Wednesday, November 18, 2009

அவசரகதி

அவசரகதி அந்த
ரயிலுக்கு இல்லை
இடம் கிடைத்தால் போதும்
முன்பதிவில்லாத பெட்டியில் 
கெஞ்சல்கள்
நல்ல மனது படைத்தவர்கள்
உதவி செய்ய
பொழுது விடிய
எப்படியோ ஊர் போய்
சேர்ந்தால்...
நடக்க வேண்டிய காரியம்
நன்றாகவே நடந்திருக்கும்!

மீண்டும் ஊரு திரும்ப
மீண்டும் ஒரு முறை
கெஞ்சல் ஆரம்பிக்கும்!

Image result for train station

4 comments:

  1. அருமை! நிதானம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? :-)

    ஒரு கவிதை போடுங்க சார்!

    ReplyDelete
  2. முன்னமே பார்த்தேன். பின்னூட்டம் போட்டேன் என்று எண்ணியிருந்தேன். மறந்து விட்டேன் போல இருக்கு.

    நல்ல கருத்து. கொஞ்சம் சொற்பிழை சரி செய்யுங்கள். போலவே இன்னும் செதுக்கலாம். தவறாக நினைக்காதீர்கள் விஜய். ஆனால், கவிதை சொல்ல வரும் பொருள் நல்லா இருக்கு. நிறைய வாசியுங்கள்; நிறைய எழுதவும் செய்யுங்கள் விஜய்.

    அனுஜன்யா

    ReplyDelete
  3. இரண்டு முறை பின்னூட்டம் போட்டும் ஏனொ வரவில்லை.

    நல்லா இருக்கு.

    அனுஜன்யா

    ReplyDelete
  4. நான் கூட ஒரு ஹைக்கூ போல ஒருமுறை எழுதியதாக நினைக்கிறேன்..
    "மிகவும் அவசரமாகக்
    காத்திருக்கிறோம்...
    ரயில் வருவதற்காக ...!
    நிதானமாகப் பயணிக்கிறோம்,
    ஜன்னலோரம் நகர்கிற
    காட்சிகளை ரசித்த வண்ணமே..."
    ஆனால் விஜய், உன்னுடைய கரு வேறு வகை.. நல்ல ரசனை..!

    ReplyDelete