Showing posts with label சுந்தர ராமசாமி. Show all posts
Showing posts with label சுந்தர ராமசாமி. Show all posts

Tuesday, August 04, 2009

நான் எழுதிய கடிதமும் ஜெயமோகன் பதிலும்

நான் எழுதிய கடிதமும் ஜெயமோகன் பதிலும், அதை அவர் சைட்டில் போட்டிருக்கிறார். இப்போ தான் பார்த்தேன். http://jeyamohan.in/?p=3167

***

அன்புள்ள ஜெயமோகன்

நான் சென்ற ஜூன் 20 200 அன்று சுந்தர ராமசாமியுடன் நடத்தபப்ட்ட விரிவான பேட்டியை டிடியில் பார்த்தேன்

நான் ரசித்த சிறு துளிகள்...

  • எழுத்தாளனுக்கு வாசிப்பனுபவம் மிக முக்கியம்.
  • எழுதுங்கள், எழுதிக்கொண்டே இருங்கள், வேண்டுமென்றால் கிழித்துப்போடுங்கள் … எழுத வரும்…

அவருடைய எழுத்துக்கள் இணையத்தில் அனைத்தும் உள்ளனவா?

மிகவும் நேசித்துவிட்டு, எதற்காக இந்தியாவை விட்டு விட்டு அமெரிக்க வாழ்க்கை வாழ்ந்தார்? ( நான் அங்கு கிட்டத்தட்ட ஆறு வருடம் வாழ்ந்த வாழ்க்கை, பணத்தை தவிர ( திறமைக்கு கூலி ) வேறு எதுவும் பிடிக்கவில்லை.

சுஜாதாவை விட இவரின் பேச்சு ( தேவையானவை ) மட்டும் மேலாக இருந்ததாக என எனக்கு தோன்றியது. நீங்கள் அவரிடம் பழகியுள்ளீர்கள், மணிக்கணக்கில் பேசுவது என்பது, மிகுந்த படிப்பு ஆர்வம் இருப்பவர்க்கு விருந்தாகும்..

Regards
விஜயஷங்கர்
பெங்களூரு

அன்புள்ள விஜயசங்கர்

சுந்தர ராமசாமியுடன் நான் நெருக்கமாக பழகியிருக்கிறேன். அதையெல்லாம் அவரைப்பறி நான் எழுதிய 'சுரா-நினைவின் நதியில்' என்ற நூலில் பார்க்கலாம். அது உயிர்மை வெளியீடாக வந்துள்ளது.
அந்த பேட்டியை நான் பார்க்கவில்லை. அதைப்பற்றி நீங்கள் காலச்சுவடு நிறுவனத்தில் விசாரித்து பார்க்கலாம்.

kalachuvadu@gmail.com

ஜெ.

***

நன்றி ஜெயமோகன். அமெரிக்காவை இந்த விசிட்டில் என்ஜாய் பண்ணுங்க!

நான் அனுப்பியே மெயிலுக்கு காலச்சுவடு இதுவரை பதில் தரவில்லை. கடைசியாக அவர்களை ராஜா மார்த்தாண்டன் இருந்த போது அழைத்தது! மிக நல்ல எழுத்தாளர் ஜெயமோகன் மூலம் அறிமுகம் ஆனது, இப்போ இல்லே.
--
Regards
Vijayashankar