Showing posts with label இந்திய தேர்த்தல். Show all posts
Showing posts with label இந்திய தேர்த்தல். Show all posts

Monday, March 02, 2009

இந்திய தேர்தல் அறிவிப்பு (2009)

இந்தியாவில், ஐந்து பிரிவுகளாக தேர்தல் நடைபெறும் (லோக்சபா).

உத்தரப்பிரதேசம் மற்றும் ஜம்மு & காஷ்மீர் மாநிலங்களில் ஐந்து பிரிவாகவும், பீஹாரில் நான்கு பிரிவுகளாகவும்,
மஹாராஷ்டிரா மற்றும் மேற்கு வங்காளத்தில் மூன்று பிரிவுகளாகவும் தேர்தல் நடைபெறும்.
ஆந்திரா, அஸ்ஸாம், மணிப்பூர், ஜார்க்கண்ட், கர்நாடகா, மத்தியப்பிரதேசம், ஒரிஸ்ஸா மற்றும் பஞ்சாப்பில் இரண்டு பகுதிகளாக நடைபெறும்.

மீதமுள்ள 15 மாநிலங்களுக்கும், 7 யூனியன் பிரதேசங்களுக்கும் ஒரே நாளில் நடைபெறும். (மே 13)

முதல் பகுதி - ஏப்ரல் 16 (124 தொகுதிகள்)


இரண்டாம் பகுதி - ஏப்ரல் 23 (141 தொகுதிகள்)


மூன்றாம் பகுதி - ஏப்ரல் 30 (107 தொகுதிகள்)


நான்காம் பகுதி - மே 7 (85 தொகுதிகள்)


ஐந்தாம் பகுதி - மே 13 (86 தொகுதிகள்) - தமிழ்நாடு தேர்தல் நாள்.


முடிவுகள் மே 16 இல் வெளியிடப்படும்.

என்னுடைய வோட்டு, திருப்பூரில் உள்ளது. யார் போடபோகிறார்களோ!

************


ஐ.பி.என். தகவல் படி, தமிழ்நாட்டில், அ.தி.மு.க கூட்டணி வலுவான நிலையில் உள்ளது.

ஆனால், தற்போதைய நிலவரப்படி, இந்தியாவில் மீண்டும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி தான்.