Showing posts with label கதை. Show all posts
Showing posts with label கதை. Show all posts

Friday, November 20, 2015

அமெரிக்காவிலே ஒரு தொடர்ச்சி....

அமெரிக்காவிலே ஒரு தொடர்ச்சி....

முதலில் இந்த கதையை 

ஆகவே... ஒரு கதை பிறக்கிறது!

படித்து விட்டு,

என்னுடைய இந்த போஸ்டையும்

அமெரிக்காவிலே


ஒரு முறை வாசியுங்கள்....

அப்புறம் கதை பிடிபடும்...

ஆகவே... ஒரு கதை மீண்டும் பிறக்கிறது!



*****

ராம்கி கன்சல்டன்சி எம்.டி ஆபிஸ்....

"மிஸ்டர் ஸ்ரீநிவாஸ் - ஹவ் வாஸ் யுவர் ட்ரிப்.  சென்னை தானே நீங்க... உடைந்த தெலுகு கலந்த தமிழ் வாடை...  " ராமகிருஷ்ணா ரெட்டி தான்

அப்பொழுது தான் தலை சுற்றிய என் உடல், ஒரு தண்ணீர் பாட்டிலின் உதவியோடு சிறிது சாந்தமடைந்திருந்தது....  எப்படி பேசி எப்படி இனி என் அமெரிக்க வாழ்வை கொஞ்சம் காலம் ஓட்டுவது?

இப்போது இருந்த என் லூக்கிற்கும் சென்னையில் நான் அவரை சந்தித்த பொது இருந்த லூக்கிற்கும் சம்பந்தமில்லை.... வழுக்கை, ஒரு குறுந்தாடி என்று நரையோடு உருவமே மாறிப்போயிருந்தது...

அந்த பரந்த மேசைக்கு பின் இருந்த ஷ்விவல் சேரில் அமர்ந்தவர்... என்னைபபார்த்ததும், ஒரு கணம் உற்று பார்த்து.... திடுக்கிட்டவராக... "ஹா... சிஸ்கோ ரவுட்டர் ஆர்கிடேக்ட் என்ற போதே நினைச்சேன், நீங்களாக இருக்கலாம் என்று.... ஹவ் ஆர் யு... மை தேவுடா.... எனக்கு வேலை கொடுத்தவரே... "

ஒரு நிமிடம் மவுனம்... எனக்கு வார்த்தை வரவில்லை....

 "நீங்க எப்படி.... " எனக்கு வார்த்தைகள் வரவில்லை.. மனதெல்லாம், என் வேலை அம்போ தான், இந்தியாவிற்கு கர்வாப்சி என்று தான் நினைத்தேன்...

இருவரும் மவுனமாக ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டோம்.

ரெட்டி தான் கொஞ்சம் அதிகம் டென்சன்னானது போல இருந்தார்.... "எனக்கு ஒரு மணிக்கு ஒரு கிளையன்ட் மீட்டிங்... எ.டி & டி ஆபிஸ் போகணும்... உங்க எல்.சி. இங்கே மாரிஸ்டவுனுக்கு மாத்தரத்துக்கு தான். உங்களுக்கும் அங்கே தானே புது ப்ராஜக்ட் மீட்டிங் ? "

"ஆமாம் .. " என்றேன். வாயில் கொஞ்சம் கூட சத்தம் வரவில்லை.சிக்கல் தீர்ந்தால் சரி. இன்னும் நாலே முக்கால் வருஷம் ஓட்டினால் போதும், குழந்தைகள் இருவரும் காலேஜ் வந்துவிடுவார்கள், அப்புறம் இந்தியா  கிளம்பிடலாம்.

"சரி நீங்களும் என்னோட கூட வாங்க... என்னோட இந்தியன் ஹோட்டலிலேயே மதியம் லஞ்ச சாப்பிட்டிடுட்டு போகலாம்... " எழுந்தார்.

"நிறைய சொல்ல வேண்டி இருக்கு ...நான் நடந்துகிட்ட விதம், எல்லாம் என் குடும்ப சூழ் நிலையால  தான்... நோ எக்ஸ்கியுசஸ் "

"அமெரிக்கா வந்து இப்போ 20 வருஷம் ஆகப்போகுது! " வெல்லாம் பல். அதே பழைய ரெட்டி.

ரெட்டி கண்களில் ஒரு வித பெருமிதம். சாதித்த சந்தோசம்!

"சரி சரி லேட்டாகுது .... வாங்க சாப்பிட போகலாம்.... " ரெட்டி அழைக்க வெளியே நடந்தோம். வெய்யில் மிதமாக இருந்தது. இன்னும் குளிர் விடவில்லை.  சேன் ஹோசே அளவு இங்கே வெய்யில் வராது. இதமாகத்தான் இருந்தது. கோட்டுக்குள் வியர்த்துக்கொட்டிகொண்டு இருந்தது.

மழை வரும் அறிகுறி இருந்தது.

மக்கள் அந்த எடிசன் மாலில் கொஞ்சம் விரைவாக ஓடிக்கொண்டிருந்தனர்.

வெள்ளி ஆதலால் ஆபிசில் உண்ணாமல் வெளியே ஹோட்டலில் உண்பது வழக்கம்.


*

மணி மதியம் பன்னிரண்டு.

"இது என்னோட காம்ப்ளெக்ஸ். சின்ன லெவல் டவுன் மால். பத்து கடை இருக்கு. என் ஆபிசும், என்னோட  இன்டியன் ரெஸ்டராண்டும் ... "

ரெட்டிக்கு 20 வருடம் கழித்து பார்த்த நண்பனைக்கண்ட சந்தோசம். பகிர்தல் ஆரம்பமானது.

"எல்லாம் சேர்த்து மொத்தம் ஒரு 3  மில்லியன் ஆச்சு. இப்பெல்லாம் இங்கே மார்ட்கேஜ் ரொம்ப கம்மி. வர்ற வாடகை அப்படியே கட்டறேன். கொஞ்சம் அப்படியே ஊரு பக்கம் பிலேந்த்ரோபி.. அப்புறம் நம்ம சொந்த பந்தங்கள் இங்கே வர வைக்க ஹைதராபாத்திலே ஒரு ஆபிஸ்...  நான் படிச்ச அமீர்பெட் கோச்சிங் சென்டர்ஸ் எல்லாம் இன்னும் இருக்கு தெரியுமா?

மிக பிரபலமான அந்த இந்தியன் பப்பே ஹோட்டலில் சாப்பிட்டோம்... பணியாளர்கள் எல்லாம் என்னை கவனித்துக்கொண்டது மிகவும் அதிசயமாக இருந்தது. முதலாளியின் நண்பர் அல்லவா?

இடையில் ரெட்டியை பார்க்க வந்தார் ஒரு பெண். அவர்கள் இருவரும் நெருக்கமாக சத்தமில்லாமல் "ஹனி ஹனி ... " என்று பேசியதைக்கேட்க வித்தியாசமாக இருந்தது..குறுகுறுப்புடன் பார்த்தேன்!

"ஸ்ரீநிவாஸ் மீட் லிஸ், மை வைப் பார் 15 இயர்ஸ். லிஸ் திஸ் ஜென்டில்மேன் கேவ் மீ மை பர்ஸ்ட் ஜாப்.. "  லிஸ் முகத்தில் மிகப்பெரிய புன்சிரிப்பு. "நீங்க தானா அது... ஹீ கிப்ஸ் சாட்டிங் அபவுட் யு ஆல்வேஸ் .. " கை குலுக்கினார்!

எனக்கு இதுவும் ஒரு பெரிய ஷாக். இன்னும் எத்தனையோ....

அவர்களுக்கு குழந்தைகள் இன்னும் இல்லை. இந்தியாவில் இருந்து இரு குழந்தைகளை சீக்கிரம் தத்து எடுத்து வளர்க்க முடிவாம்.... சென்னைலே சொல்லியிருக்காங்களாம்...

"யு ஷுட் விசிட் அஸ்  அட் ஹோம் சம் டைம் சூன் ஸ்ரிநிவாஷ் ... " லிஸ் சொல்லிவிட்டு சென்றார். அவர் தான் முழு நேரம் ஹோட்டலை நடத்துகிறாராம். லிஸ் ஒரு சோசியல் சர்வீஸ் பர்சனும் கூட.

நியூ ஜெர்சி செனட்டிற்கு அடுத்த எலக்சனில் ரிபப்ளிக்கன் பார்டி சார்பில் நிற்கிறாராம். பணம் இருந்தால், அடுத்து அரசியல் தானே.... இங்கேயும் இந்தியா போல தான்.

உன்ன மனமில்லை. இருந்தாலும் ரெட்  ஐயில் வந்த களைப்பும், காலையில் ஒரு டோனட் மட்டும் சாப்பிட்ட வயிறு கட முட என்றது. சாப்பிட்ட்டு  தான் ஆகணும்... 3 மாதங்களா சொந்த குக்கிங், அப்பப்போ இந்தியன் ரெஸ்டரான்ட் என்று தான் இருந்தது.

நிறைவான அந்த மதிய உணவிற்கு பிறகு ....

"வாங்க கிளம்பலாம்... " ரெட்டி தன் சொகுசு காருக்கு அழைத்து சென்றார்.

12:30 என்று அந்த அமர்களமான லிங்கன் டவுன் காரில் டயல் சொன்னது. அமர்ந்து செல்லவே என் மனதிற்கு ஒரு வித்தியாசமாக இருந்தது. ரெட்டி நிஜமா சூப்பாரா வாழறார்! 

*

எடிசனிலிருந்து மாரிஸ்டவுன் செல்ல குறைந்தபட்சம் அரை மணி நேரம் ஆகும். முழு கதையும் கேட்டுவிட வேண்டியதுதான் என்று மனதில் நினைத்தேன்.

"நிறைய சோகம் நிறைஞ்ச வாழ்க்க என்னுது... படிப்பு மட்டுமே கை கொடுத்தது... " ரெட்டி கண்களில் நீர்.

"ஆந்திராவிலே, எனக்கு ஒரு அண்ணன். கொஞ்சம் புத்தி சுவாதீனம் இல்லாதவன். அப்பா நிலத்தை விற்று தான் படிக்கவே வைத்தார். தனியார் காலேஜுக்கு பீஸ் ரொம்ப ஜாஸ்தி. வெறி பிடிச்சு படிச்சேன்.... " ரெட்டி சொல்ல ஆரம்பித்தார்.

இன்டர்வியு ஞாபகம் வந்தது. நோ டவுட்ஸ்.

"உங்க கம்பெனியிலே எனக்கு ஜாப் கிடைச்சப்ப, நான் சென்னையிலே பட்ட கடனை அடைக்க பல பேரிடம் கடன் வாங்கினேன். சாப்ட்வேரில் இருந்ததாலே ஒரு நல்ல வேலையில் இருக்கிற பொண்ணு கிடைச்சா ரொம்ப நல்லதுன்னு நினைச்சு, நிறைய பொண்ணுங்களுக்கு செலவு பண்ணினேன்...  கடன் ஜாஸ்தி ஆகிடுச்சு... என் வீட்டுக்கு மாசா மாசம் பணம் வேற அனுப்ப வேண்டி இருந்தது...

" ஆஸ்திரேலியா போன சமயம்... அண்ணனுக்கு ரொம்ப சீரியஸ். ஒரு ப்ரெயின் டியுமர் ஆபரேசன். ரெண்டு லட்சம் செலவு. அதனாலே, காசுக்கு அப்படி ஒரு நாடகம்... 5000 ஆஸ்ட்ரேலியன் டாலர் அப்பவே அனுப்பினேன். ஒரு வருசத்திலே எப்படி அவ்வளவு சம்பாரிச்சிருக்க முடியும்?

"ரொம்ப ரொம்ப சாரிங்க... நான் என்ன தான் செஞ்சிருக்க முடியும்? உங்களை தான் ஏமாத்துனது எனக்கு கஷ்டமா இருந்துச்சு... என்னாலே கம்பெனிக்கு பெரிய லாஸ்.

"உங்க கம்பெனிலே அமெரிக்க விசா பண்ணியும் என்னை அனுப்பலே... என் சொந்தத்தில் இங்கே இருக்கிற ஒருத்தன புடிச்சேன், ஒரு மார்வாடி கன்சல்டன்ட் டிக்கட் போட்டு கூப்பிட்டான்... இங்கே நெட்வர்கிங்க்லே நல்ல மார்கட்.... அப்போ... எவன் வேணா அப்பாடக்கர் ஆகலாம்... உங்களுக்கு தெரிஞ்சது தானே? முதலிலே இங்கே அஞ்சு வருஷம் இருந்துட்டு நீங்க ஏன் இந்திய அப்போ திரும்பி வந்தீங்கன்னு நானும் கேட்கலே, நீங்களும் சொல்லலே. பேமிலி ரீசன்னு ஞாபகம்...

தலை ஆட்டினேன். நிச்சயமா அப்பாவின் உடல்நிலை காரணம்  தான் இந்தியாவிற்கு என்னை திரும்ப அழைத்தது. அண்ணனுக்கும் வெளிநாட்டில் வேலை அப்போது, திரும்பி வரமுடியாத விசா பிரச்சனை. இன்டியாவிலேயே சம்பளமும் நிறைய கொடுக்க கம்பெனிகள் ஆரம்பித்திருந்தனர்.

"மே 1996 இங்கே லேண்ட் பண்ணினேன்.... சொந்தக்காரன் இருந்ததாலே பரவாயில்லே, அவன் மூலமாவே ஒரு ப்ரோஜக்டில் செட்டில் ஆனேன். அவன் கூடவே தங்கினேன். 

"முதலிலே கிடைச்ச வேலைலே ஒரு வருஷத்துலே, மிச்சம் ஒன்னும் பண்ண முடியலே... அப்பாவும் அடமானம் வச்ச வீட்டை திருப்ப பணம் பத்து லட்சம் வேணுமா இருந்துச்சு... ஒரு வருசத்துலே யார் அப்படி மிச்சம் பண்ண முடியும்?

"நிறைய பேர் உதவி செஞ்சாங்க... அவங்ககிட்ட நிறைய கடன் பட்டேன்...சரியான நேரத்துலே கடன் திருப்பி கட்டமுடியலே...  நிறைய பேர் என்னாலே ஏமாந்தாங்க, என் முகராஷி அப்படி...

"வேற கம்பெனி வேலை புடிச்சேன்... சொந்தக்காரன், நான் வேலை மாத்துறது பத்தி யார் கிட்டயும் சொல்லலே. ஒரு வருசத்துலே டபுள் சம்பளத்துக்கு பெரிய கம்பெனிலே வேலை. இந்தியா போக மார்வாடி கொடுத்த ரிடர்ன் டிக்கட் இருந்துச்சு. மே 97 கிளம்பிட்டேன். ஊரில் கடன் அடைச்சேன். திரும்பி இங்கே வந்தேன்.

"ஒரு மாசத்தில் அவர்களே என்னை கண்டுபிடிச்சு வந்தாங்க. கடன் எல்லாம் தீர்த்தேன். இங்கே சொந்தாகாரனுக்கே கடன் ஒரு வருஷம் கழிச்சு அடைச்சேன்.

"எனக்கு எல்லாமே பிற்பாடு தேவுடா ஒன்னு ஒண்ணா கொடுத்தான்.

"2001 லே தான் ராம்கி கன்சல்டன்சி ஆரம்பிச்சேன். மொத்த பில்லிங்கும் என் கையிலே. கொஞ்சம் கொஞ்சமா ஊர் பக்கம் சொந்தங்களை இங்கே வர வச்சேன். இப்போ இந்த நிலைமைக்கு வந்திருக்கேன்.

கொஞ்ச நேரம் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. கார்டன் ஸ்டேட் பார்க்வே சத்தம் மட்டுமே இருந்தது.

மாரிஸ் டவுன் வந்தடைந்தோம். நானும் ரெட்டியும் அவரவர் வேலை முடிந்துவிட்டு வந்தோம்.

இரண்டு மணி நேரங்களுக்கு பிறகு என்னை ஹோட்டலில் டிராப் செய்ய வெளியே ரெட்டி நின்றுக்கொண்டிருந்தார். திரும்பவும் அவர் கூடவே பயணம். அடுத்த நாள் மதியம் தான் ப்ளைட்.

என் மனதை ஏதோ பண்ணியிருந்தார் அந்த மதியம்....


*

ஹோட்டல் வருவதற்கு முன்....

அப்புறம் லிஸ் எப்படி? என்னால் இந்த கேள்வி மட்டும் தான் கேட்க முடிந்தது..

ரெட்டி சொன்னது எனக்கு மிகவும் ஆச்சிரியமாக இருந்தது...

"லிஸ் என்னை ஒரு யோகா கிளாசில் சந்திச்சார்... அப்படியே பழக்கம்... கல்யாணம் வரை போயிற்று...  ஷி வாஸ் எ விடோ. என்னை விட பத்து வயசு பெரியவங்க...

"2001 ட்வின் டவர் 911 சமயத்துலே... வேலை போயிருச்சு. க்ரீன் கார்ட் நிப்பாட்டிடான். என்ன பண்றது, க்ரீன் கார்டுக்காக கல்யாணம் இங்கேயே பண்ண வேண்டியதாப்போச்சு.

பிறகு ஹோட்டல் வரும் வரை நீண்ட மவுனம்.

"ஸ்ரீநிவாஸ் - உங்களை வாழ்க்கையில் எப்பவும் மறக்க மாட்டேன். நிச்சயம் இங்கே செட்டில் ஆக உதவி பண்றேன். தயங்காம கேளுங்க. சென்னைக்கு ஒரு முறை போகணும், பழைய கடன்களை அடைக்கணும்...

"இப்பெல்லாம் இங்கே ரொம்ப கஷ்டம். யாரும் இந்தியா ஆளுங்களுக்கு வேலை கொடுக்கிறது இல்லே. அதுவும் ஒரு இந்தியன் இன்னொருத்தனுக்கு... சான்சே இல்லே..

"நான் உங்களை மறக்கமாட்டேன். சி யு. வீ வில் மீட் சம் அதர் டைம்.

இறங்கிக்கொண்டேன்.

ரெட்டி கை அசைத்துவிட்டு, காரில் நகர்ந்தார்....

 ஏனோ நெடு நாளாக இருந்த பாரம் குறைந்தது போல இருந்தது!

***


Friday, November 04, 2011

குழப்பங்கள்

ஒருவர் மனதில் எவ்வளவு குழப்பங்கள் மற்றும் எண்ணங்கள் இருக்கும் என்பது கீழ் இருக்கும் வார்த்தை கலவைகளை படித்தால் தெரியும். இருந்தாலும் ஒரு நாவல் ( நெடுங்கதை ) படித்த திருப்தி இருக்கும்...

*****

இரண்டு பாகிஸ்தானிய கிரிகட்டையர்கள்... கில்டியாம். பாவம். நாடு கடத்தப்படுவார்களா? மீண்டும் பாகிஸ்தானுக்கு. ஐயோ பாவம்.

மூன்று வார்த்தைகள்.

இந்த வருடம் அவளிடம் நிச்சயம் சொல்லிவிட வேண்டும். புத்தாண்டு வாழ்த்துக்கள்.   #யாருக்கோ #ஹைக்கூ.
பெண்களை கிண்டல் செய்து எழுதினால் பெயரை நார வைத்து விடுவார்கள்... பூ கதை உதாரணம். ( நிஜ பெண்ணாக இருந்தால்... )

இந்த பதிவை எழுதியவர் இவர் தான் என்று தோணுது.  டிவிட்டரில் வரும் வார்த்தைக்கோர்வைகள்  அப்பழுக்கு இல்லாமல் அப்படியே இருக்கு...

என்னிடம் சில கான்றேக்டர்ஸ் இருக்காங்க. அப்படி வேலை பண்ணுவாங்க. பெரிய லெவலில் ஐகேட் பேட்னியை கேட்கலாம். சிறு கம்பெனிகளுக்கும் வேலை உண்டு.

லைட்டு  போட்டாலும் வித்தியாசம் தெரியாது.

புத்தகம்  படிப்பதால் , குழந்தைகள்  நோய்கள்  தீருமா ? அம்மா  கேட்குறாங்க .  கருணாநிதி கட்டிய சொந்த வீட்டை தவிர அனைத்தும் ஆண்டி மேடம் ஆகுமா?

அணைத்து சினிமா அரங்குகளும் மருத்துவமனை ஆக்கப்படும். எல்லாவற்றிற்கும் போதி தருமா ஆஸ்பத்திரி என்ற பெயர் வைக்கவ்ப்படும்.

தமிழ்நாடு மந்திரிகள் பெங்களூரு செல்ல தடை விதிக்கப்படும்.  நாங்க எதுக்கு அங்கே வரணும்?

பிறந்த அத்தனை குழந்தைகளையும் அம்மா கட்சி தத்து எடுத்து டாக்டராகவோ கணினி பொறியாளராகவோ ஆக்கும்.

எப்படி  தான்  தாம் உயர்ந்த  ஜாதி என்று காட்டுவதாம்?  சட்டில் ரேபெரன்ஸ்.

கம்பெனியில் இருக்கும் எல்லோரும் அப்படி நடந்துக்கொண்டால் என்ன செய்வதாம்?

உலகத்தின் பெரிய நாய் உங்கள் ஊரில் இருக்குதாம். டிஸ்கவரி  சேனலில் பார்த்தேன்.

இன்றும் பெர்சனல் லோன் வேண்டுமா என்று கேட்டு ஆட்கள் கூப்பிடுறாங்க...  லஞ்சு சாப்பிடும் சமயம்.


எடுக்க முடியாததை பிரித்து கொடுங்கள். நிறைய பேர் ப்ரோஜெக்ட்ஸ்  தேவை என்று இருக்காங்க. சக்சஸ்ஸை பொருத்து பேமண்ட்ஸ்  என்று வைக்கலாம்.

இன்று அநேகல்லில் மகனோடு மணி நேரம் கிரிக்கெட் ஆட்டம்.  பந்து பொருக்கி கை காலெல்லாம் வலி.   மதிய உணவு ராகவேந்திரா மெஸ்ஸில். அருமை. ரூ 20 சாப்பாடு.

மேனேஜராக  இருப்பது எப்படி என்கிற புத்தகம் உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறேன்.  ஒரு லிங்க் அனுப்பினேன். பார்த்தீங்களா?

இம்போர்ட் டேக்ஸ் எவ்வளோ கட்டனும் ஆர்டர் பண்ணினால்  ?   நீங்கள் நண்பர் மூலம் வாங்கியது தெரியும்.

இங்களிடம் வேலை பார்த்த ஒருவர், உங்களுக்கு மேனேஜர் ஆகும் நிலைமை எப்படி? எனக்கு பிசினஸ் பார்ட்னர் ஆனவர்கள் நிறைய பேர் உண்டு.  நன்று.

Wednesday, November 02, 2011

காலத்தின் கேடு

சோசியல் நெட்வர்க் என்று மக்கள் ஒட்டிக்கொண்டு டைம் வேஸ்ட் பண்றாங்க... இது  ஒரு மாயவலை.  காலத்தின் கேடு.  ராமன் ஒவ்வொரு நண்பரிடமும் சொல்லிக்கொண்டு இருந்தான்.

அவன் வேலை செய்யும் ஐ.டி. துறை அப்படி.

எங்கு பார்த்தாலும் மொபயிலிலோ அல்லது லேப்டாபிலோ ஏதாவது நெட்வர்க்கில் எதாவது தட்டச்சு செய்து தங்கள் உணர்வுகளை பதித்துக்கொண்டு இருப்பார்கள். சில பாவப்பட்ட ஜனங்கள், பெண் பெயரில் எழுதும் ஆண்களை நம்பி, வேலை செய்யாமல் அவர்கள் மேனேஜர்களிடம் ( டேமேஜர்கள் என்பார்கள் ) திட்டு வாங்கிக்கொண்டு லேட்டாக வேலையை முடிப்பார்கள்!

ராமன் அந்த கூட்டத்தை சேராமல், தன வேலை மட்டும் செய்துக்கொண்டு இருப்பவன்.  வெட்டுக்கு சென்றாலும் மனைவி, மகள் என்று நின்றுவிடும் அவன் உலகம். அவர்கள் இருவரை சுற்றியே அவன் வாழ்க்கை பாதை அமைந்தது. ஒன்பது வருடங்கள் ஆகியிருந்தது அவர்கள் திருமணம் நடந்து, சாட்சியாக எட்டு வயது மகள் வர்ஷினி... அதிகமாக பீஸ் வாங்கிக்கொண்டு அரைகுறையாக பாடம் நடத்தும் ஒரு ஆங்கில வழி பள்ளியில் மூன்றாம் வகுப்பில் இருந்தாள்.  

அவர்கள் வாழ்ந்தது மயிலாப்பூர் ஏரியாவில் ஒரு இரண்டு பெட்ரூம் அபார்ட்மென்ட். மனைவியின் கடவுள் பக்தி அதிகம் என்பதால், டைடல் பார்க் சென்று வர தூரம் அதிகமென்றாலும் கோவில்கள் இருக்கும் ஏரியாவில் வீடு தேடினான். அவர்கள் விருப்பம் மாதிரியே அளவான விலையில் அந்த வீடு கிடைத்தது. நல்ல நண்பர்களும், உதவும் மனப்பான்மையோடு இருக்கும் மனிதர்கள் இருக்கும் ஏரியா எனபதை அவன் அபார்ட்மென்ட் பறை சாற்றியது .

எப்போதாவது கோவையிலிருந்து சென்னைக்கு வரும் அவள் பெற்றோரே அவளுக்கு விருந்தினர்.  வெளிநாட்டில் சென்று செட்டில் ஆக வேண்டும் என்ற விருப்பத்திற்கு மாறாக சென்னையிலே இருந்துவிட்டபடியால்,  பொள்ளாச்சியில் இருக்கும் அவன் பெற்றோர் அவன் வீட்டுக்கு அதிகம் வந்து செல்வதில்லை. "உனக்கு எதுக்குடா அவ்வளவு செலவு செஞ்சு படிக்க வச்சோம்? அமெரிக்காவிலே இருக்க வேண்டியது தானே? இங்கிருந்து என்னத்த கண்டே... " என்று நொந்துக்கொண்டார்கள்.  இதற்கும் அவன் தங்கைக்கு வெளிநாட்டு மாப்பிள்ளை பார்த்து தான் அவன் செலவில் கல்யாணம் செய்து வைத்தார்கள்.

*****

ஒரு நாள் மதியம் அவனை அவன் மனைவி ஜானகி அவசரமாக அழைத்தாள்... "உடனே வாங்க, ஸ்கூலில் வர்ஷினி மயங்கி விழுந்திட்டா... நான் அவளை காலீஸ்வராலே  அட்மிட் பண்ணியிருக்கேன்.  ... "  விம்மினாள்.

கிடக்குறது வேலை என்று அவன் மேனேஜரிடம் சொல்லிவிட்டு, விழுந்தடித்துக்கொண்டு ஓடி வந்தான். ஒரே மகள். போதும் என்று பொத்தி பொத்தி வளர்த்துக்கொண்டு இருக்கிறார்கள் ஆயிற்றே.

வர்ஷினி சோகமாக படுத்துக்கொண்டு இருந்தாள். பக்கத்தில் ஜானகி தேற்றிக்கொண்டு இருந்தாள்.

டாக்டர்கள் பல வித டெஸ்ட்கள் செய்தார்கள். அவன் கம்பெனி மெடிகல் இன்சூரன்ஸ் இருந்ததால் கவலை இல்லை. இருந்தாலும் குழந்தை நன்றாக வேண்டும் என்ற ஒரே எண்ணம் தான். 

வேலை பயம். போன் கால்கள் வந்த வண்ணம்  இருந்தன. அடிக்கடி சிறு ஈமெயில்கள் அனுப்ப வேண்டி இருந்தது....

டயபடிக்ஸ் ஆக இருக்கும் என்று சந்தேகித்தார்கள் டாக்டர்ஸ். பல வித டெஸ்ட் முடிவுகள் ஒன்றுமே தெளிவாக இல்லை.

"சரி அப்போல்லோ போய் ஒரு செகண்ட் ஒபினியன் எடுத்திடுவோம்... " வர்ஷினி மிகவும் மயக்கமான நிலையில் இருந்தாள்.  "இரு டாக்டரோடு பேசி பார்த்திடுவோம் ஜானு.. " அவன் குரல் கம்மியது.

அந்த மூன்று மாடி மிடில்க்லாஸ் ஆஸ்பத்திரியின் டாக்டர் ரூமை நோக்கி நடந்தான்.

டாக்டர் காமேஷ் அவனோடு பேசினார். 

"மிஸ்டர் ராமன், வர்ஷினிக்கு க்ளுகோஸ் லெவல் இறங்கவே இல்லே. கவலைப்படவேண்டாம்... நானும் இங்கிருக்கிறே  பல பெரிய ஆஸ்பிடல்ஸ்லே வேலை செய்யும் என் நண்பர்கள் மூலம், இந்த வித்தியாச காய்ச்சல் பற்றி விசாரிசிருக்கேன்... நாங்களும் முயற்சி பண்றோம்... மனசு தளராதீங்க... ப்ளீஸ். ".

ராமனுக்கு ஒன்றும் புரியவில்லை.  "டாக்டர் அப்படி என்ன புதுசா... உங்களுக்கு தெரியலைனா யாரை தான் கேட்பது?"  கண்களில் கண்ணீர் தாரை தாரையாக வந்தது அவனுக்கு.

அவன் தோல் மீது கை வைத்து டாக்டர் காமேஷ் தேற்றி விட்டு சென்றார்.

*****

விஷயம் கேள்விப்பட தங்கை சுமித்ரா அமெரிக்காவில் இருந்து தொலைபேசினாள். விவரம் எல்லாம் சொல்லிய அவன், யாராவது அங்கு வர்ஷினி கேசை பற்றி விசாரித்து விவரம் கொடுக்க முடியுமா என்று கேட்டான்...

"இமெயில் பண்றேன்".. என்றவாறு.. டாக்டர் ஆபிசை நோக்கி தந்தான். "டாக்டர் தங்கைக்கு விவரம் அனுப்பினால் எதாவது ஹெல்ப் அமெரிக்காவில் இருந்து கிடைக்கலாம்... "

"பெங்களூரில் டிஸ்டன்ட் மெடிகல் ஹிஸ்டரி டேடாபேஸ் வைத்து நடத்தும் என் இன்டர்நெட் கம்பெனி நண்பர் விஜயிடம் உங்கள் மகள் கேஸ் ஹிஸ்டரி, பேர் விவரம் இல்லாமல், அனானிமஸா போட சொல்லி கேட்டிருக்கேன். அதை பார்த்து யாரவது நிச்சயமா விவரம் கொடுப்பாங்க... இன்டர்நெட்டின் பலம் உங்களுக்கு தெரியாததா... "

" ஆமாம் டாக்டர். ட்ரை பண்ணுங்க. அந்த சைட் கேஸ் நம்பர் கொடுங்க. தங்கைக்கு அனுபுறேன். அவள் டாக்டர்ஸ் ப்ரெண்ட்ஸ் விசாரித்து சொல்றேன் என்று சொல்லியிருக்காங்க...". அழுகையாக வந்தது... 

ரூமிற்கு வந்த அவன்,  வர்ஷினிக்கு பக்கத்தில் ஜானகி மிகுந்த சோகத்தில் இருந்தாள் பார்த்து மேலும் கண் கலங்கினான். "சே என்ன வாழ்க்கையடா  இது... "... மனசு விம்மியது.

"ஜானு டாக்டர் டீடெயில்ஸ் கொடுத்திருக்கார். சுமித்ராவுக்கு அனுப்புறேன். ப்ரெண்ட்ஸ் கிட்டே கொடுக்கிறேன். யாரவது ட்ரீட்மென்ட் டீடெயில்ஸ்   கொடுப்பாங்க...  வர்ஷுக்கு ஒன்னும் ஆகாது.."

டாக்டர் காமேஷ் விவரம் கொடுத்ததை அவன் தங்கைக்கு மெயில் செய்தான். நெருங்கிய நண்பர்களிடமும் சொன்னான்.  "பயப்படாதே... ராமன் " என்று ஆறுதல் கூறினார்கள். " விவரம் கிடைத்தவுடன் நிச்சயம் அனுப்புறோம் ... " என்று அவன் மனதை தேற்றினார்கள்.
இரவெல்லாம் தூக்கமில்லை அவனுக்கு.  வர்ஷிணியும் காய்ச்சலால் விட்டு விட்டு எழுந்துக்கொண்டு இருந்தாள். 

அதிகாலை ஐந்து மணி அளவில், சுமித்ரா ட்ரென்டனில் இருந்து தொலைபேசினாள். "அண்ணா வர்ஷினிக்கு ஒரு ப்ராப்ளமும் இல்லே. கோகோ கேன்டியாசிஸ் அமீபையோசிஸ் வைரஸ் தான் தாக்கி இருக்கும் என்று சொல்றாங்க இங்கே ஒரு டாக்டர். ஈமெயிலே எல்லா விவரமும் அனுப்பி இருக்கேன். அதை டாக்டர் கிட்டே கொடுத்திடுங்க... கவலைப்படாதே.. "


 "தேங்க்ஸ் சுமித்ரா...  டாக்டர் என்ன சொல்றார்னு திருப்பி மெயில் பண்றேன்... "  ராமனுக்கு ஒரு வித மகிழ்ச்சி எண்ணம் வந்தது.

 ****

உடனடியாக டாக்டர் காமேஷ் அந்த இமெயில் விவரங்களையும், மற்ற டாக்டர்களோடு பேசி, உடனடியாக அந்த வைரசுக்கு தகுந்த ஆண்டிபயாடிக் கொடுக்க ஆரம்பித்தனர்.  சந்தேகங்களை, விவரம் கொடுத்த பீடியாட்ரிக் ஸ்பெசலிஸ்ட் மூலம் தீர்த்துக்கொண்டு ட்ரீட்மென்ட் நடந்தது.

போதி தருமராக வந்த அந்த இன்டர்நெட் டேடாபேசுக்கு மனதார நன்றி செலுத்தினான்.

மூன்று நாட்களில் வர்ஷினி பூரண நலன் அடைந்தாள். மகிழ்ச்சியாக வீடு திரும்பினார்கள்.

அவன் முகத்தில் இன்டர்நெட் நண்பர்கள் இப்படியாவது உதவினார்களே என்ற மிகுந்த சந்தோசம்.  

ஒரு வகையில் தண்டமாக காலத்தின் கேடாக வெட்டிப்பொழுது போக்கும் இன்டர்நெட் சாதனம், தன மகளுக்கு உதவியதில் அவனுக்கு பரம திருப்தி.

வளரும் நாடான இந்தியாவில் ஒரு பீடியாட்ரிக் ஸ்பெசலிஸ்ட் ஆஸ்பத்திரி இல்லாதது எவ்வளவு கொடுமை...

******


இந்த கதை வம்சி சிறுகதை போட்டிக்கு (2011) எழுதப்பட்டது.

வம்சி நடத்தும் பதிவர்களுக்கான சிறுகதைப் போட்டி!

Monday, October 31, 2011

காதல் ஒரு பட்டாம்பூச்சி

இதை  தான்  எதிர்பார்த்தேன். ஒரு வேலையும் ஓட மாட்டேன் என்கிறது. ஜீசஸ் காப்பாற்றுவாராக.  

கொஞ்சம் போதையில் இருந்தான்.   காதல்!

சேம்சன் நன்றாக வேலை செய்யக்கூடியவன்... ஒரு பேச்சுக்கு மறு பேச்சு கேட்கமாட்டான்... வேலை முடியும் நிச்சயம்...  கணினி துறையில் இருப்பவர்களுக்கு ஒரு யூனியன் தேவை என்பதில் பிடிவாத கொள்கை கொண்டவன். இன்னும் அதற்கு விடிவில்லை.

அவனுக்கு இப்போது ஒரு காதல் வைரஸ் வந்து துன்புருத்துது  ...  ஒரு ஏஞ்சலாக அவன் மனதில் அலை பாயுது.

அவள்  ராஜி.   கம்பெனியில் கிரிப்டோ ப்ரோக்ரேமர்...  (குறியீட்டு கணினி எழுதுனர்).   அடிக்கடி அவனை கேண்டீனில் சந்திப்பவள்....

அவனுக்கு சளி இருமல் என்றால், விக்ஸ் தருமளவு ஒரு இன்டெரெஸ்ட்.... ஆனாலும் காதல் கத்திரிக்காய்  இல்லை.

 நல்ல பழக்கங்கள் நிறைந்தவன்.   வைனோடு சரி.  ஜீசஸின்  ரத்தம்! அமெரிக்காவில் சில காலம் வாழ்ந்த போது லாங் ஐலேண்ட் ஐஸ்டு டீ ஆல்கஹால் இருக்கும் என்று தெரியாமல் குடித்தவன்... நாபா வேலியில் எல்லாரையும் போல வைன் குடித்தவன்...

ராஜி வீட்டில் அமெரிக்கா மாப்பிள்ளை நிச்சயத்து விட்டார்கள் ... பேர் என்னவோ சண்முகம் ... என்று  கேள்விப்பட்டவுடன் தான் அவனுக்கு உதறல் எடுத்தது....  அவ்ளோ தானா?  அவன் பெரிய சம்பள படிப்பு கிராக்கியா இருக்கும்!

எப்படி இதை தடுப்பது, என் மனைவியாக ஏற்பது? நடக்குமா? மதம் தடுக்குமா?

*****

எப்போதும் போல அமெரிக்க மாப்பிள்ளை என்றதும், சந்தோசமாக இருக்கும் பெண்களை விட அவள், சிறிது வித்தியாசமாக காணப்பட்டாள்...   எப்போதும் ஒரு பதற்றம்...

சோகம் இல்லை.... ஆனால் கண்களில் ஒரு விரட்சி...

சேமசன் - உன்னோடு பேசணும் என்றாள்...  நான்கு மணி டீ ப்ரேக்.

சரி கேண்டீன் போலாம் ராஜி... சேம்சனுக்கு ஒரு குறுகுறுப்பு..  என்னவோ நடக்குது...  இளையராஜாவும், ரஹ்மானுக்கு ஆளுக்கு ஒரு மூலையில் அவன் மூளையில் பி.ஜி.எம் செய்தார்கள்...

அப்போது அவன் செல்போன் அலறியது... என்ன கொடுமையோ...  மேனேஜர் கூபிடுறார்... அஞ்சு நிமிஷத்தில் வர்றேன்.

ராஜி மௌனித்தாள்....  "அப்புறம் க்யுப் பக்கம் வாங்க சேம்! நிச்சயம் பேசணும்!"
 
வர்றேன்...  சேம் விடுபட்டான்...

இருவரும்  அந்த ஷனத்திலிருந்து  விடுபட்டனர்.

*****


ரவி.. மிகவும் ஆஜானுபாகுவான ஆள்... செகூரிடி சாப்ட்வேர் எக்ஸ்பெர்ட்... தொழில் முறையில் எல்லாம் சேமிற்கு சொல்லிக்கொடுத்தவர்.  சேமின் மேனேஜராக இருந்தாலும் ஒரு நண்பராக இருப்பவர்.....

உட்காருப்பா சேம.

லிச்சென் .... நமக்கு ஒரு ரெண்டு பேரை இன்வெஸ்டிகேட் பண்ணனும்.  சேலஞ்சிங் கேஸ். க்யுப்வால்ட் க்ளையன்ட் ரிகுவேஸ்ட் ... உன்னை விட்டால் வேற ஆள் இல்லே. அவங்க சப்போர்ட் பண்ற பேன்க் நெட்வர்கில்  ஹேக் பண்றாங்க.  இப்போ ஒரு மாசத்திலே நானூறு  கிரெடிட் கார்ட்   நம்பர்ஸ் திருடி இந்தியாலே விற்றுவிட்டாங்க....   அவ்வளவு ஈசியா அந்த கம்பெனி கார்டை மிமிக் பண்ணி யூஸ் பண்ண முடியாது. பாஸ்வோர்ட் போக, ஐரிஸ் ஸ்கேன் வேண்டும்.... எல்லாமே இந்தியாலே செலவு ஆகியிருக்கு...  ஐரிஸ் ஸ்கேன் இமேஜிஸ் எடுக்கிறது ரொம்ப கஷ்டம்.  ஒரு பெரிய லாஜிக் செகுவேன்ஸ் இருக்கு. இருந்தாலும் ரெண்டு மில்லியன் செலவு பண்ணியிருக்கான் களவானி ஒருத்தன்... அமெரிக்காவிலே ..  பாஸ்டனில் இருக்கான்.

ரெகுலரா ஹேக் பண்ணின ரெண்டு ஐ.பி. அட்ரெஸ் கிடைச்சது... ஒன்னு.... கிளையன்ட்  கிட்டே வேலை பார்க்கும் ஆள் ஒருத்தன், இன்னொருத்தன் நம்ம கம்பெனி ஆள்.

அவன் பேரு எஸ்.பி.கோகுல் .  அவனுக்கு இந்தியாலே ஒரு ஹெல்பர் ஆள் இருக்கான்... பேரு விஷ்ணுனு தகவல் கிடைச்சிருக்கு...  அந்த பேர்லே நம்ம கம்பெனிலே யாரும் இல்லே... இன்னும் ஒருத்தர் நம்ம  கம்பெனியில்  உள் இருந்து ஹெல்ப் பண்றாங்க... யாருன்னு தெரியாது.

இவெங்க ஹெகிங் நெட்வர்க் சிம்பிளா இருக்கு... ஆனா எப்படி அவன ஐரிஸ் ஸ்கேனை எடுத்தாங்க ...  தெரியலே....  அதை தான் நீ கண்டுபிடிக்கணும்...

இந்த இந்த ரெண்டு ஐ.பி. அட்ரெஸ்... ஒரு காகிதத்தில் குறித்துக்கொடுத்தார்     ரவி... .  எப்படியோ உன் செகூரிடி இன்வெஸ்டிகேடிவ் இன்டலிஜென்ஸ்  இதுக்கு வேலை பார்க்கணும்...

ஓகே சார்.  சேம மனதில் சஞ்சலம்....  சே... எதோ மூடில் இருந்தேன் , இப்போ இது வேற.

சரி சொந்த விஷயம் நிற்கட்டும்.  கம்பெனி வேலை முக்கியம்...

அதில் ஐக்கியமானான்.


******

ஐரிஸ் ஸ்கேன் இமேஜஸ் எங்கே எடுத்திருப்பாங்க?  அந்த கம்பெனி... ஆளே, பேங்கின் நெட்வர்க்கில் இருந்த எடுக்க முடியாதே?   க்யுப்வால்ட் பெரிய கம்பெனி ...

செகூரிடி பாஸ்வர்ட் என்ன?

என்கோடர் சாப்ட்வேர் எழுதினது  ராஜி தானே... கேட்டிடுவோம்.  அவ தான் பேசணும் என்றாளே...  மறந்திட்டோம்....

அவள் க்யுபிற்கு சென்றான்.   சாயந்திரம் ஆறு மணி...  கிளம்பிட்டாளா ?

ராஜி டெஸ்க் மீது  ஒரு செல்போன், சினுங்கிக்கொண்டு இருந்தது. இரண்டு ஸ்லிப் பேப்பர்....

[Savaal%255B3%255D.jpg]

இரண்டு ஸ்லிப்புகள்...  எதற்கு ராஜி டெஸ்கில்?

ஒன்று ...  விஷ்ணு  யாருக்கோ Sir  போட்டு எழுதிய மெயில்.... snippet .  யார் அந்த சார்?

இன்னொன்று ...      விஷ்ணு கோகுலுக்கு எழுதிய மெயில் ... குறியீடு? பாஸ்வர்டுடன்...

சேமுக்கு புரிந்தது...  அது தான் அந்த ஐரிஸ் ஸ்கேன் இமேஜஸ் க்யுப்வால்டின் பாஸ்வர்ட்...  இல்லாவிட்டால்  வேறு ஒரு அக்கவண்டின்   பாஸ்வர்ட்? குழம்பியது...


மீண்டும் செல்போன் சிணுங்கியது....


அப்போது... ராஜி வந்தாள்... செல்லை அணைத்தாள்.

சேம்... எல்லாமே சொல்லிடறேன்....  நீ தான் என்னை காப்பாத்தணும் ....  அதை பத்தி பேச தான் உன்னை கேண்டீனுக்கு கூப்பிட்டேன்....

*****

சொல்லு...  சேம் மவுனத்தில் ஆழ்ந்தான்...

ராஜி சொல்ல ஆரம்பித்தாள்.

பாஸ்டனில் இருக்கும் எஸ்.பி.கோகுல்  தான் என் பியான்சே.  யாருக்கும் நான் அவர் முழு பேரை சொல்லலே. சண்முகம் என்றே சொன்னேன். சண்முக பிரசாத் கோகுல்.  அவர் அந்த அமெரிக்க பேங்கின் ஐ.டி. டேபார்ட்மேண்டில்  சீனியர் ப்ரோக்ராமர்.

நிச்சயம் பண்ணினவுடன், அவர் அமெரிக்க போயிட்டார் போனில் பேசி பழகினோம்.

ஒரு நாள் கூப்பிட்டார் ..     அவர் ஒரு ஆபத்தில் மாட்டிகிட்டதாகவும் ... அவரோட சிஸ்டம் பாஸ்வர்டை யாரோ ஹேக் பண்ணி, க்யுப்வால்டை திறத்து நானூறு ஐரிஸ் ஸ்கேன் இமேஜசை, கார்ட்  டிடேயில்சை  எடுத்திட்டாங்க... இந்தியாலே 2 மில்லயன் டாலர் அளவு செலவு பாண்ணியிருகாங்க...

பொறி வைத்து பிடிக்கணும்னு அவர் விஷ்ணுங்கிற  இன்பார்மரை கண்டுபிடித்தார்...  அந்த விஷ்ணு வேற யாரும் இல்லே ... நம்ம ப்ரோக்ரேமர்  ராமு தான் அது. அது ஒரு நிக் நேம். யாரோ ஒரு பெங்காலிக்கு கார்டு டீடெயில்ஸ்   இமேஜ் வால்ட் பாஸ்வர்டோட மாற்றி விற்றிருக்கான். அதனாலே தான் கோகுலாலே அந்த வாலட்டை கொஞ்ச நாள் அக்சஸ் பண்ண முடியலே. அது அவர் என்னை பெண் பார்க்க இந்திய வந்த நேரம்.

நான் தான் ராமு கிட்டே பேசி, அந்த பாஸ்வர்டை வாங்கி கொடுத்தேன். அதுலேயும் டபுள் க்ராஸ் பண்ணியிருக்கான் ராமு....  அந்த மெயிலை நான் பார்த்துட்டேன் ... பிரிண்ட் பண்ணி உன்கிட்டே காட்டி ஹெல்ப் கேக்கலாம்னு வந்தேன்... நீ கால் வந்து பிசியாயிட்டே...


இப்போ என்ன பண்றது சேம்... கோகுலை காப்பாற்றனும் . ஹெல்ப் பண்ணுங்க ப்ளீஸ்....

*****

இப்படி தான்  வாழ்க்கை போகனுமா... ?

சேம்  உற்று பார்த்தான்...... சரி ராஜி.... எப்படியோ உன் சண்முகத்தை காப்பாத்துறேன் ...  இது உன்மேலே நான் வச்சிருந்து காதலாலே... ஆனா உன்னை என்னாலே  எப்பவோம் மறக்க முடியாது..

அவன் கண்களில் கண்ணீர்....  காதல் என்ற கத்திரிக்காய் பண்ணிய விளையாட்டு ...

எப்படியாவது அவளை காப்பாற்ற வேண்டும். காதலுக்கு இது ஒரு மரியாதை.

மங்கிய வெளிச்சத்தில்  ஜன்னல் வெளியே ஒரு பட்டாம்பூச்சி பறந்து சென்றது.

அது தான் காதலா?


*****

சில நாட்கள் கழித்து சேம்சன் இன்வெஸ்டிகேட் செய்து, அந்த வெளிநாட்டு கும்பலை அடையாளம் காண உதவி செய்தான்.

கல்யாணம் இனிதே நடந்து முடிந்தது.

கோகுலும் ராஜியோடு தன கல்யாண வாழ்க்கையை சந்தோசமாக கழிக்க ஆரம்பித்தான்.

சேம்சன் மனதில் தான் இனம் புரியாத விரக்தி. அவன் அப்பா அம்மா பார்த்த பெண்ணை மனம் முடித்து, வாழ்க்கையை ஒவ்வொரு படியாக அனுபவித்து வாழ்ந்தான்.

 இப்படியாக கதை முற்று பெறுகிறது.

Wednesday, June 16, 2010

நாளை பொழுது இனிய பொழுதாக அமையட்டும்

எனக்கு ட்விட்டர் மூலம் ஒரு கதை வந்தது...
யாத்ரிகன் என்பவர் அனுப்பியதாம்...
*** 
 
நாளை பொழுது இனிய பொழுதாக அமையட்டும்! வாழ்த்துகள் !!

ஒரு நகரத்திற்கு சட்டமிருந்தது. அதன்படி யார் வேண்டுமென்றாலும் அந்த நகரத்திற்கு ராஜாவாக வரமுடியும். ஆனால், அந்தப் பதவி ஐந்தாண்டுகள் மட்டுமே! ஐந்தாண்டு முடிந்த அடுத்த நாளே மன்னனை ஆற்றின் கரைக்கு மறுபுறம் உள்ள காட்டில் விட்டுவிடுவார்கள்.

அந்தக் காட்டில் மனிதர்கள் கிடையாது. வெறும் கொடிய விலங்குகள் மட்டுமே! மன்னன் காட்டிற்குள் நுழைந்தால் போதும்; வனவிலங்குகள் கொன்று தீர்த்துவிடும். இந்த சட்டத்தை யாராலும் மாற்ற இயலாது. இந்த நிபந்தனைகளுக்கு ஒப்புக் கொண்டவன் மட்டுமே அரியணையில் அமரப் பொருத்தமானவன். ஆக, மன்னனாக முடிசூட்டிக் கொண்டவனின் தலையெழுத்து, ஐந்தாண்டுகளுக்குப் பின் கட்டாய மரணம்.

இந்தக் கடுமையான சட்டத்துக்கு பயந்தே யாரும் அந்தப் பதவிக்கு ஆசைபடாமலிருந்ததால் அந்த அரியணை பெரும்பாலும் காலியாகவே இருந்தது. இருப்பினும் ஒரு சிலர் 'எப்படியிருந்தாலும் சாகத்தானே போகிறோம்; மன்னனாகவே மடியலாமே!' என்று பதவி ஏற்பதுண்டு. அதிலும் பாதி மன்னர்கள் இடையிலேயே மாரடைப்பால் மரணமடைவதுமுண்டு.

இப்படி ஒரு மன்னனுக்கு ஐந்து ஆண்டு ஆட்சிக்காலம் முடிந்தது. அன்று ஆற்றின் கரையைக் கடந்து காட்டிற்குச் செல்ல வேண்டும். அவனை வழியனுப்ப நாடே திரண்டிருந்தது.

மன்னன் வந்தான், அவனுடைய சிறப்பான ஆடைகளையும் நகைகளையும் அணிந்து, முடிசூடி, தங்க வாளேந்தி வைரங்கள் மின்ன மக்கள் முன் நின்றான். மக்கள் வாயைப் பிளந்தனர் ''இன்னும் அரை மணிநேரத்தில் சாகப் போகிறான் ; அதற்கு இவ்வளவு அலங்காரமா!''

தான் செல்லவிருந்த படகைப் பார்த்துவிட்டு சினத்துடன் கூறினான், ''மன்னன் செல்லும் படகா இது! பெரிய படகைக் கொண்டு வாருங்கள்! நான் நின்றுகொண்டா செல்வது! சிம்மாசனத்தைக் கொண்டு வாருங்கள்!''

கட்டளைகள் பறந்தன; காரியங்கள் நடந்தன! சற்று நேரத்தில் அலங்கரிக்கப்பட்ட அழகான படகு ஆற்று நீரைத் கிழித்துக் கொண்டு மறுகரை நோக்கிப் பயணித்தது.

மக்கள் திகைத்து நிற்க, மன்னன் கையசைக்க பயணம் தொடர்ந்தது.

மிகவும் அதிர்ச்சியடைந்தவன் படகோட்டியே! காரணம், இதுவரை அவன் மறுகரைக்கு அழைத்துச் சென்ற எந்த மன்னனும் மகிழ்ச்சியாக சென்றதில்லை. அழுது புலம்பி, புரண்டு, வெம்பிச் செல்வார்கள். இவனோ, மகிழ்ச்சிக் களிப்பில் பொங்கி வழிகிறான்.

படகோட்டி பொறுத்துக்கொள்ள முடியாமல் கேட்டான் ''மன்னா! எங்கே செல்கிறீர்கள் தெரியுமா?''

''தெரியும் மறுகரைக்குச் செல்கிறேன்!''

''அங்கே சென்றவர்கள் திரும்ப இந்த நகரத்திற்கு வந்ததில்லை தெரியுமா?''

''தெரியும். நானும் திரும்ப இந்த நகரத்திற்கு வரப் போவதில்லை!''

''பின்னே எப்படி உங்களால் இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்க முடிகிறது?''

''அதுவா! நான் என்ன செய்தேன் தெரியுமா? ஆட்சிக்கு வந்த ஓராண்டு முடிவில் ஆயிரம் வேட்டைக்காரர்களைக் காட்டிற்கு அனுப்பினேன்; அவர்கள் கொடிய விலங்குகளை வேட்டையாடிக் கொன்று விட்டார்கள்!

இரண்டாமாண்டு முடிவில் ஆயிரம் விவசாயிகள் சென்றார்கள்; காட்டைத் திருத்தி உழுதார்கள்; இன்று ஏராளமான தானியங்கள் காய்கறிகள்.

மூன்றாமாண்டு முடிவில் ஆயிரம் கட்டடக்கலை வல்லுநர்கள், தொழிலாளர்கள் சென்றனர். இன்று வீடு, வாசல், அரண்மனை, அந்தப்புரம், சாலைகள் எல்லாம் தயார்!

நான்காம் ஆண்டு முடிவில் ஆயிரம் அரசு அதிகாரிகள் சென்றனர். நிர்வாகம் சீரடைந்தது. இந்த 4000 பேரும் தங்கள் மனைவி, குழந்தைகளுடன் சென்று அங்கே வாழ்கின்றனர்.

இப்போது நான் காட்டிற்குப் போகவில்லை; என்னுடைய நாட்டிற்குப் போகின்றேன்! சாகப் போகவில்லையப்பா, வாழப் போகின்றேன்! அதுவும் மன்னனாக ஆளப்போகிறேன்! உனக்கு ஒருவேளை அரண்மனைப் படகோட்டி வேலை வேண்டுமென்றால், இந்தப் படகோடு இப்படியே வேலைக்கு சேர்ந்து விடு!'' என்றான் மன்னன்.

ஒரே ஒரு கேள்வியை மட்டும் எடுத்துக் கொள்ளலாம்.

மன்னனின் வெற்றிக்குக் காரணங்கள் யாவை?

பல காரணங்கள் இருந்தாலும் குறிப்பாக இரண்டினைக் கூறலாம்.

ஒன்று : ஐந்து ஆண்டுகளுக்குப் பின் உயிர் வாழவேண்டும்; அதுவும் மன்னனாகவே வாழவேண்டும் என்று முடிவு எடுத்தது.

இரண்டு : அந்த முடிவினை அடைவதற்காக திட்டமிட்டு உழைத்தது!

அந்த மன்னனுடைய வெற்றிக்கு மட்டுமல்ல; நாம் அனைவருமே வெற்றி பெறவேண்டுமென்றால் நமக்குத்தேவை ஒரு இலக்கை நிர்ணயித்தலும் அதற்காக திட்டமிடுதலும், திட்டமிட்ட பின் வெற்றி பெறும்வரை கடுமையாகவும் புத்திசாலித்தனமாக உழைப்பதுமே

இப்போது நீங்கள் என்ன செய்கிறீர்களோ அதுதான...

 நாளை பொழுது இனிய பொழுதாக அமையட்டும்! வாழ்த்துகள் !!

Tuesday, June 30, 2009

கடைசி பந்தில் ஸிக்ஸர்

என்ன சொல்வதென்றே தெரியவில்லை, அவன் அப்படி செய்வான் என்று!

அவன் மட்டும் கடைசி பந்தில் ஸிக்ஸர் அடிக்காவிட்டால், எங்கள் மானம் காற்றில் போயிருக்கும். எங்க டீம் அப்படியே எங்கேயோ தொலைந்து போயிருக்கும்! ஒன்றும் உருப்பட்டிருக்கமாட்டோம்.

நிற்க. இது என்ன லகான் கதையா! இல்லைங்க. முற்றிலும் புதுமைங்க. ஆனா நடந்து முடிந்த சம்பவத்தில் இதில் தொடர்புடையது.

கதை களம். கிரிக்கெட். ஸிக்ஸர். படிப்பு. சேலஞ். ப்லேஸ் பேக். 1986.

கதையின் நாயகன் சுந்தரவடிவேல் ஒரு கிரிக்கட் வீரன். இல்லை இல்லை. ஒரு வெறியன். அவனோடு சம்பந்தப்பட்டு ஒரு டீம். நன்றாக படிக்கவும் செய்யும்! இல்லையென்றால் எப்படி பர்ஸ்ட் க்ரூப் கிடைக்கும்?

அவர் படித்த திருப்பூர் பள்ளி கொஞ்சம் சுமாரானது என்றாலும், நல்ல கிரௌண்ட் கொண்டது! திறமையானவர்கள், யு.ஆர். ராதாகிருஷ்ணன் போன்றோர் ஆடியது, தமிழ்நாட்டு டீமுக்கு செல்ல வைத்தது! சனி ஞாயிறு இடம் பிடித்து ஆடுவது ஒரு வெரித்தனமான பொழுபோக்கு!

ப்ளஸ் டூ டீம் நாங்கள், பர்ஸ்ட் க்ரூப் வேறு. எஞ்சினீரிங், மெடிகல் என்ட்ரன்ஸ் என தயார் செய்த போதும், கிரிக்கெட் எங்களை வாட்டியது! ஒரு மேட்ச் விடாமல் பார்ப்பது தான் நாங்கள் இந்திய அணிக்கு செய்த கைம்மாறு! கிடைக்கும் வீட்டில், இடத்தில் மேட்ச் பார்ப்போம். அப்பா அம்மா தொந்தரவு வேறு இருக்கக்கூடாதே!

மேட்ச் நடக்கும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை க்ளாசில் கிட்டத்தட்ட ஒருவரும் இருக்கமாடோம். அப்போது ஏதாவது டெஸ்ட் வேறு இருக்கும்!

படிப்பு கெடுகிறது என்ற அக்கறை இல்லாமல், மொத்த கேங்கும் வெறியோடு கிரிக்கெட் பார்ப்பதே தொழிலாக இருந்தது! இந்திய ஜெயித்தால் கிடைக்கும் பாக்கெட் மணி பணத்தில், சரியான ட்ரீட் - ஐயர் கடை கேக். அப்புறம் தொடரும், வீதியில் கிரிக்கெட்!

படிப்பில், வாங்கும் மார்க்கில் க்ளாசில் எல்லோரும் கொஞ்சம் சுமார் தான்... எஞ்சினீரிங் மெரிட் சீட் கிடைக்குமா என்பதே சந்தேகமே. அப்போது மொத்தம் இரண்டாயிரம் கவர்ன்மென்ட் கோட்டா சீட் தான் இருந்தது! அதிலும் எலெக்ட்ரானிக்ஸ் கிடைப்பது குதிரைக்கொம்பு! கம்ப்யுட்டர் எட்டாக்கனி!

க்ளாசில் எங்களை எல்லாம் திட்டி விட்டு தான் மாஸ்டர்கள் எல்லோரும் பாடம் ஆரம்பிப்பார்கள். அதுவும் வெள்ளி லீவு போட்டிருந்தால், திங்கள் சரியான திட்டு தான்! எங்களை கண்டால் கொஞ்சம் கூட பிடிக்காத மேத்ஸ் மாஸ்டர் சந்தரசேகர் சேலஞ் வேறு செய்திருந்தார்! இப்படி கிரிக்கட்டில் அலையும் ஒருவனும் எஞ்சினீரிங், மெடிக்கல் சேர போகப்போவதில்லை என்றார்!

கிரிக்கெட் விளையாடிய பின், எங்கே போய் டுசன் போவது! பாதி விஷயம் க்லாசிலியே புரிந்துவிடும். அப்புறம் இருக்கவே இருக்கு நைட் அவுட் படிப்பு. எப்படியோ ப்ராக்டிக்கல் மார்க் வந்துவிடும், கரையேறி விடலாம் என்ற எண்ணம். பேச்செல்லாம், எப்.சி., பி.சி. கோட்டா, கட் ஆப்...

அவர் அப்படி சொன்னதில் இருந்து எங்க டீமுக்கு ஒரு ரோசம். எல்லோரும் சேர்ந்து ஒரு முடிவுக்கு வந்தோம். இந்திய தோற்றால், டிவி பார்ப்பதை விட்டு, கிரிக்கெட் ஆடுவதை அடியோடு நிறுத்திவிட்டு டீம் எல்லோரும் நன்றாக படித்து மாஸ்டர் மூஞ்சியில் கறியை பூசுவது என்று. இல்லாவிட்டாலும், படிப்பது இருக்கும், கொஞ்சம் கஷ்டமாயிருக்கும்! அவ்வளவுதான்!

இப்படியாக, எங்கள் டீம் ஆட்கள் மொத்தம் பதினைந்து பேர் - அடித்து பிடித்து, க்வேச்டியன் பேப்பர்களை தேடி, மேத்ஸ் ஸம்ஸ்களை எழுதி எழுதி பார்த்து... தமிழ் மற்றும் இங்கிலிசை பாஸாக மட்டும் படித்து... டைம் போய்க்கொண்டு இருந்தது, கிரிக்கெட் விளையாடுவது நின்றபாடில்லை! மேட்ச் பார்ப்பதும் நிற்கவில்லை. டீமின் மொத்த குடும்பமும் என்ன ஆகபோகிறதோ என்ற கவலையில் தினம், திட்டு குட்டு என்று இருந்தார்கள்.

அன்றைக்கு சார்ஜாவில் பைனல்ஸ். இந்தியாவும் பாகிஸ்தானும் சரியான போட்டி மேட்ச்.

சேடன் சர்மா வீசிய அந்த கடைசி பந்து, ஜாவத் மியன்டாட் அடிக்க, அது சிக்சருக்கு பறந்தது...

இந்தியா தோல்வி.

சுந்தரவடிவேல் என்னை பார்த்து சொன்னான், "டேய் விஜய் பாத்தியாடா, சாமியே நமக்கு வழி காட்டுச்சு! இனி படிப்பு தாண்டா கதி! "

எல்லோரும் ஆமோதித்தோம்!

பிறகு எல்லோரும் பதினைந்து திசைகளில் எஞ்சினீரிங், டாக்டர் என படித்தது நடந்தது...

இன்றும் நண்பர்கள் கூடும் போது, கடைசி பந்து ஸிக்ஸர் பற்றி பேசிக்கொள்வோம்! எப்படி மறக்க முடியும்?

***

உரையாடல் கதை போட்டிக்கு!

உரையாடல் போட்டி

சங்கமம்

Monday, July 21, 2008

ஒரு பக்கெட் தண்ணீர் : என் முதல் கதை

ஒரு பக்கெட் தண்ணீர்

என் பெயர் விஜய். நான் சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்கிறேன். எங்களுக்கு கிடைப்பது காலையில் குளிக்க ஒரு பக்கெட் தண்ணீர் தான். அதுவும் கிணற்று உப்பு தண்ணீர். இதற்கக்காகவே பாட்டி வீட்டிற்க்கு லீவு விட்டால் சென்று விடுவோம்.

திருப்பூரில் தண்ணீருக்கு எப்போதும் கஷ்டம் தான். 1977 இக்கு பிறகு எம்.ஜி.ஆர். ஆட்சியில் பனியன் ஏற்றுமதி தொழில் மிகவும் முன்னேற்றம் காணப்படுகிறது.

காடு கழனியில் வேலை செய்தவர்கள் இப்போது, எக்ஸ்போர்ட் கம்பெனியில்.
வருமானம் நன்றாக உள்ளது. ஆனால் தண்ணீர் மட்டும் பிரிச்சனை தான்.

ஒரு லட்சம் மக்கள் இருந்த ஊர் இப்போது ஐந்து லட்சம். அறை அடி பைப் மட்டும் அலாங் கொம்புவிலிரிந்து தண்ணீர் கொண்டு வர பயன் படுகிறது. பிரிட்டிஷ்காரன் போட்ட கட்டளை!

வருமானம் இருந்தும் என்ன பயன்?

ஒரு குடம் நீர் இருபத்தி ஐந்து பைசா. கிணற்று தண்ணீர்
குடம் பத்து பைசா குளிப்பதற்கு மற்றும் கழுவுவதற்கு!

ரோடில் போண்டா பஜ்ஜி விற்கும் கடையில் கை கழுவ தண்ணீர் கிடையாது. சிறு வயதில், சொயிங் சொயிங் என்று போண்டாகார அண்ணா சுடுவது பார்ப்பதற்கு கொள்ளை அழகு! கிடைக்கும் காகிதத்தில் துடைத்து கொண்டு, டோவுசரில் பின் பக்கம் தேய்த்துக்கொண்டு செல்வது ஒரு வாடிக்கை.

பாலச்சந்தர் திருப்பூருக்கு வந்து பார்த்த பிறகு தான் 'தண்ணீர் தண்ணீர்' படம் எடுத்தாக சொல்கிறார்கள்...

வெயில் காலத்தில் சுடு தண்ணீர் கிடையாது, கிணற்றிலிருந்து குடத்தில் அம்மா கொண்டு வரும் தண்ணீர் இளம் சூட்டில் இருக்கும். அதில் குளிப்பது அலாதி சுகம் தரும்.

குளிப்பதே ஒரு மிகுந்த பிரயாசை தான். அதுவும் ஒரு பக்கெட்டில் என்றால் சும்மா சொல்லக்கூடாது, கின்னேஸ் ரெகார்ட் தான். ஒரு மக் (சிறிய வாலி தண்ணீரில்) கால் கழுவவதை பற்றி எழுதி, உங்களை உவ்வே சொல்ல வைக்க எனக்கு முடியவில்லை. பிளுஷ் எல்லாம் கிடையது எடுப்பு பக்கெட் தான். அட்டாச்சிடு பாத்ரூம் பழக்கம் சென்னையில் மாத்திரம் இருந்தது. அதனால் தண்ணீர் குறைவான செலவு தான். என்ன பிரணயாமம் மூக்கை பிடிக்க பழக வேண்டும்!

சென்ட் போடுபவர்கள் அந்தே காலத்தில் பணக்காரர்கள். இந்த இடத்தில் இது எதற்கு? புரிந்தால் சரி. வெள்ளைகாரர்கள் பேப்பரில் தான் துடைபார்களாம்! அட ஆண்டவா, சரஸ்வதியை , எங்கெல்லாம் கொண்டு போகிறார்கள், என்று தாத்தா திட்டுவார், சிங்கப்பூரில் பார்த்த அனுபவம் சொல்லும் போது.

*****

நான் முதலில் ஒரு கப் தண்ணீரில் நின்று கொண்டு தலையில் விட்டு கொள்வேன்.

வழிந்தோடும் நீர் உடம்பை நனைக்கும். முகத்திற்கு சோப்பு போடுவேன். பிற்பாடு இன்னொரு மக் இல் நீர் ஊற்றினால் ஒரு ஏரியா முடிந்தது.

அந்த் ஈரம் உடம்பிற்கு சோப்பு போட உதவும். முதுகிற்கு ஒரு மக் நீர்.

பிறகு தொடை மற்றும் கால். வேலை முடிந்தது. குளிச்சு முடிச்சாச்சு.

இது ஒரு காக்கா குளியல் என்றும் சொல்லலர்ம்.

எங்கள் வழக்கப்படி ஆண்கள் ஜட்டி போட்டு தான் குளிப்பார்கள்!

ஜட்டியை பிழிந்து எடுத்து பக்கெட்டை பார்த்த போது, இன்னும் அரை கப் தண்ணீர் மிச்சம் இருந்தது, அதை அந்த ஓபன் பாத்ரூம் சுவர் மேல் உட்கார்ந்து இருந்த காக்கைக்கு வைத்துவிட்டு அடி எடுத்து வைத்தேன்!

வாரம் ஒரு நாள், தலைக்கு குளித்து, அம்மா வந்து முதுகு தேய்ப்பது (பத்து வயதிற்கு மேல் வெட்கம் பிடுங்கி கொள்ளும்) ஒரு தனி கதை.

*****

பின்குறிப்பு - இந்த கதை 1982 வில் எழுதியது. அமரர் சுஜாதாவின் படிப்பு ரொம்ப அதிகம் அப்போது. என் நண்பன் டி .வி . சுந்தரவடிவேலு தான் என்னுடைய கிரிடிக். அவருடைய அப்பா திருப்பூர் கே.எஸ்.எஸ்.ஹை ஸ்கூலிலே தமிழ் வாத்தியார்.

ஒரு பக்கெட் தண்ணீர்

ஒரு பக்கெட் தண்ணீர்

என் பெயர் விஜய். நான் சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்கிறேன். எங்களுக்கு கிடைப்பது காலையில் குளிக்க ஒரு பக்கெட் தண்ணீர் தான். அதுவும் கிணற்று உப்பு தண்ணீர். இதற்கக்காகவே பாட்டி வீட்டிற்க்கு லீவு விட்டால் சென்று விடுவோம்.

திருப்பூரில் தண்ணீருக்கு எப்போதும் கஷ்டம் தான். 1977 இக்கு பிறகு எம்.ஜி.ஆர். ஆட்சியில் பனியன் ஏற்றுமதி தொழில் மிகவும் முன்னேற்றம் காணப்படுகிறது.

காடு கழனியில் வேலை செய்தவர்கள் இப்போது, எக்ஸ்போர்ட் கம்பெனியில்.
வருமானம் நன்றாக உள்ளது. ஆனால் தண்ணீர் மட்டும் பிரிச்சனை தான்.

ஒரு லட்சம் மக்கள் இருந்த ஊர் இப்போது ஐந்து லட்சம். அறை அடி பைப் மட்டும் அலாங் கொம்புவிலிரிந்து தண்ணீர் கொண்டு வர பயன் படுகிறது. பிரிட்டிஷ்காரன் போட்ட கட்டளை!

வருமானம் இருந்தும் என்ன பயன்?

ஒரு குடம் நீர் இருபத்தி ஐந்து பைசா. கிணற்று தண்ணீர்
குடம் பத்து பைசா குளிப்பதற்கு மற்றும் கழுவுவதற்கு!

ரோடில் போண்டா பஜ்ஜி விற்கும் கடையில் கை கழுவ தண்ணீர் கிடையாது. சிறு வயதில், சொயிங் சொயிங் என்று போண்டாகார அண்ணா சுடுவது பார்ப்பதற்கு கொள்ளை அழகு! கிடைக்கும் காகிதத்தில் துடைத்து கொண்டு, டோவுசரில் பின் பக்கம் தேய்த்துக்கொண்டு செல்வது ஒரு வாடிக்கை.

பாலச்சந்தர் திருப்பூருக்கு வந்து பார்த்த பிறகு தான் 'தண்ணீர் தண்ணீர்' படம் எடுத்தாக சொல்கிறார்கள்...

வெயில் காலத்தில் சுடு தண்ணீர் கிடையாது, கிணற்றிலிருந்து குடத்தில் அம்மா கொண்டு வரும் தண்ணீர் இளம் சூட்டில் இருக்கும். அதில் குளிப்பது அலாதி சுகம் தரும்.

குளிப்பதே ஒரு மிகுந்த பிரயாசை தான். அதுவும் ஒரு பக்கெட்டில் என்றால் சும்மா சொல்லக்கூடாது, கின்னேஸ் ரெகார்ட் தான். ஒரு மக் (சிறிய வாலி தண்ணீரில்) கால் கழுவவதை பற்றி எழுதி, உங்களை உவ்வே சொல்ல வைக்க எனக்கு முடியவில்லை. பிளுஷ் எல்லாம் கிடையது எடுப்பு பக்கெட் தான். அட்டாச்சிடு பாத்ரூம் பழக்கம் சென்னையில் மாத்திரம் இருந்தது. அதனால் தண்ணீர் குறைவான செலவு தான். என்ன பிரணயாமம் மூக்கை பிடிக்க பழக வேண்டும்!

சென்ட் போடுபவர்கள் அந்தே காலத்தில் பணக்காரர்கள். இந்த இடத்தில் இது எதற்கு? புரிந்தால் சரி. வெள்ளைகாரர்கள் பேப்பரில் தான் துடைபார்களாம்! அட ஆண்டவா, சரஸ்வதியை , எங்கெல்லாம் கொண்டு போகிறார்கள், என்று தாத்தா திட்டுவார், சிங்கப்பூரில் பார்த்த அனுபவம் சொல்லும் போது.

*****

நான் முதலில் ஒரு கப் தண்ணீரில் நின்று கொண்டு தலையில் விட்டு கொள்வேன்.

வழிந்தோடும் நீர் உடம்பை நனைக்கும். முகத்திற்கு சோப்பு போடுவேன். பிற்பாடு இன்னொரு மக் இல் நீர் ஊற்றினால் ஒரு ஏரியா முடிந்தது.

அந்த் ஈரம் உடம்பிற்கு சோப்பு போட உதவும். முதுகிற்கு ஒரு மக் நீர்.

பிறகு தொடை மற்றும் கால். வேலை முடிந்தது. குளிச்சு முடிச்சாச்சு.

இது ஒரு காக்கா குளியல் என்றும் சொல்லலர்ம்.

எங்கள் வழக்கப்படி ஆண்கள் ஜட்டி போட்டு தான் குளிப்பார்கள்!

ஜட்டியை பிழிந்து எடுத்து பக்கெட்டை பார்த்த போது, இன்னும் அரை கப் தண்ணீர் மிச்சம் இருந்தது, அதை அந்த ஓபன் பாத்ரூம் சுவர் மேல் உட்கார்ந்து இருந்த காக்கைக்கு வைத்துவிட்டு அடி எடுத்து வைத்தேன்!

வாரம் ஒரு நாள், தலைக்கு குளித்து, அம்மா வந்து முதுகு தேய்ப்பது (பத்து வயதிற்கு மேல் வெட்கம் பிடுங்கி கொள்ளும்) ஒரு தனி கதை.

*****

பின்குறிப்பு - இந்த கதை 1982 வில் எழுதியது. அமரர் சுஜாதாவின்
கதை படிப்பு ரொம்ப அதிகம்