Showing posts with label அமெரிக்காவில். Show all posts
Showing posts with label அமெரிக்காவில். Show all posts

Wednesday, November 18, 2015

அமெரிக்காவில் வேலை தேடுகிறேன்

அமெரிக்காவில் வேலை தேடுகிறேன்

உதவி தேவை.
*****

நண்பர்களே... அமெரிக்காவில் வேலை தேடுகிறேன்.

ஐந்து வருடங்கள் 1994-99 அங்கு வேலை செய்துள்ளேன், மிச்சம் ஒரு வருடம் எச் 1 விசா இப்போது கிடைக்கும் என்கிறார்கள். கையில் வேலிட்   பி 1 விசா இருக்கு. கொஞ்ச நாளா விசனப்பட்டுகிட்டு இருந்தேன். இன்னைக்கு வா.மணிகண்டன் பதிவு "சொர்க்கமே ..." படிச்சேன்... ஒரு உந்துதல்... துள்ளல்னு கூட சொல்லலாம்.
 
அமெரிக்காவிலே யாரவது வேலைக்கு எடுத்துக்கொள்வார்கள் என்றால்... மேலாளர் போன் நம்பர் அல்லது இமெயில் கிடைக்குமா?

நெருங்கிய நண்பர்கள் யாரும் உதவுவதாக தெரியவில்லை. எல்லோரும் ஒரு விதமாக (இந்தியா திரும்பியதை... என் கஷ்டம் எப்படி அவர்களுக்கு தெரியும்?) தான் பார்க்கிறார்கள்....

பி. எஸ். ஜி லே  எஞ்சிநீரிங் படிச்சவுடன்... ஐ.டி. தொழில்... இப்போ 25 வருஷமாச்சு... கஷ்டப்பட்டு தான் சொந்த முயற்சியில் இவ்வளவு வெற்றி. குடும்பத்தில் அனைவரும் உதவி செய்தார்கள்.

என்னுடைய லின்க்டின் ப்ரோபையில் இங்கே பார்த்து... எனக்கு சரியான ஒரு வேலைக்கு ஏற்பாடு பண்ணவும். இவ்வளவு நாள் யாரிடம் கேட்பது என்ற மனக்குழப்பம்....

நமக்கு இந்தியாலே ஒன்னும் இப்போ அமைய மாட்டேங்குது ....  எட்டு வருஷமா சொந்தமா முயற்சி பண்ணுறேன், செலவு தான் அதிகம் ஆகுது வரும்படி குறைவு தான்.

ஒன்னுலே வெற்றி. ஏழில் தோல்வி.  sharonsoftsys.com

இருக்கிற காசை வைத்து தான் வாழ்க்கை ஓடுது... எவ்வளவு காலம் தான் இந்த மாதிரி இருக்கிறது.

அஞ்சு வருஷம் அங்கிருந்தது... இன்னும் ஒரு அஞ்சு வருஷம் இருக்க ப்ளான் இருக்கு.

 மற்றபடி எப்போ வெளிநாட்டில் இருந்தாலும்.... எனக்கு ராமராஜன் பாட்டு தான் மனசிலே ஓடுது...  ரூவாய் ரூவாய் தான், டாலர் டாலர் தான். திருப்பூர்லே பனியன் கம்பெனி வச்சி கடைசி காலத்திலே செட்டில் ஆகணும்... பெங்களூர் சொத்தை கட்டி மேய்க்கிறது கட்டுபடி ஆகாது.... எதோ சொல்லனும்னு தோணிச்சு...

உங்களுக்கு கஷ்டம் வைக்க எனக்கு இஷ்டமில்லை.

உதவுறது உங்க இஷ்டம்...  என் கஷ்டம் தீர்ந்தால் நலம்.

Sunday, June 14, 2015

மனைவி

சில சமயங்களில் மனைவி என்பவரை சிலர் பிடிக்காமல் கல்யாணம் கட்டுகிறார்கள். எப்படியோ வாழ்க்கை ஓடுகிறது...

சில நாட்களோ, மாதங்களோ, வருடங்களோ கழித்து சில விசயங்களில் பிடித்து தான் போகிறது. வாழ்க்கை என்ற வட்டம் வெறுமை இல்லாமல் கழிகிறது.

தூங்காத விழிகள் ரெண்டு... தூங்காத கண் நின்று ஒன்று... 

துணை ஒன்று நின்று தாங்காத மனம் இங்கு ஏது?

மனைவி ஒரு வரம் என்பதை கவிஞர் எப்படி ரசித்து எழுதியிருக்கார்?

கடவுள் வேண்டியிருக்கிறார், அதனால் தான் குழந்தைகள் கடவுளின் ஆசையை நிறைவேற்றுகின்றன.
வேலை இல்லாமல் இருப்பது மாதிரி ஒரு கொடுமையான வேலை வேறு ஒன்றும் இல்லை.
செய்யும் வேலைக்கு, பொங்கல் வேண்டுமா என்று முதுகில் பொங்கல் வைத்திருப்பார் மனைவி!

200 கொடுத்தா ஆப்பில் ஜூஸ், 500 கொடுத்தா பாயாசமா... தங்கவேல் வசனம் ஒரு வாழ்க்கை பாடம்.
 
என் மனைவியின் அக்கா  பையன் தமிழில் 80 மார்க் பத்தாவதில் எடுத்தவன், பிரெஞ்சில் 196 வாங்கியுள்ளான். என் குழந்தைகளும் கன்னடா படித்தவர்கள் இப்போது பிரெஞ்ச் படிக்கிறார்கள்.

மாப்பிள்ளை தேடும் சமயம்,சுமாராக இருந்தாலும் பரவாயில்லை, அமெரிக்காவில் இருக்கும் மாப்பிள்ளை என்றால் பெண்கள் அவர்களையே ஓகே செய்கிறார்கள்.

அமெரிக்காவில் எல்லாம் சந்தோசம் என்ற மனக்கணக்கு தான்.

அமெரிக்காவில் குறை ஒன்று சொல்லாமல் வீட்டு வேலைகள் அனைத்தும் செய்கிறார்கள்.

இந்தியா வந்தவுடன், வீடு வேலைக்கு ஆள்.. அயர்ன் பண்ண ஆள் என்று லிஸ்ட் நீண்டுக்கொண்டு போகிறது. பேன்கள் துடைக்க வேலை ஆட்கள் தனி சார்ஜ் வாங்குறாங்க.