Friday, July 21, 2006

ஏஷுவா

மகனின் சிறப்பு தோற்றம்
எப்படி இருக்கும்
என்று யுத நண்பன் கேட்க
மேற்கின்
கர்ப்ப அறைகளெங்கும்
மத்தாப்புத் தோரணங்கள்
மேகங்கள் இல்லாமல்

நட்சத்திரங்கள் அணிவகுப்பு
ஏஷுவா வரப்போகிறான்
கிழக்கின்
கர்ப்ப அறைகளில்தான்
கலாச்சாரக்
கதிரவன் பிறக்கிறான்
பயமெல்லாம்
ஜெருசேல மயானக்கரைகளில்
எப்போதும் கூட்டம்
பார்க்கின்றபோது
அங்கும்
செத்தே
பிறந்துவிடுவானோ
என்று
பதட்டமாய் இருக்கிறது
எனக்கு ஆயிரம் வருடங்கள் தவம்
பெத்லஹேமில் 
பிழைத்துவிடு ஏஷுவா!


 

No comments:

Post a Comment