நிம்மதியை கொடுக்கும்
அருமருந்து
இவ்வுலகில்
வேறு எதுவும்
கிடையாது
தனக்கும் பிரச்சனையில்லை
சேர்ந்தவருக்கும் ஒன்றுமில்லை
காலமது
கடமையை செய்துவிடும்
இயற்கையோடு
இணைத்து விட்டால்!
என்னைப்பற்றி.... சுவாரசியாமாயிருக்க... பார்க்கலாம்... விஜயசங்கர். Read about my thoughts in Tamil & English (some may call it ramblings).

உன் மௌனங்களின் நாராசாரத்தில்
என் ஆழ் நித்திரை பாழ்..
எதிர்ப்படாத நீ தரும் இம்சைகள்
எதிரில் வந்து கத்தியில் குத்தினாலும்
தேவலாம் போன்ற வலிகள்....
எத்தனை மெல்லியவள் நீ...
ஆனால் உன் காதலை வன்முறை போலவே
உணர்கிறது என் மனது..
எனக்கு நீ கிடைக்காத ஏக்கத்தை விட
கிடைக்காமலே போய் விடுவாயோ
என்கிற சந்தேகம் தான் பெரிய கவலை. ....
ஒவ்வொரு இரவிலும் உன் திருமணப்பத்திரிகை
நூல் அஞ்சலில் வருகிறது கனவாய்...
என் பெயர் இல்லாமல் இருக்குமோ என்று அஞ்சியே
அவைகளை என் ஒவ்வொரு கனவிலும்
பிரிப்பதே இல்லை. ...
நீ அமைதியின் ரசிகை என்பதை புரிந்தும் கூட
என் பதற்றங்களை என்னிடமிருந்து ஒழிக்க முடியவில்லை.
நான் உன்னை விரும்பாமல் இருந்திருந்தால் ஒரு சமயம் நீ
என்னை விரும்பியிருப்பாய். ....- அதற்காக உன்னை
விரும்பாமல் இருக்கும் திறன் என் வசமில்லை.
நான் உன்னைக் காதலிக்கிறேன்.. காதலிக்கிறேன்.....
என்னை நீ உதறித்தள்ளுவது பொருட்டே அன்று......