூடாது. ரொம்ப இஂடெலிஜெஂட்!" வசந்த் பெருமி கொண்டான்.

"டிக்‌டேட் பன்றா. பத்து பாயஂன்ட் பவர் ஷொவிலே!" அவசரமாக சொன்னான்.

பீப் பீப்...

*****

10.15 AM

கோவை ஹெலிபோர்டில் அவர்கள் தரையை தொட்டு.... மெ து வா க



ங்கி
னார்
கள்!

இந்தியாவில் தொழில் வாரியாக ஸ்டேட் பெயர் வைத்திருந்தார்கள். மோடீ குழு பரிந்துரைபடி. பைழய நான்கு ஸௌத் ஸ்டேட்ஸ் இப்போது I.T. ஸ்டேட் ஆகி விட்டது. வெஸ்ட்ல் ஃபைனன்ஸ் ஸ்டேட். நார்தில் பாலிடிக்ஸ். ஈஸ்ட் ஃபோர்ஸ்.

"வாங்கோ டூ இன் ஒண்ணு சங்கர் & வசந்த், என்ன ம்யாடர்? முப்பது நிமிசம் தான் அப்ரூவ்ட் டைம். ப்ராஜெக்ட் டீடேல்ஸ் சொல்லுங்க. கிழடு, ரொம்ப மூசுடு மூடுல இருக்குது."

பவர் ஷொவில, தான் கையில் இருந்த பேனா போன்ற வஸ்துவை க்லிக் செய்து, ஒவ்வொரு பேஜ் ஆகா காட்டினான் சங்கர்.

இடேயில் வசந்த்தின் விவரிப்பு. விவரிப்பு!

அவளுக்கு அவனிடம் இருந்து கேட்டது எல்லாம் "ஸூபர் ஐடியா மாடம்" மட்டும் தான். "கொஞ்சம் விட்டால், மெக்ஸிகோ சலவைக்காரி ஜோக்ஸ் கேட்க ஆரம்பித்து விடுவான் இவன்" மனதில் நினைத்து கொண்டாள், கீதா.

"ப்ராஜெக்ட் பண்ற மாதிரி தான் இருக்குது! ஆனா..." இழுத்தாள்.

"என்ன மேடம் ஏதாவது...." சங்கர் அவசரப்பட்டான், "அப்ரூவல் ப்ராப்லம்ஸ்?"

"நோ நோ" இருமி கொண்டாள் கீதா. "லைஃப் ஸைந்ஸஸ் டிபார்ட்‌மென்ட் அருணா சிங், கொஞ்சம் லைஃப் எக்ஸ்‌பெரிமெஂட் பதி கோடைவா. ஜாக்கிரதை."

"சரி உங்க டீம் மென்பர்ஸ் யார் யார். லிஸ்ட் கொடுங்க."

காஃபீ கப்ஸ் வந்தது. ஸிஂந்தெஸிஸ்ட் பேச்சில், ரோபோ கேட்டது "சக்கறை எவ்ளோ?"

வசந்த் சொன்னான் "வாங்கி பாத் கெடைகுமா?". ரோபோ "புரியவில்லை" என்றது. "மற்ற் ரெஸிபீஸ் எல்லாம் 2050லே க்யாந்ஸல்ட்!".

சங்கர் யோசித்து கொண்டே மெதுவாக பருகினான். "அருணா என்ன கேட்பாள்?".

*****
11 AM

விஜய் விறு விருப்போக வந்தார். 100 வயுது என்று சொல்ல முடியாது. ரெண்டு மூன்ற தடவை, இதய அறுவை அப்புறம் ஒரு பசியல்முக தூக்குப் மாத்திரம் தான்.
நூத்தி சொச்சம் கிலோ... ஸ்ஸ்ஸ்ஸ்.... பெருமூச்சு கொஞ்சம் அதிகம், பெருஸிக்கு.

அழகான அம்சமான நாற்பது வயது பெண் புயல் அருணா சிங், அவரோடு வந்தாள்.
"டியர் கீட்ஸ். ரெண்டு மாசமா பென்சூல என்ன தடுவிது இருந்தீங்க? இந்திய ஸூபர் பவர் ஆனதிலே இருந்து, இந்த பெரிக்கா (அமெரிக்காவை அப்படி தான் சொல்வார்) பசங்க, ஓவொரு மந்த்லீ மீட்டிங்கில் (2018ல இருந்த க்வார்டர் ரிஸல்ட்ஸ் போய் மஂத்லீ வந்தாச்சு) கொல்ரணுக பா. ஏதாவது புதுசா பண்ணனும்.
கம் ஆன் சொல்லுங்க" இருமிக் கொண்டார் விஜய்.

"கீதா எக்ஸ்‌ப்லேஂட் ஆல் பிஃபோர் கமிங் ஹியர்".

சங்கர் மீண்டும் ஒரு முறை, பவர் ஷோவீண் ஹாலொக்ர்யாஃப் டீஸ்ப்லயில், அந்தெ பத்து பேஜ் ஐ காட்டினான்.

விஜய் முகத்தில் சிறு சலனம் கூட இல்லை. "கீழடு ஃபேஸ் டக் உப் பண்ணுநாதில்ல் இருந்து, ஒண்ணுமே புரியேல. 60 வருசம் முன்னாடி வந்த
கமல் D10 மாதிரி. எவ்வளவு நேரம் தான் கண்ணை பார்த்து அர்த்தம் பண்றது?" கீசு கீசுதன் வஸந்த்.

"வொன்தேர்புள்" என்றாள் அருணா. அவள் முகத்தில் ஒரு புன்னகை. "ஸக்ஸெஸ் மச்சி. வூடு ஜூட்!" ஆனந்த பட்டான் வஸந்த். "அப்ரூவல்
கெதைசாசு!".

"கீட்ஸ், நீங்க சொல்றத பார்த்தால், நான் 2038இல் பண்ணுன ஒரு ஸ்மால் ப்ரோட டைப் ஞாபகம் வருது!. ப்ராஜெக்ட் திருப்பூர்.
இ வில் கிவ் இட் டு யூ." என்றார் விஜய். "ஜஸ்ட் அ டெலிபோர்ட் எக்ஸ்‌பெரிமெஂட்! கீதாவை ரிவைவ் பண்ண சொல்லி இருக்கேன்."

"சூர் ஸர்", சங்கர் சொன்னான். "எப்போ ஸ்டார்ட் பண்ணனும்?".

"இ வில் டேக் யூ டு த லாப்." கொஞ்சினாள் அருணா. "இட் இஸ் ஒன் ப்ராஜெக்ட் தட் ஐ வான்ட் டு ரிவைவ்!".

*******

5 PM

அந்த லாபீலே, அவர்கள் இருவர் மட்டும். பலவித கான்‌ட்ரொல்கல் பீப்பிட்டு கொண்டிருந்தன.

"ஓகே டா அந்த ப்ரோடடைப் ஃபிக்ஸ் பண்ணியாச்சு." வஸந்த் சந்தோசம் ஆனான். "கிரீன் லைட்!".

"மானுல்ல சொன்ன மாதிரி எல்லாம் ரெடீ" சங்கர் ஆனந்தித்தான். "GPSலெ கோ-ஆர்டிநேட்ஸ் செட் பண்னிட்டா, எஸ்கேப்!".
"இது சக்செஸ் பண்னிட்டா, நெக்ஸ்ட் ஸ்டெப், நாம டைம் கன்ட்ரோல் பண்ணலாம்!" என்றான் வசந்த் "ஃபாஸ்தேன் யுவர் ஸீட் பெல்ட், சங்கர்! ஒன்று, இரண்டு, மூன்று..."

"டாய் டாய்" அலறினான் சங்கர் "என்ன ஸ்விச் டா தொட்டே? உடம்பெலம் எறியுது. ஆ..."

இருவரும் மாறிக்கொண்டு இருந்தார்கள்....

******

15th July 2008 5.01 PM கோவை

அங்கே இரண்டு குருவிகள் பறந்து கொண்டு இருந்தன. சங்கருக்கும் வஸந்துக்கும், கீதாவோட குருவி ரெக்‌ரியாட்ஸ்ன் ப்ராஜெக்ட் பற்றி தெரிந்திருக்க நீயாயம் இல்லை.!

*********************************************************************************
Author's note:

I am in the அறிவியல் சிறுகதைப் போட்டி!

The idea was to participate in spirit. Sorry for any font issues and spellings. I use Firefox to the core, and http://quillpad.in/tamil to convert.

If you have tough time reading, please read the Tamlish version here ...

I am getting so many comments and I will post some good ones only! Sorry!

Thursday, July 03, 2008

Oops! தொடர்கதை! (Haiku)

தொடர்கதை!

எழுதுகோலால் இயற்றப்படும் முடிவற்ற தொடர்கதையில்
முடிவில்லா கண்ணீர் மழை!
மெகா ஸீரியல்!

Sunday, June 22, 2008

Some Tamil words in English

In the previous post I had written pai aranjifyd = ghost beaten. Atleast some beleive it is true and the pale face shows it.
அம்மா அப்பா தaத்தa எல்லோர்uம் எப்படி வாழ்ந்து வாழுறாங்க? Appa amma thatha ellam eppadi vazhndu vazhraanga? Means how are dad, mom, granpa and all living and alive? meant to talk about weighty issues.
Now sowkiyama = how are you? 3 in 1 word.
Poda Dai! - Get Lost!
Sottai = Bald
Thimir = high headed, egotistic
kudi = drinks and also about the people (famous saying kudi kudiaye kedukkum means drinks will spoil people).
thalaiva - leader
Sex - udal uravu, paerinbam (hmm...), punarchi
Body parts
kai - hands
kaal - legs
eduppu - hip
thoppul - navel (all these Thamizh directors know about this)
maarbu - breasts (10% of Thamizh movie cinematographers agnles are set here on heroines or vamps) Jokingly kids & college students (payangal) refers as 'maal' (hindi word), sarakku. But there are some ancient Thamizh words like Thengu and Kongu to describe those.
birushtam = buttocks (colloquially pochchu, and my daughter says it cute pochchi)
There are some other parts words - which will be posted on demand, as it might make my site Adults only. I get mails from 10th std students as well. So making sure the sanctity.
Why this post? To respect Thamizh. Edukku intha katturai? Thamizhukku vanakkam.
Also trying to be famous. Mae'lum perumai serkka muyarchi.

Thursday, February 15, 2007

Deepavali Tamil Movie

Jayam Ravi has acted well. Bhavana is cool after Veyyil.

Well low crowd in Sathyam on the second day, afternoon show!

I thought I saw the producer N.Lingusamy there! (felt like an English Movie)

This is offshoot of the Robert Ludlum novel, rehashed with Love.....

Also a touch on "Memento" with the lady loosing memory, but asking the lover to remember and get her.

Nice way to show the fisherman community. North Chennai with Vijay Milton. Whew!

I think they tried to show the Vijayakumar Character "Mudaliar" with the old stories, as shot in Royapuram, being a Dada and changing later and the son (I thought they said adopted once at "18 years"), with so many blood fight stories coming in... that would have been nice! (a hint of "Nayagan")