வேலை பற்றி ஒரு பதிவு படித்தேன். சிங்கக்குட்டி என்பவர் எழுதியது. நிஜப்பெயர் தெரியலே.... நண்பர் ராஜு ட்விட்டர் மூலம் சொன்னார்!
நல்ல பதிவு!
என்னை பற்றி நானே இன்னொருவர் எழுத படித்த மாதிரி இருந்தது. ராஜு சொன்ன மாதிரி ஒருவர் மேனேஜர் லெவலுக்கு போய்விட்டால் - இரண்டு வருடம் அங்கேயே இருக்க ட்ரை பண்ண வேண்டும். சில சமயம் ( பல? ) ஒரு வருடத்திற்கு மேல், பிசினஸ்ஸை பொருத்து வைத்திருப்பார்கள்... காசு அதிகம் என்பதால் பெரிய சம்பளத்து ஆட்களை நீக்குவது தான் சீனியர்களின் ( அதிகம் காலம் ஒரு கம்பெனியில் இருந்தவர்கள்? ) மரபு. நேரம் வரும் பொது வேலை தானாக வரும். நானும் அதை தான் நம்புகிறேன்.
என்னை மாதிரி வேலை இல்லா சமயத்தில் சொந்தமாக எதாவது செய்ய ட்ரை பண்ணலாம். ( காசு குறைவாக இட்டு ) ஐடிலாக இருக்காமல் இருக்க உதவும்.
நாராயணமூர்த்தி சொன்ன மாதிரி - நம் வேலையை தான் விரும்ப வேண்டும். ஒரு கம்பெனியை விரும்பி, அதன் நிதி நிலைமை ( சத்யம் ஞாபகம் இருக்கும்! ) சரியில்லாவிட்டால்... கதி அதோ கதி தான்.
***
நண்பர் ஜவர்லால் சிக்ஸ் சிக்மா பற்றி அழகாக எழுதுகிறார். பொங்கல் சமயத்தில் ஹோசூரில் அவரை குடும்பம் சகிதம் சந்தித்தேன்....
இங்கே பாருங்கள்....
பெங்களூரில் அவர் ஒரு சிக்ஸ் சிக்மா கோர்ஸ் ஏற்பாடு செய்வார் என நம்புவோம்!