Showing posts with label காமம். Show all posts
Showing posts with label காமம். Show all posts

Sunday, August 03, 2008

கொங்குதேர் வாழ்க்கை (நான் கடவுள்)

குறிஞ்சி - தலைவன் கூற்று

கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல்
செறியெயிற் றரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீயறியும் பூவே.

-இறையனார். (நான் கடவுள்)

உங்களுக்கு தருமி பாடல் ஞாபகம் வந்திருக்குமே? (சிவாஜி திருவிளையாடல் படம்).

Friday, July 18, 2008

காமம்

காமம் எனக்கு உணவு
கலவியில் தொடங்கியது
வேதாளங்கள் சாத்திரங்கள்
ஓதிய பிறகு
தேடித் தேடி உண்ணும்
ஆவல் எனக்கில்லை
தேடலும், தாகமும்
நீ தானே
உனக்கான தாகம்
எனக்குள்ளே எப்போதும்
மரணம் எட்டும் வரை