கவிதைக்கு ஒரு கதை எழுத, உயிரோடையில் ஒரு போட்டி இருக்கு. கலந்து கொள்கிறேன். கொஞ்சம் அடல்டான டாபிக்.
ஏற்பாடு செய்யும் நண்பருக்கே
விருந்தாவாள்
விலை மகள்
இடமும், பணமும் என
எல்லாமும் ஏற்கும் புரவலரோ
ஓடிப்போன
தன் மனைவியின்
உடைகளை, நகைகளை
விலை மகளுக்கு அணிவித்து
நாற்காலியில் அமரச்செய்து
விலகி உட்கார்ந்து
பார்த்து ரசித்து
விக்கித்து அழுவதோடு சரி.
- ச.முத்துவேல்
********************
அன்று காலையில் தான் அது நிகழ்ந்தது. மன நோய் மருத்துவர், டாக்டர் மகேந்திரன் சொல்லியபடி ஒரு பெண் மகேஷின் மனைவி போலவே, கல்யாண பட்டு புடவை சேலை நகை அணித்து, வந்திருந்தாள். அவள் யாரென்பது முக்கியமில்லை. அவள் வாங்கும் சம்பளத்திற்கு அவள் உடல் ஒரு நாள் காரியத்திற்கு பயன்படுகிறது!
ஆறு ஆண்டுகளாக புத்தி பேதலித்த அவனுக்கு, பல வகை மாந்த்ரீக தந்திர மந்திர ட்ரீட்மென்ட் எல்லாம் கொடுத்து, அவர்கள் கடைசியில் சென்றடைந்தது
டாக்டர் மகேந்திரன் நடத்தும் ஆரோக்யாலையா க்ளினிக்.
மகேஷ் அங்கு சென்று சேர காரணம், அவனுக்காக பார்த்து பார்த்து தேடி தேடி, பிடித்தவள் அருணா. கல்யாணம் நடந்த அடுத்த நாள் அவள் படித்த பாலிடெக்னிக் மாஷ்டேரோடு ஓடிவிட்டாள்!
***
நடந்த கல்யாணம் பார்த்து ஊரே மெச்சியது.
மகேஷின் அப்பா பரமசிவம், பட்டாசு கடை நடத்தும் கடை ஓனர்
. அவரின் கடை பிரபல காக்கா ப்ரெண்ட் பட்டாசு பேக்டரி ஏஜன்சி தான் எடுத்திருந்தது! கோவை முழுதும் பல கடைகளுக்கு சப்பளை அவர் தான். திருப்பூரில் வீடு. தினம் ஒரு மணி நேரம் ஒரு வழி பயணம்! சிறுக சிறுக சேர்த்து பெரிய ஆள் ஆனவர்! அவரின் ஒரே செல்ல மகன் மகேஷ்.
மகேஷ் ஒரு தனியார் கல்லூரியில் மெக்கானிக்கல் எஞ்சினீரிங் முடித்து விட்டு, ஒரு பம்ப் செட் தயாரிப்பு நிறுவனம் வைத்திருந்தான். நல்ல படிப்பு சாப்ட்வேர் கம்பெனிகளில் சேர வாய்ப்பு வந்திருந்தாலும், அவன் அப்பா மாதிரி தொழில் செய்யவே விருப்பபட்டான்! நல்ல மார்க் பெற்று வெளிநாடு செல்ல வாய்ப்புகள் இருந்தும், அவர் தொழில் நடத்தவே நாடினான்!
ஐந்து வருடங்களில் எந்தவித கூடாநட்பு இல்லாமல் தொழிலில் முன்னேறி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நிலைக்கு வந்தான்.
பரமசிவம் ஒரு நாள் அவனிடம், "மகனே, ஒரு நல்ல ஜாதகம் வந்திருக்கு,
நம்ம பட்டாசு பேக்டரிகாரர் மகள் தான்,
ஒரே ஜாதி..
உறவும் கூட... பொன்னும் அழகா இருக்காள், டிப்ளோமா படிச்சிருக்கா, மெக்கானிக்கல் தானாம்..
என்ன சொல்றே?" என்று கேட்டார். அருணாவின் போட்டோவை கையில் வாங்கிய மகேஷ், அவள் முகத்தை பார்த்தும், மெய் மறந்தான்.
"நம்ம ஆளுங்கலாப்பா?" என்று கேட்க, அவன் அம்மா உரையாடலில் சேர்ந்துக்கொண்டார்.... "ஆமாண்டா செல்லம், பிடிச்சிருச்சு போல? அப்பா கூட பொண்ணு நேர்லே பார்த்திருக்கார். நீ ஒ.கே. சொன்னால் நாளைக்கே, சிவகாசி போய் முடிவு பண்ணிடலாம்... " மகேஷ் புன்முறுவல் பூத்தான்!
சிவகாசியில் அவர்களுக்கு பெரிய வீடு! அருணாவும் அமைதியாக காணப்பட்டாள். அவளும் வீட்டிற்கு ஒரே பெண் தான். அவள் தவிர ஒரு அண்ணன். இன்னும் கல்யாணம் ஆகவில்லை. அன்றே சிம்பிளாக நிச்சயம்! தாம்பூலம் மாற்றிக்கொண்டார்கள். மகேஷ் அருணாவோடு பேசவேயில்லை. அருணாவின் கண்களில் வழிந்த கண்ணீரை ஆனந்தக்கண்ணீராக நினைத்துக்கொண்டார்கள்.
கல்யாணம் ஒரு மாதம் கழித்து நடந்தது. வெகு விமரிசை. ஆளும் கட்சி ஆட்கள், மந்திரிகள் என ஒரே அமர்க்களம். அறுசுவை விருந்தால் அமளி துமளியானது!
அன்றிரவு சிவகாசி முதலிரவு. பால் செம்பு எடுத்துக்கொண்டு அலங்கரிக்கப்பட்ட ரூம் உள்ளே வந்தாள் அருணா. எல்லா புது மாப்பிள்ளைகள் போல மகேஷும், வெகு ஆர்வமோடு காத்திருந்தான். அவள் வந்து நமஸ்கரித்துவிட்டு, கட்டிலில் ஓரமாக போய் படுத்துக்கொண்டாள். "இன்னைக்கு ஒன்னும் வேண்டாங்க, உடம்பு சரியில்லே.." என்றவாறு போர்வையை போர்த்திக்கொண்டாள்.
மனம் புழுங்கியபடி, லைட்டை ஆப் செய்துவிட்டு மகேஷ் மோட்டுவளையை பார்த்துக்கொண்டு தூங்க முயற்சிதான். மல்லிகை வாசம், புது பெண் அருகில். அவன் என்ன செய்வான் பாவம்! அவன் தூங்குவதற்கு விடியலுக்கும் சரியாக இருந்தது.
கனவில் அருணாவோடு, பணியில் டுயட் ஆடிக்கொண்டு இருந்தவனை... யாரோ உலுக்குவது போல இருந்தது. "என்ன என்ன என்று எழுந்தான்". அவன் அம்மா தான் நின்றுகொண்டு இறந்தார்கள். "மகேஷ் எங்கேடா அருணா, காணோம்? ". முகத்தில் கலவரம். வாட்சை பார்த்தான் மணி எட்டு. வெய்யில் சுல்லேன்று அடித்துக்கொண்டு இருந்தது.
எல்லோரும் தேடினார்கள், பயம் பிடித்துக்கொண்டது. சிவகாசி பஸ் ஸ்டேன்ட் என்று எல்லா இடங்களும், கிணறுகளும் தேட ஆரம்பித்தார்கள். ஒரே கலவரம்! அருணா கிடைக்கவில்லை. வீட்டில் ஆளுக்கு ஆள் கசமுசாவென்று பேசிக்கொண்டு இருந்தார்கள். பரமசிவம் தலையில் இடி விழுந்தது போல உட்கார்ந்திருந்தார்.
மச்சான் அவனிடம் வந்து "என்ன மாப்பிள்ளை தங்கை கிட்டே நல்ல தானே நடந்துகிட்டீங்க?" என்றவாறு முறைத்துக்கொண்டு நின்றான்! அவனை தனியே அழைத்து சென்றார் அருணாவின் அப்பா. வாயில் தவளை வைத்துக்கொண்டு அழுதுக்கொண்டு இருந்தார் "என்ன பாவம் செய்தேனோ, இந்த மாதிரி ஒரு பொட்டையை பெக்க.."...
அந்த சமயம் அருணாவின் தோழி வந்து சொன்னாள், "சென்னைக்கு போற ஆறு மணி பஸ்ஸிலே பாலிடெக்னிக் மணி மாஷ்டரோடு அருணா போறதை, யாரோ பாத்தாக சொனாங்க.." என்றாள். "இப்படி ஆகிபோச்சே ..." என்று மயங்கி விழுந்தார் அருணாவின் அம்மா.
சென்னையிலிருந்து போன், அங்கு அருணாவை மயிலாப்பூரில் பார்த்ததாக. தேட ஆள் அனுப்பினார்கள்.
வீட்டிலிருந்து எப்படி கிளம்பி போயிருப்பாள். யாருக்கும் ஒன்றும் புரியவில்லை.
மகேஷுக்கு பேயடித்தது போல இருந்தது. யாரும் ஒன்றும் பேசவில்லை. அவர்கள் அனைவரும் வண்டி ஏறி கோவைக்கு திரும்பிவிட்டார்கள். கிளம்பும் போது மகேஷ், மாமனாரிடம் " அருணா ஏன் எப்படி செஞ்சகிறதா, ஒரு லெட்டர் போட சொல்லுங்க!" என்றான். அவனால் ஆசைப்பட்ட மனைவியை அடைய முடியவில்லை என்ற வருத்தம்! ஊரில் மகா கேவலம் வேறு.
பல நாட்கள் பேக்டரிக்கு அவன் செல்லவில்லை. சில வாரம் கழித்து ஒரு நாள் சென்றான். இரவு திரும்பும் போது , பை பாஸ் ரோட்டில் அவன் சென்ற பைக்கை ஒரு லாரி இடித்து, நினைவிழந்தான்.
ஆஸ்பத்திரியில் முழித்த அவன்... "அருணாவை பார்க்கணும்... அருணாவை பார்க்கணும்... என்றவாறே " இருந்தான் மகேஷ். "இந்தாங்க சேலை, இந்தாங்க நகை... அவளுக்கு போட்டு பார்க்கணும்.." கதறினான்... அவன் கையில் அவன் ஆசை ஆசையாய் வாங்கி வைத்திருந்த சேலைகளும், நகைகளும்...சரியான மனநிலை பாதிப்பு. எவ்வளவோ ட்ரீட்மென்ட் செய்தார்கள். ஒன்றும் சரியாகவில்லை.
கடைசியில் அவர்கள் சென்று காட்டியது
ஆரோக்யாலையா க்ளினிக் டாக்டர் மகேந்திரன்.
***
அவனுக்கு வைத்தியம் ஆரம்பித்தார்கள். ஷாக் ட்ரீட்மென்ட் என்று பேசிக்கொண்டார்கள். சரியானால் சரி என்று இருந்தனர் பரமசிவம் தம்பதியினர்.
தினம் ஒரு பெண் வருவாள். அவள் ரூமுக்கு அலைத்துசெல்லப்படுவாள். மகேஷ் எங்கேயோ வெறித்தவாறு இருப்பான். அவன் சேலை, நகைகளை கொடுப்பான். அவனும் பார்ப்பான். பிறகு முகத்தை திருப்பிகொள்வான்! கதற ஆரம்பித்து விடுவான் "அருணாவை பார்க்கணும்..."
ஒரு நாள், ஒரு பெண் வந்தாள். அவளைப்பார்த்தனும் மகேஷுக்கு அருணாவை போலவே இருந்தது. "நீ சிவகாசி அருணா தானே?" அவளைப்பிடித்து உலுக்கினான். "இல்லைங்க... நான் சுபா ... கரூர்...தொழிலுக்கு இங்கே வந்தேங்க!" என்றாள். அவள் கண்களில் மிரட்சி ... பயம்... "இல்லே இல்லே" நீ அருணா தான், என்னை ஏண்டி விட்டுப்போனே? ஏன். ஏன்..? " அவளை அடிக்க ஆரம்பித்தான்... "ஐயோ ஐயோ" என்ற கதறல் கேட்டு ஆஸ்பிடல் ஊழியர்கள், கதவை உடைத்துக்கொண்டு வந்து அவளை விடுவித்தார்கள். இன்ஜெக்சன் போட்டு படுக்க வைத்தார்கள்...
சுபா என வந்தவள் துணியை வாரிசுருட்டிக்கொண்டு வெளியில் ஓடிவிட்டாள்... அவள் போகும் போது கூட வந்த ஒரு தாடிக்காரனிடம் " என்ன மாஸ்டர், எனக்கு தாலி கட்டியவின் கிட்டேயே போய் அனுப்பி வச்சுட்டீங்க... நல்ல வேலை அவன் மெண்டல்..." என்றவாறே சிரித்துக்கொண்டு சென்றது அவன் காதில் விழவில்லை!
மயக்கம் தெளிந்து எழுந்த மகேஷ் " நான் எங்கே இருக்கேன்... என்ன ஆச்சு..." திரு திரு வென்று முழித்தான். ஷாக் ட்ரீட்மென்ட் வேலை செய்தபடியால்... சரியாகிவிட்டான்.
அப்பா அம்மா வந்திருந்தார்கள். "நான் அருணாவை பார்த்தேன்... அவ நிலைமை இப்போ சரியில்லே போல... விருப்பமில்லா கல்யாணம்... என்ன செய்யறது..." என்று தெளிவாக பேசினான்.
"கண்ணே மகேஷ், நல்லாயிட்டியா மகனே..." அம்மா, அப்பா அவனை கட்டிப்பிடித்து சந்தோசமாக அழ ஆரம்பித்தார்கள்.
"அப்பா அம்மா... நான் சரியாயிட்டேன்..." என்று கதற ஆரம்பித்தான் மகேஷ்!
***
இது என் சொந்த கற்பனை. இதில் வரும் கேரக்டர்கள், இடங்கள், சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே!