Showing posts with label அமெரிக்கா. Show all posts
Showing posts with label அமெரிக்கா. Show all posts

Wednesday, November 18, 2015

அமெரிக்காவிலே

2007 இல் எழுதிய இதை படியுங்கள்.... 

அமெரிக்காவிலே ஒரு நண்பர் 


இந்த பதிவில் எழுதப்பட்ட நண்பர் இப்பொழுது சொந்தமாக ஐ.டி கம்பெனி வைத்து தொழில் செய்கிறார் - கன்சல்டன்சி தான்.... அப்புறம் எதோ ஒரு சிறு ஷாபிங் மால் - நியூ ஜெர்சியில் பத்து சிறு கடைகள் உடையது. அவர் கம்பெனி விலாசம் அங்கு தான் இருக்கு - மூன்று மில்லயன் டாலருக்கு, வட்டிக்கு தான் என கேள்விப்படுகிறேன் - வருடம் 4% வட்டியில் பெரிய தொகை பெறலாம் - அது தான் அமேரிக்கா - 14,000 டாலர் மாதாமாதம் 3 மில்லியனுக்கு கட்டனும் - கடை வாடகைகள் அதற்கும் மேலே வரலாம்... வரும் வாடகையிலே மார்ட்கேஜ் (மாத ஈ.எம்.ஐ) கட்டிவிடலாம். மேலும் அங்கேயே ஒரு துரித உணவகம் (பாஸ்ட் புட் ) வைத்துள்ளாராம். அதுவும் நல்ல வருமானம் கொடுக்கும் விஷயம் தான் - உணவில்லாத உயிரினம் எது?

எனது பையோ டேட்டா அவர் கையில் ஓர் நாள் மாட்டும் - வேலை கொடுப்பாரா என்று தெரியாது... நிச்சயமாக எனக்கு எந்த வித ஸ்டமக் பர்னிங் கிடையாது. வாழ்க வளமுடன்.

*****
அப்புறம் சுஜாதா தேசிகன் எழுதிய இந்த கதையும் படியுங்கள்....  என் அமெரிக்கா நண்பர் அனுபவத்தை ஒத்து போகிறது.
 

ஆகவே... ஒரு கதை பிறக்கிறது!



*****

கொச்சினில் இருக்கும் நண்பர் (?) அவர். என் காலேஜில் படித்தவர். சீனியர். ஒவ்வொரு முறை பெங்களூரு வரும் பொது என்னை கூப்பிடுவார். அவர் நடத்தும் ட்ரெயினிங் கம்பெனிக்கும் பணம் தேவை (என்னைப்போல) என்று சொல்லுவார். நானும் அவரை காபியோ, சாப்பாடோ (அதிக விலை பப்பே தான்) வாங்கி கொடுத்து அனுப்புவேன். நாலு பேர் தெரிந்துக்கொண்டால் நல்லது தானே எனக்கும் ஒரு நாள் உதவி என்று நினைத்துக்கொள்வேன். இன்று காலை தான் தெரிந்தது அவர் சொந்தமாக கம்பெனி எதுவும் வைக்கவில்லை, இன்னொருவருக்கு (அவர் மூலம் தான் தெரிந்தது) வேலை செய்கிறார் என்று. இப்படியும் சிலர். பொய் பேசுவது பெரும் வியாதி... எல்லாம் சிறிது உணவிற்காகா?



*****

 

 

அமெரிக்காவில் வேலை தேடுகிறேன்

அமெரிக்காவில் வேலை தேடுகிறேன்

உதவி தேவை.
*****

நண்பர்களே... அமெரிக்காவில் வேலை தேடுகிறேன்.

ஐந்து வருடங்கள் 1994-99 அங்கு வேலை செய்துள்ளேன், மிச்சம் ஒரு வருடம் எச் 1 விசா இப்போது கிடைக்கும் என்கிறார்கள். கையில் வேலிட்   பி 1 விசா இருக்கு. கொஞ்ச நாளா விசனப்பட்டுகிட்டு இருந்தேன். இன்னைக்கு வா.மணிகண்டன் பதிவு "சொர்க்கமே ..." படிச்சேன்... ஒரு உந்துதல்... துள்ளல்னு கூட சொல்லலாம்.
 
அமெரிக்காவிலே யாரவது வேலைக்கு எடுத்துக்கொள்வார்கள் என்றால்... மேலாளர் போன் நம்பர் அல்லது இமெயில் கிடைக்குமா?

நெருங்கிய நண்பர்கள் யாரும் உதவுவதாக தெரியவில்லை. எல்லோரும் ஒரு விதமாக (இந்தியா திரும்பியதை... என் கஷ்டம் எப்படி அவர்களுக்கு தெரியும்?) தான் பார்க்கிறார்கள்....

பி. எஸ். ஜி லே  எஞ்சிநீரிங் படிச்சவுடன்... ஐ.டி. தொழில்... இப்போ 25 வருஷமாச்சு... கஷ்டப்பட்டு தான் சொந்த முயற்சியில் இவ்வளவு வெற்றி. குடும்பத்தில் அனைவரும் உதவி செய்தார்கள்.

என்னுடைய லின்க்டின் ப்ரோபையில் இங்கே பார்த்து... எனக்கு சரியான ஒரு வேலைக்கு ஏற்பாடு பண்ணவும். இவ்வளவு நாள் யாரிடம் கேட்பது என்ற மனக்குழப்பம்....

நமக்கு இந்தியாலே ஒன்னும் இப்போ அமைய மாட்டேங்குது ....  எட்டு வருஷமா சொந்தமா முயற்சி பண்ணுறேன், செலவு தான் அதிகம் ஆகுது வரும்படி குறைவு தான்.

ஒன்னுலே வெற்றி. ஏழில் தோல்வி.  sharonsoftsys.com

இருக்கிற காசை வைத்து தான் வாழ்க்கை ஓடுது... எவ்வளவு காலம் தான் இந்த மாதிரி இருக்கிறது.

அஞ்சு வருஷம் அங்கிருந்தது... இன்னும் ஒரு அஞ்சு வருஷம் இருக்க ப்ளான் இருக்கு.

 மற்றபடி எப்போ வெளிநாட்டில் இருந்தாலும்.... எனக்கு ராமராஜன் பாட்டு தான் மனசிலே ஓடுது...  ரூவாய் ரூவாய் தான், டாலர் டாலர் தான். திருப்பூர்லே பனியன் கம்பெனி வச்சி கடைசி காலத்திலே செட்டில் ஆகணும்... பெங்களூர் சொத்தை கட்டி மேய்க்கிறது கட்டுபடி ஆகாது.... எதோ சொல்லனும்னு தோணிச்சு...

உங்களுக்கு கஷ்டம் வைக்க எனக்கு இஷ்டமில்லை.

உதவுறது உங்க இஷ்டம்...  என் கஷ்டம் தீர்ந்தால் நலம்.

Wednesday, January 20, 2010

தெனாவெட்டுகள் - அமெரிக்கா வாழ் இந்தியர்கள்

அமெரிக்கா வாழ் இந்தியர்கள் பற்றி நிறைய சொல்லலாம்.
நானும் அங்கிருந்தவன் தான். மனதார சொல்லுகிறேன் என்னால் முடிந்த வரை நண்பர்களுக்கு உதவியுள்ளேன். ஒரு சமயம் நண்பர் ஒருவருக்கு ( சிறிது காலம் பழகி இருந்தாலும்) ஐந்தாயிரம் டாலர்கள் வட்டியிலா கடன் கொடுத்து ஒரு வருடம் கழித்து திருப்பி வாங்கியுள்ளேன்! எதற்கு - அவர்கள் ஊரில் வீடு செட்டில்மென்ட் இருப்பதால், இவர் செல்ல முடியவில்லை... பணம் தான் சென்றது. வீடு மிஞ்சியது!

அமெரிக்கா வாழ் இந்தியர்கள் பற்றி தெனாவெட்டுகள் என்று எதானால் சொல்லுகிறேன்? தான் உண்டு தான் வேலை உண்டு என்று இருப்பவர்கள், மற்றவர்களுக்கு உதவி புரியாமல் அவரவர் வாழ்க்கையை பார்த்துக்கொண்டு இருப்பார்கள். தவறு ஒன்றும் இல்லை!

என் அண்ணனும் என்னை இன்றும் தெனாவெட்டாக இருப்பவன் என்று தான் சொல்லுகிறார். பழகிவிட்டது போல. அட்டிடூட் ப்ராப்ளம்? இது அமெரிக்காவில் இருந்து பிடித்து வரப்பட்ட நோய் போல?

ஒரு முறை நான் ரெடிங் என்ற ஊரில் இருந்த ஒரு சமயம், நிறைய ஆணி ( பக்ஸ் ) பிடுங்க வேண்டி இருந்த சமயத்தில், என் உறவினர், பதினாறு மையில்கள் கிழே தள்ளி போகும் ஹைவே பாதையில் ( ரூட் 76 ) இருந்து வரும் போது, வந்து பார்க்கிறேன் என்றார்... என் நிலைமையை சொல்லி, வேண்டாம் இப்போது, மற்றுமொரு முறை பார்க்கலாம் என்று சொல்லிவிட்டேன். கொடுக்கிற காசிற்கு வேலை செய்யும் எண்ணம் தான்! அவரும் புரிந்துக்கொண்டார். டென்சன்!

மற்றொரு சமயம், இரண்டு காரில் பத்து நண்பர்கள் வந்து ஒரு சிங்கிள் பெட்ரூமில் கொட்டம் அடித்தது தனி கதை. எல்லா வேலையும், உணவு உட்பட என்னை எதிர்பார்த்தார்கள்!

ஆனால் என் சொந்தங்கள் ( மிக பெரிய கோடீஸ்வரர்கள் ) அங்கு வந்த சமயம்... ஒரு மாதம் டூர், சொந்தங்கள் இருந்த இடத்தில மட்டும் பைல் ஆன், சில நாட்கள் இருந்தாலும் அவர்களே ஊர் சுற்றிக்கொண்டார்கள். ஹாலில் தான் படுத்தார்கள். சமையலும் அவர்களே பார்த்துக்கொண்டனர். நான் தான் ஒரு வீகென்ட் விடாப்பிடியாக நியூ யார்க், நியூ ஜெர்சியில் சில இடங்களுக்கு அழைத்துச்சென்றேன். இன்றும் அதை நினைவு கூர்ந்து சொல்லுகிறார்கள்... ஒவ்வொரு முறை சந்திக்கும் போதும்!

சில சமயம் புது கன்சல்ட்டேன்ட்ஸ் வரும் போது, என்னோடு ( தனியாக இருந்த சமயம் ) தங்க வைத்து ( இலவசமாக தான்! ) அவர்களை வீடு பிடிக்க உதவி செய்து ( ரெபரல் fee இல்லாமல் ) இந்தியன் ஸ்டோர்ஸ் இருக்கும் இடம் அழைத்துச்சென்று வருவேன். காசு கடன் கொடுப்பதும் உண்டு! ( கையில் டாலராக இருக்கும் - எடுத்து செலவு செய்யமாட்டார்கள் - இந்தியாவுக்கு அனுப்பனும் அல்லவா? எவனோ செலவு செய்யட்டும்! ).

இன்று காலை நண்பர் ராஜுவிடம் பேசிக்கொண்டு இருந்தேன், அவர் இருக்கும் பிரின்ஸ்டன் பகுதியில், ஒரு இந்தியரும் உதவுவதில்லையாம். அந்த மனப்பான்மையே இல்லையாம்... அவர் மனைவி வேலை செய்யும் இடத்திற்கு அழைத்து செல்லும் கார்பூல் அமெரிக்கன் ( வெள்ளைக்காரர் பெண் ) மாதம் இருநூறு டாலர் வாங்கினாலும் - நல்ல உதவி செய்கிறாராம்.....

துபாயில், சவுதி அரேபியாவில் இருந்த என் மாமா, எங்கள் ஊரில் டிப்ளமோ மட்டும் படித்த ஒருவருக்கு தனது இன்ப்ளுஎன்ஸ் மூலம் வேலை பெற்று தந்தார். ஒரு நாள் வேறு இடத்தில சம்பளம் அதிகம் கிடைத்தால் - நம்பிக்கை வைத்து அழைத்து சென்றவரிடம் சொல்லாமல் சென்றுவிட்டாராம். ( நேரடியாக முதலாளியிடம் பாஸ்போர்டை வாங்கிக்கொண்டு ) மிகவும் வருத்தப்பட்டார்!

அதைப்போலவே என் நண்பன் ஒருவன் இருக்கிறான். திடீரென்று என் வேலை நிலைமை தெரிந்துக்கொண்டு ( ஒரு கோடி ருபாய் சொந்த பணத்தை நான் இன்வெஸ்ட் செய்வது தெரியாமல் ... கிண்டல்? ) அமெரிக்காவில் மிகவும் நல்ல வேலை இருப்பதாகவும், உண்டனே விசா செய்து வர முடியுமா என்று கேட்டு மெயில் அனுப்புவான். அப்படியே பாரக் ஒபாமா எனக்கு விசா அடித்து உதைத்து அனுப்புகிற மாதிரி நினைப்பு தான்! அவனுக்கு தெரியாது இந்தியாவிலும் நான் மிக சந்தோசமாக, சவுரியங்களுடன் இருப்பது. அமெரிக்காவை விட்டு வெளியேறி விட்டேன் என்பதால், குறைந்து ஒன்று போய் விடவில்லை. அவன் அம்மா இன்றும் என் அம்மாவிடம், உங்க பையனுக்கு அடுத்த ரேன்க் தான் என் பையன் எடுப்பான் என்று பேசிக்கொண்டு இருக்கிறார்! நான் முதல் ரேங்கில் அவன் இருபதில், பட் எனக்கு அடுத்த ரேன்க் தானே!

சில காலம் முன் ஒருவர் என்னிடம் உதவி கேட்டார். அவர் வேலைக்கும் செல்லும் ஊரில் தமிழ் பேசும் நண்பர்கள் கிடைத்தால் சந்தோசம் என்றார். அவருக்கு தெரியாது நம் அருமை தமிழர்களை பற்றி ( அவர்கள் குடும்பம் மற்றும் வேலை என்றே இருப்பார்கள். இல்லாவிட்டால் அங்கு மிக பிரபல எழுத்தாளர்கள் வந்தால் தான் கவனிப்பார்கள்! ) மேலும் இவர்கள் தான் அமெரிக்கா நிலைமை பற்றி கருது கூறி தான் சொந்தங்கள் தவிர யாரும் அமெரிக்காவிற்கு உள் கால் ஊன்ற வழி செய்யமாட்டார்கள்.....

சிலரை இணையத்தில் கேட்ட போது, மழுப்பி விட்டார்கள்.... ட்விட்டரிலும், ப்ளாகிலும் கதை அடிக்க தானா நண்பர்கள்?

எதற்கும் இருக்கட்டும் என்று என்னோடு பனி புரிந்த கொரிய நண்பர் ஒருவரின் நம்பரை கொடுத்தேன். அவர் மிகவும் நன்றாக உதவி செய்தாராம். ஒரு முறை அதே ஆபிசில் வேலை செய்த நண்பருக்கு நண்பர் ( ஒரே கல்லூரியில் படித்தவர் வேறு ) பார்த்த போது.... முகம் திருப்பிக்கொண்டு சென்றாராம்! என்ன பயமோ! கொடிமையடா சாமி!

***

நான் 1994 இல் அமெரிக்கா வேலை விசயமாக சென்றேன். 1990 இல் மூன்று கல்லூரிகளில் எமெஸ் கிடைத்தும், ஸ்காலர்ஷிப் இல்லாததால் செல்லவில்லை. பிறகு 1995 இல் லா சாலே பார்ட் டைம் எம்பியே படித்த கதை தனி! ( முடிக்க டைம் இல்லை , முடிக்கணும்! )

1998 கல்யாணம் செய்த பிறகு, மனைவியுடன் கூட ஒரு வருடம் அங்கிருந்துவிட்டு, க்ரீன் கார்ட் கடைசி ஸ்டேஜில் இருக்கும் போது, 1999 இல் குடும்ப விசயத்திற்காக இந்தியா திரும்பினேன். 2001 வரை 485 பைல் செய்ய டைம் இருந்தது!

இரண்டாம் முறையாக 2004 இல் குடும்பத்தோடு அமெரிக்கா சென்று செட்டில் ஆகலாம் என்று தான் இருந்தேன். ஆனால் மனைவி குழந்தைகளுக்கு பிடிக்கவில்லை. ஒரு வருடத்தில் ஜி சி வாங்கியிருக்கலாம் ( எல் 1 ஏ - மேனேஜர் ) பட் மெக்சிகன்ஸ் அதிகம் இருந்த பகுதியால் வந்த வினையா தெரியவில்லை. என் கம்பெனி கொடுத்த காசு குறைவு, அதனால், தான் ஆபிஸ் அருகில் அந்த ஏரியா வீட்டில் வாடகை குறைவாக இருக்கும் நிலைமை.

மீண்டும் ஒரு முறை அமெரிக்காவில் சென்று சிறிது காலம் வேலை செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். பார்ப்போம் எப்படி நிலைமை இருக்கிறது என்று. தெரிந்தவர்கள் சொல்லுங்கள். தெனாவெட்டு வேண்டாமே!

Monday, December 15, 2008

பனி அமெரிக்கா

பனி மழையால்.. அமெரிக்கர்கள் அவதி... நண்பர்கள் எல்லாம் ஒரே கவலை. சிலருக்கு வேலையும் இல்லை. சம்பாரித்த பணம் எல்லாம் வீட்டில் போட்டுள்ளார்கள்... அதுவும் கரைகிறது.

நிறைய எழுதுகிறார்கள்... படிக்க கஷ்டம்... என்ன செய்வது... பனியும் ஒரு தவம்... பிணியும் வந்து போகும்.

ரெடிங்கில் வாழ்ந்த பொது, எமர்ஜென்சி லைட் மட்டும் ஒரு பேக் கண்டில்ஸ் வைத்திருந்த ஞாபகம்... ஒரு வத்திகுச்சி பெட்டி... இந்திய திரும்பும் பொது தான், திருப்பி கொடுத்தேன்... ஒரு டிசைனர் கேண்டில் மட்டும் ஞாபகமா இன்னும் இருக்குது.. ஒரே ஒரு நாள், ஜனவரி ஏழு 1996 காலை முதல் இரவு வரை... பவர் இல்லை. சரியாக, ஐந்து மணிக்கு திரும்ப வந்தது...

வின்டர் வந்தால், ஸ்டாக் செய்வது நிறைய ஜூஸ் பாட்டில்... சீரியல்ஸ், பால் தேவையில்லாதவை... மற்றும் சீரியல் பார்ஸ்...

பாஸ்டன் பாலா எழுதிய இந்த பதிவு, ஆற்காட்டார் தமிழ்நாட்டில் இருந்து அங்கு சென்றுவிட்டாரா என தோன்ற வைத்தது..

மின் ரத்து: பனிப்புயல் கடந்த பாஸ்டன்

Wednesday, April 18, 2007

அமெரிக்காவிலே ஒரு நண்பர்

அமெரிக்காவிலே ஒரு நண்பர்

*****


நான் அமெரிக்காவிலே இருந்த காலத்தில்... ஒரு நண்பர் இருந்தார்.... திருச்சி ஆள். எப்படியோ விசா கோர்ஸ் பண்ணி 1996 மே மாசம் வந்துட்டார். சுமாராக, திணறி ஆங்கிலம் பேசுவார். நான் அவருக்கு முதலில் செட்டில் ஆக நிறைய உதவிகள் செய்துள்ளேன். சனி ஞாயிறு என்னோடு தான் சாப்பாடு... ஹோட்டல் சென்றால் - இந்தியன் பப்பே மட்டுமே - பீட்சா கூட அதிகம் செலவு என்பார்... மற்றவர்கள் வீட்டில் சென்று சாப்பிடுவதற்கு அவ்வளவு இஷ்டம். தன வீட்டில் ஒரு முறை கூட யாருக்கும் உணவு கொடுத்ததில்லை. அவர் ரூம் மெட்டும், அவர் மாதிரி தான்....

இந்தியா கம்பெனியில் ஒரு பாண்டு எழுதியிருந்தாலும் அதை மதிக்காமல் (பெப்ரவரி விசா வந்தது, ரொம்ப டிலே பண்ணிடாங்க - நண்பர்கள் எல்லாரும் அமெரிக்க போயிட்டாங்க, நான் மட்டும் எப்படி... மூணு மாசம் வேஸ்ட் ) விசா இருப்பதால், வேறு கம்பெனி மூலமா அமெரிக்க வந்துவிட்டார், அதெல்லாம் அப்படிதான் ... அந்த காலத்தில்... வேலை ப்ராஜக்ட் கிடைப்பது ரொம்ப ஈசி....

 அவர் கன்சல்டிங் பண்ணின கம்பெனியில் வேலைக்கு சம்பளம் குறைவு ( வருடம் 44 ஆயிரம் டாலர்கள் ).  ஒரு வருடத்தில் மே 97 (இந்தியர்கள் நடத்தும் கம்பெனி வருடம் ஒரு ரிடர்ன் டிக்கட் கொடுத்தார்கள்) லீவுக்கு இந்தியா போகிறேன் என்று சென்றவர் திரும்ப வரவில்லை.

நியூ யார்க்கில் இரு மடங்கு சம்பளம் கிடைக்கும் என்பதால்... (வருடம் 90 ஆயிரம் டாலர்கள்) வேறு ஒரு கம்பெனியில் சேர்ந்துக்கொண்டது யாருக்கும் தெரியவில்லை. அவரின் ரூம் மேட்டிற்கும் தெரியாமல் இவ்வளவு நடந்தது... அவர் கம்பெனி அக்கவுண்ட் மேனேஜர் என் நண்பர்... என்னை தேடி வந்து கேட்டார். யாருக்கு தெரியும்...  ??

அவர் தான் ஐந்தாயிரம் டாலர் கடன் வாங்கி ஊரில் வீடு வாங்க வகை செய்துவிட்டார்... கிளம்பும் சமயத்தில் எல்லோரிடமும் ... தன அம்மாவும் அண்ணனும் மிகுந்த சிரமத்தில் இருப்பதை சொல்லி... (அவர் அண்ணன் கொஞ்சம் மன நிலை சரி இல்லாத நிலையில் வயதான் காலத்தில் அவர் அம்மா தான் பார்த்துக்கொண்டு ...) ஒரு வருடத்தில் ஐந்து லட்சத்தில் ஒரு வீடு ( யாரும் அவ்வளவு - சுமார் 15 ஆயிரம் டாலர்கள் - 44 ஆயிரம் சம்பளம் - கையில் 30 வரும், செலவு பாதிக்கு மேல் ஆகும் .. மிச்சம் செய்வது கடினம் ) அர்ஜண்ட் என்று சொல்லி ஏதோ காரணம் சொல்லி பணம் வசூல் செய்தார். மூன்று நண்பர்களிடம் ஐந்தாயிரம் டாலர்கள் கடன் வாங்கி கம்பி நீட்டிவிட்டார்.

ரூம் மேட்டிற்கும் நாலு மாதம் வாடகை கொடுக்கவில்லை... பாவம் அவருக்கு தான் நஷ்டம். சொல்லவில்லை... சொன்னாரா தெரியவில்லை.... தர்மம் தலைகாக்கும்... ஊருக்கு கிளம்பும் போது  மூன்று சூட்கேசில் துணி மணிகளை பேக் செய்தவர் (இரண்டை நியூ ஜெர்சியில் ஒரு நண்பர் வீட்டில் வைத்துவிட்டு போயுள்ளார்... ), நியூ யார்க்கில் தான் ஏர் இந்தியா  ப்ளைட் பிடித்தார்... அது தான் குறைவான விலையில் தரமான ப்ளைட் கொடுக்கும் நம்ம ஊர் ஏர்லைன்ஸ்.

என்னோடு மிசிகனில் வேலை செய்த இன்னொரு நண்பர் மூலம் அவர் நியூ ஜெர்சியில் தங்கியிருந்த தகவல் ஒரு மாதம் கழித்து தெரிந்தது... அதே ப்ராஜக்ட் ... நியூ ஜெர்சியில் வாசம்... என் நண்பர் மூலம் அவர் வீட்டு விலாசமும் கிடைத்தது...

அங்கு தான் வாரா வாரம் சனியன்று மளிகை வாங்க கடைக்கு (இந்தியர்கள் - படேல் - குஜராத்திகள் நடத்தும் கடைகள் பிரசித்தம்) சுற்றியுள்ளவர்கள் (பென்சில்வேனியா) செல்வார்கள். எப்படியோ அவர் இருக்கும் மடாவன் பகுதி - நான்கு மாதங்கள் கழித்து நியூ ஜெர்சி படேல் பிரதர்ஸில் அவரை சந்தித்தோம். ஒரு சனியன்று அவர் வீட்டில் இருந்து காலை 10 மணி முதல் அவர் வெளியே வரும் வரை  ஒரு இரண்டு மணி நேரம் அந்த ஏரியாவில் சுற்றிக்கொண்டு இருந்தோம்... ( 12 மணிக்கு - முகல் ஹோட்டல் பப்பே - எப்படி மாறுவார்?)

அவரை பார்த்தவுடன்... அவர் முகத்தில் ஈ ஆடவில்லை. பணம் கொடுத்தவர்களுக்கு எப்படி இருந்திருக்கும். எப்படியோ பேசி...  நயமாக .... வசூல் பண்ணிட்டார்கள்.  நல்ல வேலை கையில் அவரிடம் செக் புக் இருந்தது.... (கடையில் பணம் செட்டில் செய்ய செக் கொடுக்கலாம்... பணம் இல்லாமல் பவுன்ஸ் ஆனால் ஜெயில் கம்பி தான்)

அவருக்கு  கடன் கொடுத்தார்கள் மனவாடுகள் (தெலுகு மக்கள் உதவி செய்யும் மனநிலை - கொஞ்சம் பாசம் அதிகம்) .... நினைத்துப்பருங்கள்... அவர்கள் மனதில் எப்படி இருந்திருக்கும்... இன்றும் கூட தெலுகு மக்கள் தான் அதிகம் அமெரிக்காவில் வாழ்கிறார்கள்... அவர் இனத்தை அங்கு சென்று அமர்த்தும் பணியை செவ்வனே அமீர்பெட் கோச்சிங் சென்டர் மற்றும் டுபாக்கூர் கம்பெனிகள் செய்கின்றன.

இப்போது அவர் இரண்டு பசங்கள் பெற்று நல்ல வாழ்க்கை ... நியூ ஜெர்சி தமிழ் மன்றம் போன்ற செலவு செய்யும் வேலைகளை செய்து சந்தோசமாக இருக்கிறார் என்கிறார்கள். என் ப்ளாக் கூட அவர் படிக்கலாம்... படித்தால் கமண்ட் இடவும்...

மூன்று வருடம் முன் கூட அவரை நியூ ஜெர்சியில் வைத்து பார்த்தேன்... பேசவில்லை.

நானும் அதைப்போன்றே என் நெருங்கிய சகாவிற்கு ஒரு தொகை கொடுத்து, பதினான்கு மாதங்கள் கழித்து வசூல் செய்துள்ளேன்... எல்லாம் எதவாது வழியில் பிற்காலத்தில் உதவுவார் என்று தான்... இதுவரை அவர் செலவில் ஒரு தொலைபேசி கால் கூட இல்லை....

காலம் சுழலும்... இந்த மாதிரி நண்பர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் இப்பவும்...