கையில் இருந்த என் மோதிரம்,
பழைய நினைவுகளைச் சொல்லும் சின்னம்.
இளமையின் பாசம், சோம்பல் நிறைந்தது,
வயதின் வெறுமை, சந்தோசம் மறைந்தது.
கண்ணீர் ஊற்றும் தருணங்களில்,
இது என் கையில், என் கதையின் நிழல்.
உலகம் மாறும், நான் மாறி போக,
உறவுகள் சிதறி, மனம் உளைச்சல்.
இப்போது அடகு கடையில்
என்னுள் இருக்கும் ஒளி, நினைவில் நிற்கும்..
தங்கம் எப்போதும் மழுங்காது,
ஆனால் இது என் அடையாளம்,
No comments:
Post a Comment