Friday, August 15, 2008

ஆண் - பெண் நட்பு

இரண்டு பேர் சம்பந்தப்பட்ட எதுவுமே சிக்கலான விசயம் தான். அந்த விசயம் "நட்பு" என்றால் அது மேலும் சிக்கலானது. அதிலும், அந்த இருவரில் ஒருவர் ஆண் மற்றொருவர் பெண் என்றால் சிக்கலுக்கும், சர்ச்சைக்கும் குறைவே இல்லை! Cross-gender friendship என்று சொல்லப்படும் "ஆண் - பெண் நட்பு" விவாதிப்பதற்கும், எழுதுவதற்கும் ஒரு சுவாரசியமான தலைப்பு என்பதால் இந்தப் பதிவை எழுதுகிறேன்.

ஆண்-பெண் நட்பு என்றதும் நம் மனதில் எழும் முதல் கேள்வி - ஒரு ஆணும் பெண்ணும் எந்தவிதமான உடல் கவர்ச்சியும் இல்லாமல் கடைசி வரை நண்பர்களாக இருப்பது சாத்தியமா? என்பது தான்.

நம்ம ஊர் தமிழ் சினிமாக்கள் எல்லாம் "சாத்தியம் இல்லை" என்று தான் இன்றுவரை நிரூபித்திருக்கின்றன. நிறைய உதாரணங்கள் சொல்லலாம். 'பாலைவனச் சோலை' படத்தில் சுகாசினிக்கும் நான்கு ஆண்களுக்கும் இடையே ஆழமான நட்பு நிலவும். கடைசியில் அதில் ஒருவர் மேல் காதல் ஏற்படும். 'பிரியாத வரம் வேண்டும்' படத்தில் ஷாலினியும் பிரசாந்த்தும் இனை பிரியாத நண்பர்களாக இருப்பார்கள். ஷாலினிக்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயிக்கப்படும் போதுதான் இருவருக்கும் மனதில் காதல் ஒளிந்திருப்பது தெரியவரும். இப்படி பலத் திரைப்படங்கள் உள்ளன. நட்பு என்பது பின்னால் தோன்றும் காதலுக்கான அஸ்திவாரமாகத் தான் திரைப்படங்களில் பிரதிபலிக்கப்படுகிறது. திரைப்படங்கள் மட்டுமன்றி நம் வரலாற்றிலும், இதிகாசத்திலும், இலக்கியத்திலும், ஆண்-பெண் நட்பு புறக்கணிக்கப்பட்டிருக்கிறது. ஆண்-பெண் நட்புக்கு எங்கேயும் எதிலும் எடுத்துக்காட்டுகள் இல்லை! ஆண் - பெண் உறவு என்றாலே, அது காதல் அல்லது உடல் சம்பந்தப்பட்ட உறவாகத் தான் இருக்கவேண்டும் என்கிற சமுதாய எதிர்ப்பார்ப்பு, சமுதாய ஆதரவின்மை மற்றும் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே இருக்கும் பால் நிலை பாகுபாடு ஆகியவை யதார்த்தமான நட்பு மலர்வதைத் தடுக்கிறது. நம்ம தமிழ்ச் சமுதாயத்தில் தான் இப்படியென்றால், அமெரிக்காவில் கூட ஒரு ஆண் ஒரு பெண்ணின் நெருங்கியத் தோழனாக இருந்தால், அந்த ஆண் ஒரு "gay" ஆக இருப்பானோ என்ற சந்தேகம் சிலருக்கு ஏற்படுகிறது! சில பெண்களும், gay ஆண்களை நண்பர்களாக இருப்பதை விரும்புகிறார்கள். ஏனென்றால் அது தொல்லை இல்லாத நட்பாம்!

நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது என் ஆசிரியை, வகுப்பறையில், மாணவன்-மாணவி-மணவன்-மாணவி என்று மாற்றி மாற்றி உட்கார வைத்திருப்பார். ஆஹா! ஆண்-பெண் நட்பை பள்ளிப் பருவத்திலிருந்தே வளர்த்தார்களோ என்று நீங்கள் மகிழ்ச்சியடைய வேண்டாம். ஆசிரியை அப்படி எங்களை உட்கார வைத்ததற்கு காரணம், அப்பதான் நாங்கள் பக்கதிலிருப்பவர்களிடம் பேசாமல் இருப்போம், வகுப்பில் அமைதி நிலவும் என்பதற்காக! அந்த மாதிரியான பள்ளிச் சூழ்நிலையில் படித்துவிட்டு, நான் பொறி இயல் கல்லூரியில் சேரும்போது, சக மாணவர்களுடன் பேசிப் பழக மிகவும் சங்கோஜப்பட்டேன். அந்த சின்ன வயதில் இம்மாதிரி எண்ணங்களைப் பதித்தார்களென்றால், ஆண்-பெண் நட்புக்கு மாறாக விரிசல் தான் ஏற்படும்.

"Cross-gender" நட்பைப் பற்றி பல ஆராய்ச்சிகள் நடந்திருக்கின்றன. இரு பக்க வாதங்களும் முன் வைக்கப்பட்டிருக்கின்றன. பலருக்கு ஆண்-பெண் நட்பு என்பது சுவாரசியமாகத் தோன்றினாலும், "அது வேறு ஏதோ ஒன்றில் சென்று முடிந்துவிடும்" என்கிற பயமும் இருக்கிறது. எந்தவிதமான சபலங்களும் இல்லாமல் புனிதமான நட்பு மட்டுமே கடைபிடிப்பது மிகவும் கடினம். ஒரு ஆண் தன் தோழியுடனோ, ஒரு பெண் தன் தோழனுடனோ காலார நடக்கையில், சேர்ந்து புத்தகம் படிக்கையில், மணிக்கணக்காக பேசுகையில், உணர்ச்சிகள் எப்படி குறுக்கிடாமல் இருக்க முடியும்? என்கின்றனர் சிலர். அப்படியே ஒரு ஆணும் பெண்ணும் நல்ல நண்பர்களாகத் தொடர்ந்து இருந்தால் கூட, அந்த நட்பை நல்ல விதமாகப் புரிந்துகொள்ளும் கணவன் அந்த பெண்ணுக்கும், அதே போன்ற மனைவி அந்த ஆணுக்கும் அமைவதன் சாத்தியக்கூறு குறைவு. இதை எழுதும் போது அறிவுமதியின் கவிதை ஒன்று நினைவுக்கு வருகிறது. கவிதை வரிகள் சரியாகத் தெரியவில்லை, ஆனால் கருத்து இதுதான்: ஒரு ஆணும், அவனுடைய தோழியும் வெகு நேரம் மனம் விட்டு நேரம் போவது தெரியாமல் பேசிக்கொண்டிருக்கிறார்கள். திடீரென்று அந்தப் பெண், "நேரம் ஆகிவிட்டது என் கணவர் காத்திருப்பார்" என்று சொல்லி விடைபெற்றுச் சென்றுவிடுகிறாள். நண்பன் நினைக்கிறான், கணவனிடம் ஒரு பெண் "என் நண்பன் காத்திருக்கிறான், நான் அவனைக் காணச் செல்கிறேன்" என்று சொல்லிவிட்டு நண்பனைத் தேடி வரும் காலம் வருமா என்று!

ஆண்-பெண் நட்பைப் பற்றி நம்பிக்கையான கருத்துக்களும் இருக்கின்றன. ஆண்கள், பெண்களின் நட்பை அதிகமாக விரும்புகிறார்கள். "பெண்களிடத்தில் ஆண்களிடம் கிடைக்காத ஒரு மிருதுவான மனதை வருடும் அன்பு கிடைக்கிறது. பெண்களிடம் எங்களுடைய பலத்தையோ, செல்வாக்கையோ நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. எங்கள் பலவீனத்தைக் காட்டினாலும், அதை ஏற்றுக்கொள்கிறார்கள்" என்று ஆண்கள் கூறியிருக்கிறார்கள்.
ஆண் - பெண் நட்பை பல விசயங்கள் நிர்ணயிக்கின்றன. வயது ஒரு முக்கிய காரணம். கல்லூரி வயதில் தான் அதிகபட்ச ஆண் - பெண் நட்புகள் மலர்கின்றன. திருமணத்திற்குப் பிறகு இந்த வகை நட்புக்கான வாய்ப்பு வெகுவாகக் குறைகிறது. திருமணத்திற்குப் பிறகு ஒரு பெண்ணுக்கு கணவனின் நண்பர்கள் அவளுடைய நண்பர்களாக ஆகிறார்கள். அவளுடைய கல்லூரி கால நண்பர்களுடனான நட்பு அவ்வப்போது தொலைபேசுவதோடு நின்று போய்விடுகிறது. மற்றொரு காரணம் ஒருவர் எந்த அளவு முற்போக்குச் சிந்தனை உடையவராக இருக்கிறார் என்பது. ஆண் - பெண் நட்பு கலாசார எல்லைகளுக்குச் சவால் என்று நினைப்பவர்களும் இருக்கிறார்கள்.

வயது, இனம், மதம், நாடு, கருத்து வேறுபாடுகள் போன்றவற்றைக் கடந்த நட்பு, ஏன் உணர்ச்சிகளைக் கடக்க முடியாது? முடியும்! அது சாத்தியம்! அப்படி என்ன இந்த வகை நட்பினால் நன்மை? ஒரு ஆண் தான் இல்லாத ஒரு உலகத்தைப் பற்றி பெண்ணிடமிருந்தும், ஒரு பெண் தான் இல்லாத ஒரு உலகத்தைப் பற்றி ஒரு ஆணிடமிருந்தும் தெரிந்துகொள்ள முடியும். ஒரு ஆணின் சிந்தனைகளையும் ஒரு பெண்ணின் சிந்தனைகளையும் உள்ளடக்கிய ஒரு புதிய சிந்தனை வட்டம் உருவாகும் வாய்ப்பு ஏற்படும். இதனைப் பாராட்டக்கூடிய சமுதாயமாக நம் சமுதாயம் இருக்கவேண்டும்.

கொஞ்சம் யோசிக்கவும் வைக்கிறது.

சினிமா படங்களில் மட்டுமல்ல.. கதைகளிலும் 'காதல்' என்பதை ஏதோ நட்பின் அடுத்த நிலை என்பது போலத்தான் பார்த்திருக்கிறோம். 'நட்பு காதலாக மலர்ந்தது' என்பதை ரெண்டு சிட்டுக் குருவிகளோ.. இல்லை பூச்செடிகளோ ..ஒன்றுடன் ஒன்று ஒட்டிக் கொண்டு.. பலநூறு முறை நமக்கு பாடம் நடத்தியிருக்கின்றன.

உண்மையில் எதார்த்தம் வேறாகவும் இருக்கலாம்.. நடைமுறை வாழ்க்கையில் நட்பு நட்பாகவே தொடருவதையும் நாம் பார்த்திருக்கலாம்.. ஆனால் அது கொஞ்சம் உப்பு சப்பில்லாதது போலிருப்பதால் அதையாரும் கதையாக சினிமாகவாக எடுப்பதில்லை என்றே நினைக்கிறேன்.

மற்றபடி நமது ஆசைகளே நமது பயணத்தைத் தீர்மாணிக்கின்றன. சமூகத்தின் பார்வை என்ற சங்கதியும் சிலரை அவர்கள் விரும்பாத பாதையில் திசை திருப்பிவிடுவதுண்டு.

உண்மையில் வார்த்தைகளின் பற்றாக்குறை கூட 'சாதாரண' நட்பிலிருந்து வித்யாசப்படுத்தும் முயற்சியில் இது ஒருவேளை 'காதலோ' என நினைக்கத் தோன்றுகிறது.

நெடுநாள் பழக்கம் அறிமுகப் படுத்தியிருக்கும் சில ஒத்த குணங்கள் ஒருவரை ஒருவர் ஈர்க்கும் போது.. அதுவே பிடித்தும் போகும் போது.. இந்த சமுகத்தால் சரியான அங்கீகாரம் கிடைக்காத நிலையில் எங்கே இதை தொடர முடியாது போய்விடுமோ என்ற எண்ணங்கள் பயங்கள் கூட நண்பர்கள் சிலரை காதலர்களாக்கக் கண்டதுண்டு.

வரையறைகளையும்.. தெருவில் குரைக்கும் நாய் போன்ற சமுதாய ஏளனங்களையும் பொருட்படுத்தாமல் கண்ணியமாக நட்பைத் தொடரவும் முடியும் தான் என்று தோன்றுகிறது.

நன்றாக விற்பனையாகக்கூடிய விவாதச்சரக்கு இது.

இந்த விவாதம் ஏதோ புரியாத புதிர்போல நீள்வதற்கு அடிப்படை புரிதல் ஒன்றினை நாம் பலரும் கொண்டிருக்காமை தான் காரணம்.

அந்த புரிதலானது,

மனித உறவுகளுக்கு பெயர்வைத்து அழைப்பது, மனித உறவுகளை சட்டங்களுக்குள்ளும் வரையறைகளுக்குள்ளும் அடக்கி சமூகச்சட்டங்கள் என்ற செயற்கையான அமைப்பினை உருவாக்கியது,

அந்த புறநிலையான அமைப்பினை நிறுவனமயப்படுத்தி, தொடர்ச்சியாக கருத்தியல் ரீதியான திணிப்பின் மூலம், சமூக உளவியலோடு பின்னிப்பிணைந்ததாக மாற்றியது,

பின்னர் இதனை தனிமனித பொருளாதார, உளவியல் பிரச்சனை ஆக்கியது

எல்லாம் மனிதர் செய்த வேலை.
மனிதக்கண்டுபிடிப்புகள்.
செயற்கையானவை.

ஆண்-பெண் பால் வேறுபாடு புணர்ச்சிக்காகவே உருவானது.

நட்பு, காதல், அம்மா, தங்கை, அண்ணன், சித்தப்பா எல்லாம் வெறும் செயற்கைப்பெயர்கள்.

"மனித உறவுகள் என்பதே " சரியான சொல்.
மனித உறவுகள் பல்வேறு தேவைகளுக்காக உருவாகின்றன.
வியாபார தொடர்புகள் தொடக்கம் பாலியல் தொடர்புகள் வரை.

இந்த மனித உறவில் எதிர்ப்பாலரிடமும் சரி சமப்பாலரிடமும் சரி பாலியல் தொடர்பு ஏற்படுத்தல் எந்தவிததிலும் குறைவானதோ தவறானதோ அல்ல.

பாலியல் தொடர்புக்கான தேவை எழுகின்றவிடத்து அவ்வுறவு நிகழும்.

சும்மா பெயர்களை வைத்து யாவாரம் பண்ணுவது எரிச்சலை வரவழைக்கிறது.

நட்பாவது காதலாவது மண்ணாவது.

இந்த விவாதத்தையும் நட்பின் , உறவுகளின் புனிதத்தன்மையையும் போதித்து காப்பாற்றுபவர்கள் சுயநலவாதிகள்.

இந்த புனிதத்தை போதித்து சிந்திக்க முயலும் பெண்களை, அதிகார ஆண்வர்க்கம் பலகாலமாக ஏமாற்றி வருகிறது.

ஆண்-பெண் சமனிலை நிகழும் சமூகத்தில் இந்த விவாததுக்கு இடமில்லை.

Thursday, August 14, 2008

Spar, Bannerghatta Road - A lousy place to shop!

With too much of advt. and no service quality and charging of parking cost, upto the minute Spar, Bangalore (on Bannerghatta Road) draws a blank, and gets a zero. Lousy place. Dont ever go near it.

Absolutely no offers etc.

They have only peas on sale! What an Independence Day!

I went there to buy one Laptop for a cheaper cost, and my foot, they didn't have anything as advertised. Bastards. Mistreating customers.

That is a dangerous place, flouting the fire safety regards, with bribes. Also closer to a mosque area, and no protection. They are also selling cooked food near the toilets. Workers are handing food without gloves.

You are on your own!

சுதந்திர தின வாழ்த்துக்கள்.

சுதந்திர தின வாழ்த்துக்கள்.

இந்தியாவுக்கு 61 வயசு ஆச்ச!

Happy Independence Day!

Don't watch stupid Tamil Cinema based shows and burn your brain. It is a curse! :-)

Nature, Justice and Nikita Mehta (Miscarraige)

Rajinikanth will not enter politics? ரஜினிகாந்த் குசேலன்



Watch this video and decide yourself!

தமிழின தானை தலைவர், புரட்சி செம்மல், எங்கள் பிளாக்கர் இனத்தை வாழ வைக்கும் குல தெய்வம், திரு ரஜினிகாந்த் அவர்கள், குசேலன் படம் மூலம், சொல்லிய செய்தி "நான் அரசியலுக்கு வர மாட்டேன்! இது எல்லாம் கப்சா!".

நிறைய ரசிகர்கள் மனதை புண்படுத்தி உள்ளது இந்த காட்சி.

சுதந்திர தின வாழ்த்துக்கள். (இந்தியாவுக்கு 61 வயசு ஆச்சு)

Spar, Bangalore - Unhappy Experience

With too much of advt. and no service quality and charging of parking cost, upto the minute Spar, Bangalore (on Bannerghatta Road) draws a blank, and gets a zero. Lousy place. Dont ever go near it.

Absolutely no offers etc.

They have only peas on sale! What an Independence Day!

I went there to buy one Laptop for a cheaper cost, and my foot, they didn't have anything as advertised. Bastards. Mistreating customers.

That is a dangerous place, flouting the fire safety regards, with bribes. Also closer to a mosque area, and no protection. They are also selling cooked food near the toilets. Workers are handing food without gloves.

Wednesday, August 13, 2008

ஒரு நல்ல குறிப்பு , Quote

உயிரியல் ரீதியாக பார்த்தால் விலங்குகளிலேயே வேட்டையாடுவதில் மிகவும் திறமை வாய்ந்தவன் மனிதன் தான். திட்டமிட்டு தனது சொந்த இனத்தை வேட்டையாடும் ஒரே விலங்கும் மனிதன் தான் - வில்லியம் ஜேம்ஸ்

குறிப்பு - கோட்

Biologically human is the best hunter to hunt animals and also his own! - William James.

Do you want Six Packs Abs?



Nice video isnt it?

Do you know what cigarette contains?

பிச்சைக்காரர்கள்

கையில் தேசிய கொடியோடு சிக்னலில்
விற்பதற்கு வேறொன்றுமில்லை
பிச்சைக்காரர்கள்

Vastu and Astrology

Some thoughts....
North Side Glories
North is very important in life. Chose the direction, with the match of magnetic pole (N).
East is the next best.
East is east
East is the direction of sunrise. The sun purifies, cleanses and energizes the entire universe. That's why the east stands for prosperity and fulfillment.
Always keep the east open, ventilate, light and clean. Openings in the east bring in a lot of solar energy, which has therapeutic properties.
To reap the benefits of solar energy, let there be maximum openings along the east wall of your household.
Do not construct washrooms or shoe rooms in the east, as these contaminate the incoming solar energy.
The east side is best suited for positioning puja rooms, study rooms and conference rooms.
Use light pastel shades in leaf green and cream on the eastern walls.
Try to face east while working or watching television.

West side story

West is the direction in which the sun sets. Owned by Lord Varun and ruled by Saturn, the west is more powerful at night and gets activated after sunset.
Use dark shades such as violet and gray on the western walls to suit the dark nature of this direction.
Ideally, locate bedrooms, leisure rooms, rest rooms, family sit outs and washrooms in the west of your property.
Constructing a kitchen in the west is neither prosperous nor pious.
The west is ideal for positioning overhead water tanks as lord Varun, the owner of this direction, symbolizes water.
Underground water tanks, borings and swimming pools are not considered auspicious. If located in the west.
Do not make any water storage tanks in the western section of your plot.
Western walls should be strong to bar subtle energies from flowing out. The stronger the walls in the west, the happier you will be west, the happier you will be.
The west should always be heavier than the east. Plant big trees on the western periphery or make a large mural on the western wall. You can also make it heavy by keeping solid furniture along the western wall.
While selecting a plot, make sure that there are no gardens or open spaces facing the west.
The main gate of your house should never be in west or even the southwest, for that they bring ill luck to you and your family.
Do not hang mirrors on the western wall. Hang family pictures instead to receive god energies instead.
Extensions in the west are not good they create delays in your life.
South
Not advised for folks, who are not investing as investments, than to live there. Business or commercial is OK, as long a Vayu Side and Agni Side are taken care (North and North East), with entrance towards East.

Tuesday, August 12, 2008

குசேலன்

மெயிலில் வந்தது. ஏற்கனவே படித்திருந்தாலும் இன்னொரு முறை படிக்கலாம் :-)

ராமு : கஜினிக்கும் ரஜினிக்கும் என்னடா வித்தியாசம்?

சோமு : தனக்கு மட்டும் மொட்டை போடுறவன் கஜினி.. தமிழனுக்கெல்லாம் மொட்டை போடுறவன் ரஜினி ..


உளவுத்துறை அதிகாரி1: A1 to A2 calling ஓவர் !!. பொதுவா குசேலன் ஒரு உப்புமா படம்னு பேசிக்கிறாங்க..ஆனா குசேலன் DVD சேல்ஸ் எப்படி ஜாஸ்தியாச்சுனு விசாரிக்க சொன்னேனே.. விசாரிச்சியா?? over..

அதிகாரி 2: A2 to A1 calling ஓவர் !! ... சார்.. அந்த DVD எல்லாம் மொத்தமா பின்லேடன் தான் வாங்குறானாம்.. அவனோட தற்கொலை படை வீரர்களோட மன வலிமை பயிற்சிக்கு குசேலனை தான் யூஸ் பண்றாங்களாம்..ஓவர் !!!


நர்ஸ் : டாக்டர் அந்த பேஸண்ட பேச்சு மூச்சு இல்லாம இருந்தாரே.. அவருக்கு என்ன shock treatment பண்ணி பேச வைச்சிங்க?

டாக்டர்: ஒண்ணுமில்லை சிம்பிளா "குசேலன்" பேஸண்ட் முன்னாடி போட்டு காட்டுனேன்.. அந்த படத்தை பாக்க முடியாம "நிப்பாட்டு"னு சொல்றதுக்காக வாயை தொறந்து பேசிட்டாரு..

ஆசிரியர் : குசேலன் என்ன கொடுத்தாரு?

மாணவி : அல்வா கொடுத்தாரு.

ஆசிரியர் : தப்பு தப்பு!!!.. அவர் அவல் தான் கொடுத்தார்..

மாணவி : நீங்க சொல்றது அந்த காலம். நான் சொல்றது இந்த காலம்.

Monday, August 11, 2008

Golden Moment!


The young AB winning Gold for India after 1928, 1932, 1936, 1948, 1952, 1956, 1964, 1980

The power of Music and A.R.Rahman & a kid



Cute kid! I was like that when I was young! Not sure about Music though. (ARR was not there...)

Abhinav Bindra wins Gold for India in Olympics!

Abhinav Bindra wins Gold for India in Olympics (10 m air rifle event).

He is from Pune, and has good support from all.

First Individual Gold for India in the games history. Congratulations!

August 11th, 2008 is a memorable day!

(Astrologically, India can see some good individual performances, owing to the strong Venus and Mercury!)

Sunday, August 10, 2008

Tamarind

We recently went to Tamarind, Koramangala for a Sunday Brunch.

At 160 Rs per head plus 12.5% VAT totaling Rs 180 for adults, and Rs 100 all inc for kids under 12, seems to be a reasonable price for a meal.

They have 4 veg dishes. 2 non veg. 2 Rice varieties.

They even give made to order eggs. That is their stamp.

Everyone gets a drink, punch.

Good Crowd. Typical IT gang. Since the food is Hot as in Khara and they serve liquor, southies and Telugu biddas love the place.

They have valet parking. Right across.

Subramanyapuram - சுப்பிரமணியபுரம்

Today I had a chance to watch Subramanyapuram. சுப்பிரமணியபுரம்.

விமர்சனத்திற்கு அப்பால், குறைந்த செலவில் எடுத்துள்ளார்கள்.

தப்பு தப்பாக சீன்ஸ் இருந்தாலும், ஒரு நல்ல முயற்சி! எனது மார்க் ௬0/௧00. (i.e., 60%)

மாடர்ன் டினமிக்ஸ் என்று இப்லிசி சொல்லும் தத்துவம், அங்கே அங்கே பார்க்க முடிகிறது. ( மிகை இல்லாமல், உள்ளதை உள்ளபடி, புரிகிற மாதிரி. Keeping it simple)

இது 'ஹோட்டல் ர்வாண்டா' வின் பாதிப்பு என்று சொல்லலாம். திருட்டு பசங்க. உள்டலக்கிடி தமிழ் நாடு கலை. ஒருவரின் அன்பை உபயோகித்து, வார் லோர்ட்ஸ், ஆட்சியாளர்களை பயப்பட வைக்கும் தந்திர முறை கூறிய படம் அது. இதில் மனித அன்பை, காதலாக, நட்பாக, பக்தியாக உருவாக்கி உள்ளார்கள் மசாலா கோர்த்து.

1980இல் எடுத்த படம் மாதிரி ட்ரை செய்து உள்ளனர். ஆட்டோ ௨000 மாடல். வீட்டில் லேட்டஸ்ட் டிவி. கேபிள் வொயர்கள். லிரில் சோப்பு விளம்பரம் இல்லை. லைப்பாயும் கிடையாது. விலைவாசி நிலவரம் பற்றி சொல்லி இருக்கலாம், எல்லோருக்கும் புரிகிற மாதிரி. பெல் பாட்டம் மற்றும் 'என்னடி மீனாட்சி' கமல் உடை போதாது.

அந்த் காலத்தில் வேலை இல்லா இளைஞர்கள் அவ்வளவு முடி தடி வைத்திருந்த மாதிரி, என் பன்னிரெண்டு வயது பராயத்தில் ஞாபகம் இல்லை.

உடல் ஊனமுற்ற ஒருவர் நடிப்பது சற்று மிகை என்றாலும், வாழ்த்துக்கள். மெல் ப்ரூக்ஸ் படத்தில் தான் ஒரு கால் உள்ளவர் கத்தி சண்டை போடுவார்.

கஞ்ச கருப்பு அண்ட் ஜெய் மட்டுமே மிகை இல்லாத நடிப்பு. அவர்களுக்கு படிமானம் மிகுந்த, செயலாக்கும் உள்ள, நல்ல கதைகள் கிடைப்பின், முன்னேறுவார்கள்.

மற்றபடி, லவ் சீன்ஸ் எல்லாம், பாரதிராஜா காப்பி.

http://www.fb10.uni-bremen.de/anglistik/kerkhoff/AfricanLit/AfriLitArchives7.htm

Indians in Olympics

Tough chances, and it looks bleak.

No hockey.

Tennis is a chance. Doubles, if Mahesh and Leander hit it off well. Sania has no clue.

Bright chances in Badminton. Saina.

Shooters are having fun. Rathore is the final key, shoot all the traps Major!

I thought Kolhapur swimming sensation Khade might pull it off. Just 1 sec diff from gold medal time. Next time better luck.

Final chance with weightlifting womens (1 in 68/75 Kg) or Boxing mens (75Kg)