என்னைப்பற்றி.... சுவாரசியாமாயிருக்க... பார்க்கலாம்... விஜயசங்கர். Read about my thoughts in Tamil & English (some may call it ramblings).
Monday, June 28, 2010
ஜெயமோகன் சந்திப்பு பற்றி
இந்த பதிவை முதலில் படியுங்கள்.... ஜெயமோகன் சந்திப்பு பற்றி
எழுதிய மணிகண்டன் அவர்களுக்கு ஒரு பதில்.
இதை ஒரு அறிமுக, வரவேற்பு , சந்திப்பு கூட்டமாக தான் நான் நினைத்து ஜெயமோகனிடம் கேட்டு, எந்த ஒரு பார்மட்டும் ( நோக்கு? ) இல்லாமல் நடத்தினோம். ( இணையத்தில் அவரோடு தொடர்புடைய நண்பர்களை அழைத்தேன், சிலர் அவராக வந்து ஒட்டிகொண்டார்கள் - ஜெயமோகனிடம் இடம் கேட்டு ) அடுத்த முறை, யார் இந்த மாதிரி கூட்டம் நடத்த முன் வருகிறார்களோ, அவர்களிடம் உங்கள் அபிலாசையை தெரிவியுங்கள். அல்லது அடுத்த முறை அவர் இங்கு வரும் போது, நீங்களே முன் நின்று நடத்துங்கள்.
முதலில் உங்களை பற்றி ஒருவரிடமும் அறிமுகப்படுத்திக்கொள்ள முயற்சி எடுக்கவில்லை. இன்றோவேர்டாக இருக்கலாம், என்று நான் நினைத்தேன்.
எவ்வளவு அமைதியாக இருந்து விட்டு, கேவலமாக ஒரு பதிவு வேறு போட்டு, வேதனை பட செய்கிறீர்கள் !
ஜெயமோகன் அவராக தான் சினிமாவை முன் வைத்து பேசினார். சில சமயம் இலக்கியம் சினிமாவினால் அடிபட்டு போகும்! இது தான் கோவையிலும் நடந்துள்ளது.
Tuesday, August 04, 2009
நான் எழுதிய கடிதமும் ஜெயமோகன் பதிலும்
***
அன்புள்ள ஜெயமோகன்
நான் சென்ற ஜூன் 20 200 அன்று சுந்தர ராமசாமியுடன் நடத்தபப்ட்ட விரிவான பேட்டியை டிடியில் பார்த்தேன்
நான் ரசித்த சிறு துளிகள்...
- எழுத்தாளனுக்கு வாசிப்பனுபவம் மிக முக்கியம்.
- எழுதுங்கள், எழுதிக்கொண்டே இருங்கள், வேண்டுமென்றால் கிழித்துப்போடுங்கள் … எழுத வரும்…
அவருடைய எழுத்துக்கள் இணையத்தில் அனைத்தும் உள்ளனவா?
மிகவும் நேசித்துவிட்டு, எதற்காக இந்தியாவை விட்டு விட்டு அமெரிக்க வாழ்க்கை வாழ்ந்தார்? ( நான் அங்கு கிட்டத்தட்ட ஆறு வருடம் வாழ்ந்த வாழ்க்கை, பணத்தை தவிர ( திறமைக்கு கூலி ) வேறு எதுவும் பிடிக்கவில்லை.
சுஜாதாவை விட இவரின் பேச்சு ( தேவையானவை ) மட்டும் மேலாக இருந்ததாக என எனக்கு தோன்றியது. நீங்கள் அவரிடம் பழகியுள்ளீர்கள், மணிக்கணக்கில் பேசுவது என்பது, மிகுந்த படிப்பு ஆர்வம் இருப்பவர்க்கு விருந்தாகும்..
–
Regards
விஜயஷங்கர்
பெங்களூரு
அன்புள்ள விஜயசங்கர்
சுந்தர ராமசாமியுடன் நான் நெருக்கமாக பழகியிருக்கிறேன். அதையெல்லாம் அவரைப்பறி நான் எழுதிய 'சுரா-நினைவின் நதியில்' என்ற நூலில் பார்க்கலாம். அது உயிர்மை வெளியீடாக வந்துள்ளது.
அந்த பேட்டியை நான் பார்க்கவில்லை. அதைப்பற்றி நீங்கள் காலச்சுவடு நிறுவனத்தில் விசாரித்து பார்க்கலாம்.
ஜெ.
***நன்றி ஜெயமோகன். அமெரிக்காவை இந்த விசிட்டில் என்ஜாய் பண்ணுங்க!
நான் அனுப்பியே மெயிலுக்கு காலச்சுவடு இதுவரை பதில் தரவில்லை. கடைசியாக அவர்களை ராஜா மார்த்தாண்டன் இருந்த போது அழைத்தது! மிக நல்ல எழுத்தாளர் ஜெயமோகன் மூலம் அறிமுகம் ஆனது, இப்போ இல்லே.
--
Regards
Vijayashankar