Showing posts with label சுஜாதா. Show all posts
Showing posts with label சுஜாதா. Show all posts

Monday, June 10, 2013

எழுத்தாளர் சுஜாதா அவர்களின் பத்துக் கட்டளைகள்

எழுத்தாளர் சுஜாதா அவர்களின் பத்துக் கட்டளைகள்.

*****

1. ஒன்றின் மேல் நம்பிக்கை வேண்டும், ஏதாவது ஒன்று. உதாரணம் கடவுள், இயற்கை, உழைப்பு, வெற்றி இப்படி ஏதாவது… நம்பிக்கை நங்கூரம் போல. கேள்வி கேட்காத நம்பிக்கை. கேள்வி கேட்பது சிலவேளை இம்சை. நவீன விஞ்ஞானம் அதிகப்படியாகக் கேள்வி கேட்டு இப்போது தவித்துக் கொண்டிருக்கிறது.

2. அப்பா, அம்மா இரண்டு பேரும் வேலை சொல்வது பல சமயங்களில் கடுப்பாக இருக்கும். ஒருமாறுதலுக்கு அவர்கள் சொல்வதைச் செய்து பாருங்கள். அவர்கள் கேட்பது உங்களால் செய்யக் கூடியதாகவே இருக்கும். பொடிநடையாகப் போய் நூறு கிராம் காப்பி பவுடர் (அ) ரேஷன் கார்டு புதுப்பித்தல் இப்படிதான் இருக்கும்.

3. மூன்று மணிக்குத் துவங்கும் மாட்னி போகாதீர்கள். க்ளாஸ் கட்பண்ண வேண்டி வரும். தலைவலி வரும். காசு விரயம். வீட்டுக்குப் போனதும் பொய் சொல்வதற்கு ரொம்ப ஞாபக சக்தி வேண்டும். இந்த உபத்திரத்துக்கு உண்மையைச் சொல்லிவிடுவது சுலபம். இளமைக்காலம், ஒளிக் கீற்றைப் போல் மிகவும் குறைந்த காலம், அதை க்யூ வரிசைகளிலும் குறைபட்ட தலைவர்களுக்காகவும் விரயம் செய்யாதீர்கள்.

4. நான்கு பக்கமாவது ஒரு நாளைக்குப் பொது விஷயங்களைப் படியுங்கள். பொது விஷயங்கள் என்றால் கதை, சினிமா, காதல் இல்லாதவை. உதாரணம் - யோக்கியமான செய்தித்தாள், மற்ற பேரைப் பற்றிக் கவலைப்படும் பத்திரிகைகள் அல்லது லைப்ரரியிருந்து ஒரு புத்தகம்.

5. ஐந்து ரூபாய் சம்பாதித்துப் பாருங்கள். சொந்தமாக உங்கள் உழைப்பில், முயற்சியில், யோக்கியமாக, மனச்சாட்சி உறுத்தாமல். அடுத்த முறை அப்பாவிடம் ஆயிரம் ரூபாய்க்கு ஷர்ட், சுடிதார் கேட்கும் முன்.

6. இந்தச் தகவல்களை படிக்கும் நிலைமை பெற்ற நீங்கள் இந்திய சனத்தொகையின் மேல்தட்டு ஆறு சதவிகித மக்களில் ஒருவர். அன்றாடம் சோற்றுக்காக அலையும், வசதியில்லாத கோடிக்கணக்கான மக்களைத் தினம் ஒரு முறை எண்ணிப் பாருங்கள்.

7. வாரத்தின் ஏழாவது தினமான ஞாயிறன்று என்ன செய்தாலும் காதல் பிஸினஸ் வேண்டாம். காதலுக்கு ரொம்பச் செலவாகும். மனம், வாக்கு, காயம்(உடல்), எல்லாவற்றையும் ஆக்கிரமிக்கும் தீ அது. பொய் நிறையச் சொல்ல வேண்டும். வினோதமான இடங்களில் காத்திருக்க வேண்டும். இந்த வயதில் நாசமாய்ப்போன படிப்புத்தான் உங்களுக்கு முக்கியம்.

குறிப்பு: பெண்களை சைட் அடிப்பதும், கலாட்டா பண்ணுவதும், அவர்களுக்கு கர்சீப் முதலியன ரோடிலிருந்து பொறுக்கிக் கொடுப்பதும், உபத்திரமில்லாத கவிதைகள் எழுதுவதும், காதலோடு சேர்த்தியில்லை.

8. எட்டு முறை மைதானத்தை சுற்றி ஓடினால் எந்தச் சீதோஷ்ணமாக இருந்தாலும் நெற்றி வியர்வை அரும்பும். எதாவது தேகப் பயிற்சி செய்யவும். கடிகாரத்துக்குப் சாவி கொடுப்பதோ சீட்டாடுவதோ தேகப் பயிற்சி ஆகாது. எதையாவது தூக்குங்கள், எதையாவது வீசி எறியுங்கள். உங்கள் உடலில் ஊறும் உற்சாகத்துக்கு ஓர் ஆரோக்கியமான வடிகால் தேவை. ராத்திரி சரியாக தூக்கம் வரும். கன்னா பின்னா எண்ணங்கள் தவிர்க்கப்படும். ஒழுங்காக சாப்பிடத்தோன்றும். பொதுவாகவே சந்தோஷமாக இருக்கும்.

9. ஒன்பது மணிக்குள் வீட்டுக்கு வரவும். மிஞ்சிப் போனால் ஒன்பது மணி இரண்டு நிமிடம். ஒரு மணி நேரம் பாடம் அல்லது புத்தகம் படிக்கலாம்.

10. படுக்கப் போகும் முன் பத்து நிமிஷமாவது அம்மா, அப்பா, அண்ணண், தங்கை யாருடனாவது பேசவும் (பேசுவது என்று சொன்னவுடன் காதலியுடன் என்று நினைக்க வேண்டாம், நான் சொன்னது குடும்பத்தினருடன் மட்டும்). ஏதாவது ஒரு அறுவை ஜோக் அல்லது காலேஜில் நடந்த நிகழ்வுகள். சப்ஜெக்ட் முக்கியமில்லை. பேசுவது தான்.

இந்த பத்தில் தினம் ஒன்று என்று முயற்சி செய்து தான் பாருங்களேன்.

Saturday, January 03, 2009

பட்டுக்கோட்டை பிரபாகர் மற்றும் பலர்

திரு என்.சொக்கன் அவர்களின் வலைப்பூவை படித்துக்கொண்டு இருந்தேன்.

எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகருக்கு சாஹித்ய அகாதமி விருது

பட்டுக்கோட்டை பிரபாகர் ஒரு மறக்க முடியாத கேரக்டர்.

நான் என் நண்பர்கள், சரவணன் மற்றும் சுந்தரவடிவேலு (திருப்பூர்) தூறல் என்ற கை எழுத்து பத்திரிக்கை நடத்திய காலத்தில், பட்டுக்கோட்டை பிரபாகர் மற்றும் சுபா கதைகள் மீண்டும் மீண்டும் படிப்போம். வர்ணனைகள் அருமையாக இருக்கும்... சில இப்போது தான் புரியும் - இந்த வயதில்... ராஜேஷ் குமாரும் எங்களை ஆக்கிரமித்து கொண்டார். சுஜாதா கதைகள் ஒரு லெவல் மேலே. பல முறை படிக்க அது.

எங்கள் வீடு அருகில் ஒருவர் லெண்டிங் லைப்ரரி வைத்திருந்தார். 25 பைசா சார்ஜ் ஒரு நாளைக்கு கொடுத்தால், ஒரு புத்தகம். ஹாயாக படிக்கலாம். மூவரும், மூன்று புத்தகங்கள் (80 பக்கம் இருக்குமா ஒரு நாவல்?) ஒரு நாளில் முடிப்போம். லீவு சமயத்தில், வீட்டில் அப்பா பனியன் தொழிலுக்கு உதவி செய்யும் சமயம் போக, வாரம் இரண்டு சினிமா படம், பிறகு லைப்ரரி மாத்திரம் கதி.. அங்கேயும் நாவல்கள் தான். அதுவும் பாட்டி வீட்டிற்கு (ஒண்டிப்புதூர், கோவை) சென்றால், நான்கைந்து புக் படித்து விடுவேன். கண்ணாடி போட்டது அப்படி தான்.

ஆங்கில மீடியமில் படித்தாலும், தமிழ் மீது ஒரு லவ். மூன்றாம் வகுப்பு வரை ஹிந்திதான் செகண்ட் லேங்குவேஜ். ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் என்ற சமயம், அப்பா என்னை கட்டாயம் தமிழ் படிக்க வைத்தார். லீவில் விஜயா மிஸ் பாடம் எடுத்தார். டபுள் பிரமோசன் (3 -> 5 ) வேண்டாம் என்ற சமயம் அது. ஆறாம் வகுப்பு முதல், பண்ணிரெண்டாம் வகுப்பு வரை, தொடர்ந்து வருடம் ஒரு முறையாவது தமிழில் நாடகம் எழுதி இயக்கி நடிக்கும் பாக்கியம். எமர்றேன்சியா மிஸ் (பயலாஜி) அமெரிக்க சென்று திரும்பிய பின் ஒரு முறை பார்த்த பொது, நான் போட்ட "பணத்தின் லீலைகள்" என்ற டிராமா பற்றி பேசினார்.... 1999, பதினைந்து வருடத்திற்கு பிறகு. அதில் குடிகாரனாக நடித்த கோபாலகிருஷ்ணன் இன்று கோவையில் பிரபல லாயர்.

1986 பி.எஸ்.ஜி. சென்ற பிறகு (நல்ல வேலை கிண்டிக்கு செல்ல வில்லை, சீட்டு கிடைத்தும்) ஹாஸ்டல் வாழ்க்கை அனுபவம் இல்லாத மாணவப்பருவம். தமிழ் மீது சிறிது தான் ஆக்கம் செலுத்த முனைந்தது. ஸ்கிட்சுடன் நின்றது. தமிழ் டமில் ஆனது.

தமிழ் மன்றம் தான் சில சமயம் தமிழ் மீது உள்ள டச்சை தொடர வைத்தது. 1987 சுஜாதா வந்து பேசினார். பர்ஸ்ட் க்ளாஸ் ட்ரெயின் டிக்கட் மற்றும் ஆயிரம் ருபாய் நன்கொடை. மறக்க முடியாத நாள்...

ஹைதராபாத் சென்ற பிறகு, செகந்தராபாத் ரயில்வே ஸ்டேசன் அருகில் தமிழ் புக் வாங்குவேன். குமுதம் மற்றும் ஆனந்த விகடன். திருப்பூரில் அப்பா விகடன் மட்டும் தான் அல்லவ் செய்தார். குமுதம் சினிமா குப்பை என்பார். என் அப்பாவும் கோத்தகிரியில் நாடகம் போட்டவர் (வில்லன்) நடிகை ஜெயபாரதி வைத்து இயக்கினார். அங்கு மாரியம்மன் திருவிழா இன்றும் ஜோராக நடக்கிறது !

அமெரிக்காவிலும் நியூ யார்க் பக்கம், அல்லது நியூ ஜெர்சியில் தமிழ் புக் கிடைக்கும். சில முறை திவான் அவனுவில் (சிகாகோ) வாங்கியுள்ளேன். சிலிகான் வேலியில் கிடைக்கவில்லை. தேடவில்லை.

ஒரு நான்கைந்து வருடங்கள் தமிழ் படிப்பது நின்றது. 1999 மீண்டும் ஆரம்பம் ஆனது. ஊர் சென்று வருபவர்கள் யாரவது கொடுப்பார்கள். நாவல்கள் சில வைத்திருந்தேன்.

இப்போது புது வருட சபதமாக, தமிழ் வார மலர்கள் வாங்குவதில்லை.