Showing posts with label மழை. Show all posts
Showing posts with label மழை. Show all posts

Friday, October 07, 2011

மழை

மழை மேகம் வந்து நிற்க
மௌனங்கள்  களைகின்றன
சட சடவென்று மனதும் திகன்றிட
உன்னருகில்  நான் இருக்க
கவிதை வரைந்தேன் உன் முதுகில்
சிணுங்கினாய் என்ன திரும்பி பார்த்து
உன் முந்தானை என் முகத்தை வருட
அலாரம்!
அணைத்துவிட்டு... 
மீண்டும் பழைய ஞாபகங்களில் திளைக்க
நாளொன்று போகுமே!     

Friday, August 29, 2008

திருக்குறள், மழை

பெய்யன பெய்யும் மழை என்று சொல்லும் திருக்குறள், எனக்கு பிடித்தது!

தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை

சொல்வதற்கு கஷ்டம் இது.

Monday, August 18, 2008

மழை - திருமூலர்

திருமூலர் ::
இங்குநின் றான்அங்கு நின்றனன் எங்குளன்
பொங்கிநின் றான்புவ னாபதி புண்ணியன்
கங்குல்நின் றான்கதிர் மாமதி ஞாயிறு
எங்குநின் றான்மழை போல்இறை தானே.

(திருமந்திரம் :: ஒன்பதாம் தந்திரம்)

மழை

நெல்லுக்கிரைத்த நீர்வாய்க்கால் வழியோடி
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம்- தொல்லுலகில்
நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு
எல்லோர்க்கும் பெய்யும் மழை
(மூதுரை)